பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை குத்தல் - அமிர்தசரஸ்

15

அம்மை ஒரு தொற்று நோயாகை யால் நோயாளிகளைத் தனி இடத்தில் இருக் கச் செய்ய வேண்டும். அவர்களுடைய உடை முதலியவற்றை அடிக்கடி மருந்து நீரில் கழுவவேண்டும். அவர்களுக்கு எளிதில் சீரணமாகும் உணவு கொடுக்க வேண்டும். இளநீர், பழம், பால் போன்ற குளிர்ச்சியான பொருள்கள் ஏற்றவை. பெரியம்மை நோய் வருவதற்கு முன்பே தடுத்துக் கொள்வதுதான் சிறந் தது. அம்மை குத்துதல் இதற்கு உதவி யாக இருக்கிறது. அம்மை குத்திக்கொண் டபின் பெரும்பாலும் பெரியம்மை நோய் வருவதில்லை. வந்தாலும், அதன் தீவிரம் குறைக்கப்படுகிறது. பார்க்க : அம்மை குத்தல். அம்மை குத்தல் : நீங்கள் எல்லாரும் அம்மை குத்திக்கொண்டிருப்பீர்கள். உங் கள் கையில் துளி அம்மைப் பாலைத் தடவி அம்மை குத்தும் ஊசியால் திருகுவார்கள். இதற்குத்தான் அம்மை குத்தல் என்று பெயர். மாட்டு அம்மையால் பாதிக்கப்பட் டவர்களுக்குப் பெரியம்மை வருவதில்லை என்று மக்கள் நம்பினர். எட்வர்டு ஜென் னர் என்னும் ஆங்கில மருத்துவர் பல சோதனைகள் செய்து 1796-ல் இது உண் மைதான் என்று கண்டார். ஆகவே மாட் டம்மை வந்தவரின் அம்மைப் பாலை எடுத் 15 துக் குத்திக்கொண்டால் அம்மையே வராது என்று தெரிந்தது. அதனால், மாட்டுக் கன்றுகளுக்கு அம்மை குத்தி, பூரித்த அம்மையினின்றும் பாலை எடுத்து நமக்குக் குத்துகிறார்கள். இதன் மூலம் அம்மை நோயினால் இறப்பவர்களின் தொகை மிகவும் குறைந்து விட்டது. அம்மை குத்தல் சுலபமான முறை. முதலில் அம்மை குத்தும் இடத்தை நன் றாகச் சுத்தம் செய்யவேண்டும். பின்பு, அந்த இடத்தில் அம்மைப் பாலை வைக்க வேண்டும். அம்மை குத்தும் ஊசியால் மெதுவாகத் திருகிப் பின்பு அந்த ஊசியின் பின்புறத்தால் பாலைப் பரப்பிவிடவேண் டும். பால் தோலின் உள்ளே சென்று இரத்தத்தில் கலக்கிறது. அம்மை குத்திய மூன்று அல்லது நான்கு.நாள்களுக்குப் பிறகு குத்திய இடம் சிவந்து பூரிக்கும்; அரிப்புத் தோன்றும். அம்மைப்பால் பட்ட இடத்தில் நீர் பிடிக் கும். காய்ச்சலும் வரலாம். ஆனால் கொப் புளம் தானாகவே ஆறிவிடும். குழந்தைகளுக்கு இரண்டிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அம்மை குத்திவிடுவது நல்லது. அம்மைப்பாலின் ஆற்றல் ஆண்டு கள் ஆக ஆகக் குறைந்துகொண்டேவரும். ஆகவே மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அம்மை குத்திக்கொள்வது நல்லது. அம்மை நோய் பரவலாக ஓரிடத்தில் இருக்குமானால் அங்கு உள்ளவர்கள் அந் தச் சமயத்திலும் அம்மை குத்திக்கொள் வது நல்லது. அமிர்தசரஸ் : இது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரம். இது சீக்கியர்களின் புண்ணியத் தலம். இங்கு ஒரு தடாகம் உண்டு. தடாகத்துக்கு நடுவில் சீக்கியர்களின் பொற்கோயில் உள்ளது. இந்தத் தடாகத் திற்குத்தான் அமிர்தசரஸ் என்று பெயர். இந்தப் பெயரே பின்னால் நகரத்திற்கும் அமைந்தது. கம்பள நெசவும், தோல் பதனிடலும் முக்கியத் தொழில்கள். சீக்கியர் கல்லூரி ஒன்று இங்கு உண்டு. ஜாலியன்வாலா பூங்கா உள்ளது. சுதந்தரப் போராட்டத் தின்போது 1919-ல் இங்குக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களில் பலரை அந்நிய ஆட்சியினர் சுட்டுக் கொன்றனர். இதுவே 'பஞ்சாப் படுகொலை' என்பது.