பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


தரையில் படுத்திருப்பவர் செய்ய வேண்டியது

a. கீழே தரையில் படுத்து, உயரமாகக் கால்களை உயர்த்தி, நின்று கொண்டிருப்பவரின் கால்களைப் பற்றிப் பிடித்திருக்கவும்.

b. நின்று கொண்டிருப்பவர் தரையை விட்டுக் கால்களை உயர்த்துவது போல, ஒரு துள்ளு துள்ளி (Spring Action) உயர்த்தி விடுதல்.

C. மேலே வந்தவரின் தலையானது, தன் கால்களில் இருப்பது போல வைத்துக்கொள்ளுதல்.

நின்று கொண்டிருப்பவர் செய்ய வேண்டியது

a. படுத்திருப்பவரின் தலை இருபுறமும் தன் கால்களை ஊன்றி, உயர்த்தியுள்ள கால்களைப் பிடித்திருத்தல்.

b. படுத்திருப்பவரின் கால்களை விரித்து, அதில் தலை வைத்து கீழாகக் கவிழ்ந்து விடுதல்.

C. கால்களுக்கு இடையே தலை இருக்குமாறும், பின்புறத்தசைகள் பக்கமாக இருப்பது போலவும் வைத்துக்கொண்டு, முன்னோக்கி எழும்புதல்.

5.3. ஒற்றைச் சக்கரவண்டி (Wheel Barrow)

இருவர் இந்த சாகசச் செயலில் பங்குபெற வேண்டும். கனம் அதிகம் இல்லாமல் (lighter) இலேசாக இருக்கும் ஒருவர், முதலில் நான்கு கால் பாய்சசலில் நிற்பது போல, முழங்கால்களிலும் இரண்டு கைகளையும் ஊன்றி உட்கார வேண்டும்.