பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

அணைகள்

பம்பாய்க்கு அருகில் இந்தியாவில், டிராம்பே என்னும் இடத்தில் அணு சக்தி ஆராய்ச்சி நிலையம் ஒன்று இயங்கி வரு கின்றது. தமிழ் நாட்டில் மகாபலிபுரத்திற் கருகில் கல்பாக்கம் என்னு மிடத்திலும் அணுசக்தி மின்சார நிலையம் ஒன்று அமைக் கப்பட இருக்கிறது. உலகில் பல நாடுகளுக்கு அணு சக்தி யின் பயங்கர விளைவுகள் தெரிந்துவிட்டன. ஆகையால் அணுகுண்டு செய்வதை அவை எதிர்த்து வருகின்றன. அணு சக்தியை நன்மை செய்வதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. அத் தகைய நாடுகளில் இந்தியா முன்னணியில் நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அணைகள்: நீங்கள் மேட்டூர் அணை, பவானி சாகர் அணை, சாத்தனூர் அணை முதலான அணைகளில் ஒன்றையேனும் பார்த்திருப்பீர்கள் அல்லவா? எதற்காக இந்த அணைகளைக் கட்டி யிருக்கிறார்கள் ? ஆற்றிலே வெள்ளம் சில பருவங்களில் தான் ஏராளமாக வரும். மழையில்லாத காலங்களில் தண்ணீர் மிகவும் குறைந்து போகும். வெள்ளம் பெருகி வரும்போது அப்படியே விட்டுவிட்டால் அது கடலில் போய்க் கலந்துவிடும். விவசாயம் முதலிய வற்றிற்கு அந்த வெள்ளம் அதிகமாகப் பயன்படாமல் போய்விடும். அந்த வெள் ளத்தைத் தடுத்து ஓரிடத்திலே தேக்கி வைத்துவிட்டால் ஆற்றில் தண்ணீர் குறைகின்ற காலங்களில் தேக்கி வைத்த நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல் லவா? இது அணைகளால் கிடைக்கும் ஒரு நன்மை ஆகும். அணைகள் பல வகைகளில் நமக்குப் பயன்படுகின்றன. ஆற்றிலிருந்து வயல்களுக்குத் தண்ணீர் கொண்டு செல் லும் கால்வாய்கள், சில இடங்களில், ஆற் றின் மட்டத்தைவிட உயரத்தில் இருக் மண் அணை கல் அணை கான்கிரீட் அணை அதனால் கும். அப்போது ஆற்றில் தண்ணீர் குறை யுமானால் கால்வாய்களில் தண்ணீர் ஏறாது. வயல்களுக்குத் தண்ணீர் கிடைக்காது. அதற்கு ஆற்றின் நீர் மட்டத்தை உயர்த்தி, கால் வாயில் எப்போதும் தண்ணீர் ஓடச் செய்ய வேண்டும். இதற்காகவும் ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது உண்டு. நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களுக்குக் குடி தண்ணீர் வழங்கவும் ஆறுகளில் அணைகள் கட்டப்படுகின்றன. மழைகாலங்களில் ஆறுகளில் வெள் ளம் பெருகும்போது ஆற்றின் கரைகள் உடைந்து போவதுண்டு. அப்போது கரையோர ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கி விடும். ஆற்றில் தக்க இடத்தில் அணை கட்டித் தண்ணீரைத் தேக்கிவிட்டால் வெள்ளத்தால் தீங்கு நேராது. தேங்கிய தண்ணீர் பாசனத்திற்கும் பயன்படும். ஆறுகளில் பெரிய வெள்ளம் வரும் போது தண்ணீரின் வேகம் மிக அதிகமாக இருக்கும். ஆற்றங்கரையிலுள்ள நிலங்கள் அரிப்புண்டு போகும். உழவு நிலங்களில் உள்ள வளமான மண் ஆற்றில் போய் விடும். அதனால் நிலம் விவசாயத்திற்குப் பயனற்றுப் போகும். இந்த மண் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் அணைகள் கட் டித் தண்ணீரின் வேகத்தைக் குறைக்க வேண்டியுள்ளது. அணையின் அடியில் தண்ணீரின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். மதகின் கதவைத் திறந்தால் தண் ணீர் மிகவும் வேகமாக வெளியே பாயும்.