பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா



10.3. உடற்பயிற்சி இயக்கம்


(1) 1. கைகள் இரண்டையும் (நெஞ்சுக்கு) முன்புறமாக நீட்டி பிறகு மேலே உயர்த்தி, குதிகால் உயர கட்டை விரல்களில் நில்.

2. கைகள் இரண்டையும் பக்கவாட்டிற்குக் கொண்டு, வந்து கீழ் இறக்கி, குதிகால்கள் தரையில் பட நில்.

(2) 1. தலைக்கு மேலே கைகள் இரண்டையும் உயர்த்தி மடக்கு.

2. கைகளிரண்டையும் பக்கவாட்டிற்குக் கொண்டு வந்து, தலையைப் பின்புறமாக அழுத்தித் தள்ளு (Press)

3. கைகளை தலைக்கு மேலே உயர்த்தி மடக்கி தலையை நிமிர்த்து.