பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/241

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

239


கொடிகளை உயரவாக்கில் நிறுத்திப் பிடிக்கவும்.

3. முதல் எண்ணிக்கைக்குக் கொண்டு வரவும்.

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.

9. 1. இடது காலை ஓரடி இடப்புறமாக முன் பாதத்தில் ஊன்றி நின்று, சாய்ந்து நின்று (Lunge) கொடிகளை முன்புறமாகக் கொண்டு வந்து தலைக்கு மேற்புறமாய் உயர்த்தவும்.

2. கொடிகளை தலைக்கு பின்புறத்தில் மேலும் கீழுமாக ஆட்டி, குறுக்காக வைக்கவும்.

3. முதல் எண்ணிக்கைக்கு வரவும்.

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.

10. 1. துள்ளிக்குதித்து, கால்களை ஒரடி அகலமாக விரித்து வைத்து, தலைக்கு மேலே கொடிகளைக் குறுக்காக வைக்கவும். (Cross)

2. கொடிகளை முன்புறமாகத் தொடைக்கருகே கொண்டு வந்து, கால்களை சேர்த்து நிற்கவும்.

3. முதல் எண்ணிக்கைக்கு வரவும்.

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.