பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறுதடி அல்லது மரத்தினாலும் செய்யப்பட்டதாகவும் இருக்கலாம். இதன் நீளம் 4 அடி 1 அங்குலம் விட்டம் கொண்டது.

இது ஒரு கூட்டுப் பயிற்சிக்கான (Mass Drill) அமைப்பு கொண்டது என்பதால், கூட்டமாக வருகிற போது, எப்படி கொண்டு வரவேண்டும். பயிற்சி ஆரம்பத்தின் போது, எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பயிற்சி செய்கிற இடத்திற்கு வருவதற்கு முன்பாக நாலடிக் கம்பை செங்குத்தாக இருப்பது போல, இடது கையால் பிடித்துக் கொண்டு, அதை இடதுபுறத் தோளில் சார்த்தியவாறு கொண்டு வரவேண்டும்.

உரிய இடத்திற்கு வந்து நின்றதும், இரண்டு எண்ணிக்கைக் கணக்கில், நாலடிக்கம்பை ஆரம்ப நிலைக்குக் கொண்டு வரவேண்டும்.

எண்ணிக்கை 1 இடது கையிலுள் ள நாலடிக்கம்பை, வலதுகையாலும் பற்றிக் கொள்ள வேண்டும். வலது உள்ளங்கையானது, இடது புறத்தோளினைப் பார்ப்பது போல் இருக்க வேண்டும்.