பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


(5) 1.கைகள் இரண்டையும் பக்கவாட்டில் விரித்து, இடது காலை பக்கவாட்டில் ஓரடி (Step) எடுத்து வைத்து நில்.

2.கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, இடது புறமாக இடுப்பை வளை.

3.கைகளை பக்கவாட்டிற்குக் கொண்டு வந்து, இடுப்பை நிமிர்த்தி நில்.

4.இயல்பாக நிமிாந்து நில்

(6)1.இடுப்பின் இருபுறமும் கைகளை வைத்து நில்

2.இடது முழங்காலை உயர்த்தி 14 முறை, நின்று கொண்டே குதிக்கவும்.

3.அதேபோல் வலது முழங்காலை இடுப்பளவு உயர்த்தி, 14 முறை செய்க.

4.இயல்பாக நிமிர்ந்து நில்