பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


3.3. கிரிக்கெட் ஆட்டம்

1. டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆட்டம்

கிரிக்கெட் பந்திற்குப் பதிலாக, டென்னிஸ் ஆட்டத்தில் ஆடப்படுகிற பந்தைப் பயன்படுத்தி, இந்த ஆட்டத்தை ஆட வேண்டும்.

குழுவிற்கு 11 பேர், ஒரு குழு பந்தெறியும் ஓவர்கள் 20. ஒரு ஓவருக்கு 6 எறிகள். (over)

கிரிக்கெட் ஆட்டம் போலவே, குழந்தைகளை ஆடச் செய்ய வேண்டும்.

2. வளையப் பந்தாட்டம் (Tenikoit)

வளையத்தைப் பிடிப்பதும் எறிவதும் ஆகிய இரண்டு முக்கியத் திறன்களையும், நன்குக் கற்றுக் கொள்ள, பயிற்றுவிக்கப் பல முறைகளை ஆசிரியர் கையாளலாம்.

உங்கள் கற்பனைக்கேற்ப அமைத்துக்கொண்டு, ஆடச் செய்யலாம்.

4. சிறுபரப்பு விளையாட்டுக்கள் (Small Area Games)

4.1 தொட்டால் தொடரும் (Free and Caught)

விளையாட இருப்பவர்களில் இருவரை, விரட்டுபவர்களாகத் (it) தேர்ந்தெடுக்க, மற்ற ஆட்டக்காரர்கள், மைதானம் முழுவதும், பரந்து நிற்க வேண்டும்