பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

அமிலங்களும் காரங்களும்

அமிலங்களும் காரங்களும்: எலுமிச் சம்பழம் புளிக்கிறது. ஏன் தெரியுமா? அதில் அமிலம் எனப்படும் ஒருவகைப் புளிப்புப் பொருள் இருக்கிறது. ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை முதலிய பழங்களிலும் அமிலங்கள் உள்ளன. இவை எல்லா வற்றிலும் இருப்பது ஒரே வகை அமிலம் அல்ல. அவை வெவ்வேறு வகையான அமிலங்கள். ஆனால் எல்லா அமிலங்களுக்கும் பொதுவான சில தன்மைகள் உண்டு. அமிலங்கள் எல்லாம் புளிப்பாக இருக்கும். அவை ஹைடிரஜன் சேர்ந்து உண் டானவை. தாவரத்தில் இருந்து தயாரிக் கப்பட்ட நீல லிட்மஸ் காகிதத்தைச் சிவப்பாக மாற்றக்கூடியவை. எந்த அமில மும் நீரில் கரையும்போதுதான் தனக்கு உரிய குணங்களை வெளிப்படுத்தும். அமிலங்களில் பலவகை உண்டு என்று மேலே கூறினோம்; அவற்றுள் ஹைடிரோ குளோரிக அமிலம், கந்தகாமிலம், நைட்ரிக அமிலம் ஆகியவை முக்கியமானவை; மற்ற அமிலங்களைவிட அதிகச் சக்தி வாய்ந்தவை. இரும்பு, துத்தநாகம் முதலிய உலோகங் களை அரித்துக் கரைத்துவிடும் சக்தி இந்த அமிலங்களுக்கு உண்டு. நம் உடம்பில் பட் டால் புண் உண்டாக்கிவிடும்; துணிகளில் பட்டால் துணிகள் வெந்துபோகும். சோதனைச் சாலைகளிலும், தொழிற் சாலைகளிலும் அமிலங்கள் அதிகமாகப் பயன்படுகின்றன. மருந்துப் பொருள்கள், உரங்கள், சாயங்கள் முதலியவற்றைத் தயாரிக்க அமிலங்கள் தேவை. உண்ணும் உணவு சீரணமாவதற்கு ஹைடிரோ குளோரிக அமிலம் ஓர் அளவிற் குத் தேவை. அது நம் இரைப்பையிலேயே உண்டாகிறது. நாம் உண்ணும் உணவுப் நாம் பொருள்களில் உள்ள புரோட்டீன்கள் (புரதம்) நம் உடலின் தசைகளை வளர்க் கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் புரோட்டீன்கள் அமினோ அமிலங் கள் எனப்படும் பலவகைப் பொருள்களின் கூட்டுச் சேர்க்கையினால் உண்டாகின்றன. அமிலங்களின் தன்மைகளிலிருந்து நேர் மாறான தன்மைகள் கொண்ட பொருள் களுக்குக் காரங்கள் என்பது பொது வான பெயர். தெளிந்த சுண்ணாம்புநீர் (கால்சியம் ஹைடிராக்சைடு) அவற்றுள் ஒன்று. அவை காரங்கள் சிவப்பு லிட்மஸ் காகிதத் நீலமாக மாற்றுகின்றன. கரைந்துள்ள தண்ணீரைத் தொட்டால் வழவழப்பாக இருக்கும்; அத் தண்ணீர் தோலை அரித்துவிடும். சில காரங்களுக்கு இரும்பு, துத்தநாகம் போன்ற உலோ கங்களை அரிக்கும் தன்மையும் உண்டு. சோடியம் ஹைடிராக்சைடு, பொட் டாசியம் ஹைடிராக்சைடு, கால்சியம் ஹைடிராக்சைடு, அம்மோனியம் ஹைடி ராக்சைடு ஆகியவை முக்கியமான காரங் கள். மருந்துகள், சோப்பு, உரம், செயற் கைப் பட்டு முதலியவற்றை உற்பத்தி செய் வதற்குக் காரங்கள் பயன்படுகின்றன. ஓர் அமிலத்தோடு தகுந்த அளவு ஒரு காரத்தைச் சேர்த்தால் அமிலம் தன் தன்மையை இழந்துவிடும்; காரமும் தன் தன்மையை இழந்துவிடும். அமிலமும், காரமும் அல்லாத வேறு ஒரு புதிய பொருள் உண்டாகும். இவ்வாறு அமில மும் காரமும் சேருவதால் உண்டாகும் கூட்டுப் பொருளே 'உப்பு' என்பது. நாம் உணவிற்குப் பயன்படுத்தும் உப்பு (சோடியம் குளோரைடு) அத் தகைய உப்புகளில் ஒன்று. தை புளி சுண்ணாம்பு நீர் முகரும் உப்பு ஆரஞ்சு எலுமிச்சை மோர் Ceast hal சலவை சோடா அமிலங்கள் காரங்கள்