பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


கால்களை மட்டும் நடத்திக்கொண்டு வரவும். கைகளை இருந்த இடத்தை விட்டு நகர்த்தக் கூடாது.

2. இப்போது கால்களை நிலையாக வைத்துக் கொண்டு, கைகளால் முன்புறம் நோக்கி நடக்கவும்.

3. முழங்கால்களையும் முழங்கைகளையும் கடைசி வரை விரைப்பாக நிமிர்த்தியே வைத்திருக்க வேண்டும்.

முதலில் கால்களை பின்புறமாக நீட்டியிருக்கிற போது, முதுகானது நோக்கோடு போல நேராக விரைப்பாக இருக்க வேண்டும். கால்களை நகர்த்தும் போது கைகளை நகர்த்தக் கூடாது. கைகளால் நடக்கும் போது, கால்களை நகர்த்தாமல் வைத்திருக்க வேண்டும்.

இந்த நடை, உடல் நெகிழ்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.

9.16. மீன் துள்ளல் (FISH FLOP)

இந்த நடை, பின்புறம் உருளல் (Backward Roll) போல் தான அமைந்திருக்கிறது.