பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


திருப்பி விட்டன. அதாவது, இந்த உடற்கல்வித் துறையில் தான் விருப்பத்திற்கு மாறான பல திருப்பங்கள் ஏற்பட்டன.

மக்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனைகள் மிகுதியாகப் போய், முதுகிலேறி அமர்ந்து கொண்டு, அழுத்திக் கொண்டு, முரண்டு பிடித்த காரணத்தால், உடல் பற்றிய உணர்வும், சற்றே இடம் மாறிப் போயின. தடம் மாறிப்போயின.

நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, சுகந்தரும் உடற்கல்வியை, ஒரு தேசியக் கொள்கையாக உருவாக்கிக் கொண்டு, செழுமையும், முழுமையும் பெறத்தக்க அளவில், முக்கியத்துவம் அளித்தனர், நமது நெடுநோக்குள்ள தலைவர்கள்.

போதுமான அறிவையும், தெளிவையும் அளிக்கிற பொதுக் கல்விக்கு இணையாக உடற்கல்வியும் வேண்டும் என்று அறிவார்ந்த மக்கள் விரும்பினள். குரல் கொடுத்தனர். உரிய இடத்தை வழங்க வேண்டும் என்று வேட்கையுடன், உற்சாகமாக ஈடுபட்டனர், பாடுபட்டனர்.

அதன் விளைவே, பள்ளிகளில், உடற்கல்விப் பாடத்திட்டம், கட்டாய உடற்கல்விப் பாடம் என்ற பெயரில், இடம் பெற்றன.