பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

41


வட்டத்திற்கு வெளியே போகும் போது, தொடப்பட்டால், மீண்டும் அவர்களுக்கு ஒரு முறை வாய்ப்புத் தரப்படும். வெளியே போக விடாமல் தடுப்பதற்காக, வட்டத்தில் நிற்பவர்கள் கைகளை மேலும் கீழும் அசைத்துக் கொண்டு நிற்பது நல்லது.

அவர்களைத் தொட்டவர்கள் , மூன்று கால்காரர்களாக ஆகிட, ஆட்டம் தொடரும்.

4.11. பந்தைப்பிடி (Ball Toss)

ஆசிரியர் தன் கையில் பந்தை வைத்துக்கொண்டு நிற்க, அவரைச் சுற்றி, குழந்தைகள் தயாராக நிற்க வேண்டும்.

விசிலுக்குப் பிறகு, பந்தை உயரமாக அவர் எறிய, குழந்தைகள் பந்தைப் பிடிக்க வேண்டும்.

அதிக உயரமாக எறியாமல், குழந்தைகள் திறமைக்கு ஏற்ப, பார்த்து, உயரம் எறிய வேண்டும்.

5. சீருடல் பயிற்சிகள் (Gymnastics)

5 முதல் 8 வயது குழந்தைகளுக்கு, உடற்பயிற்சி உதவி சாதனங்கள் என்று, எதுவும் தேவையில்லை.

அவர்கள் உடல் இயக்கத்தில், ஒரு அழகு, ஒரு நளினம், ஒருங்கிணைந்த செயல்முறை இருப்பது போல் பயிற்சியளிக்கவேண்டும்.