பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

அப்பிரகம் - அம்மை

அப்பிரகம்: நீங்கள் 'காக்காய்ப் பொன்' பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? சிலவகைக் கற்களிலும் அதைக் கண்டிருக் கலாம். அதுதான் அப்பிரகம். கண்ணாடி போல இருக்கும். காகிதம் போலவும் இருக் கும். பளபளவென்று மின்னும். அதைத் தகடுகளாகப் பிரித்து எடுக்கலாம். அப்பிரகத்தைப் பூமிக்குள்ளிருந்து தோண்டி எடுக்கிறார்கள். அது பெரிய பெரிய கட்டிகளாகக் கிடைக்கும். அப்பிரகத்தில் பலவகை உண்டு. ஒரு வகை அப்பிரகம் மங்கலான கண்ணாடி யைப்போலவும், வெண்மையாகவும் இருக் கும். அதன்மூலம் ஒளி ஊடுருவிச் செல் லும். இவ்வகை அப்பிரகத்திற்கு மங் கோசைட்டு என்று பெயர். இன்னொரு வகை மஞ்சளாக இருக்கும். பச்சை, சிவப்பு, பழுப்பு, கறுப்பு அப்பிரகங்களும் உள்ளன. அப்பிரகத்தில் உள்ள ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியான பெயர் கொடுத்திருக்கிறார்கள். அப்பிரகம் நெருப்பில் வேகாது. அது ஒளியை உள்விடும். சில தொழிற்சாலை களில் வெப்பம் மிகுதியாகத் தரக்கூடிய உலைகள் இருக்கும். இந்த உலைகள் உள்ள அறைகளுக்குச் சன்னல் கண்ணாடியாக அப் பிரகத்தைப் பயன்படுத்துவார்கள். உலைக் குள் நிகழ்வதை வெளியில் இருந்தே பார்த் துக் கொள்ளலாம். கண்ணாடியானால் உலை யின் வெப்பத்தால் உடைந்துவிடும். அப் பிரகம் அப்படி உடைவதில்லை. மோட்டார் ஓட்டியின் முகத்தில் காற்றும், மழையும் தாக்காமல் இருக்க மோட்டார் வண்டி யின் முன்புறம் ஒரு பெரிய கண்ணாடியை அமைத்திருக்கிறார்கள் அல்லவா? அதிலும் அப்பிரகம் கலந்திருக்கின்றது. அதனால் கண்ணாடி உடைந்தபோதிலும் சிதறிப் போவதில்லை. அப்பிரகத்தின் வழியே மின்சாரம் பாயாது. ஆகையால் மின்சாரக் கருவிகள் செய்யவும் இது பெரிதும் உதவுகிறது. மேலும் அலங்காரப் பொருள்கள், வர்ணங் கள் செய்யவும் இது பயன்படுகிறது. சில வகைக் காகிதம் செய்வதிலும் இதைப் பயன்படுத்துகின்றனர். தாவரங்கள் நன்றாக வளரப் பொட்டா சியச் சத்து வேண்டும். சில வகை அப்பிர கங்களில் பொட்டாசியம் நிறைய உண்டு. எனவே, உரங்கள் தயாரிப் பதற்கு அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ரசாயன கொடிய அம்மை : அம்மை ஒரு தொற்றுநோய். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்த நோயால் பீடிக்கப் பட்டு, பல ஆயிரக் கணக்கான மக்கள் இறந்தனர். நூற்றுக்கணக்கானவர் உடல் முழுவதும் தழும்பு ஏற்பட்டு உடல் அழகை இழந்தனர். ஆனால் இன்று இது அதிகம் பேரைப் பாதிப்பதில்லை. இந்நோய் வரா மல் தடுக்கும் வழிகள் கண்டுபிடிக்கப்பட் டிருப்பதே இதற்குக் காரணம். அம்மை நோய் கண் ணுக்குத் தெரி யாத மிகச் சிறிய கிருமிகளால் பரவுகிறது. நோயாளி தும்மும்போதும், இருமும் போதும், பேசும்போதும் காற்றின் மூலம் இந்தக் கிருமிகள் பரவுகின்றன. அம்மை யில் பலவகை உண்டு. அவற்றில் பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை என்பவை முக்கியமானவை. பெரியம்மைதான் மிகவும் கொடியது. இது வெப்பம் மிகுந்த நாடுகளிலும், சுகா தாரமில்லாத நாடுகளிலுமே அதிகமாகப் பரவுகிறது. இது ஒருவரைத் தொற்றினால் முதலில் அதிகக் காய்ச்சல் வரும். பிறகு உடல் முழுதும் முத்துப்போன்ற நீர்க்கொப் புளங்கள் உண்டாகும். சில நாள்களில் இவற்றில் சீழ் பிடிக்கும். பல நாள்கள் இப்படியே இருக்கும். பின்னால் கொப் புளங்கள் ஆறிய பின்னும் தழும்புகள் மறையாமலிருக்கும். சின்னம்மை கொடிய நோய் அல்ல. பொதுவாகக் குழந்தைகளுக்கே அதிகமாக வருகிறது. நெஞ்சில் கொப்புளங்கள் மிகுதி யாக இருக்கும். முகத்திலும், கால் கை களிலும், வாயிலும் சில சமயங்களில் ஓரிரு கொப்புளங்கள் உண்டாகலாம். தழும்பு ஏற்படுவதில்லை, ஆபத்தும் இல்லை. தட்டம்மையும் போலச் குழந்தைகளுக்கே அதிகமாக வருகிறது. இந்த நோய் வந்தால் உடல் முழுவதும் சிவப்பாகத் தடித்து இருக் கும். சுடுகஞ்சியைத் தோலில் கொட்டியது சிவந்துவிடும். இது குண மடைந்த பிறகு சில நாள்கள்வரை உடல் பலவீனமாக இருக்கும். அந்தச் சமயத்தில் கக்குவான் போன்ற வேறு சில நோய்கள் எளிதில் பீடிக்கக்கூடும். இந் நோயினால் ஏற்படும் முக்கிய ஆபத்து இதுவே. பெரும்பாலும் அம்மை ஒருவருக்கு ஒருமுறைக்குமேல் வருவதில்லை. இது ஒரு முறை வந்தால் பிறகு இந்த நோய் வராமல் தடுக்கும் சக்தியை உடல் பெற்றுவிடுகிறது.