பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமீபா - அமெரிக்க இந்தியர்கள்

17

மேல் வரிசை : அமீபா உணவு உட்கொள்ளும் விதம். கீழ் வரிசை: ஒரு அமீபா இரண்டு அமீபாக்கள் ஆகும் விதம். அமீபா: உயிர் இனங்களில் பல வகை உண்டு. சில உயிர் இனங்கள் யானை யைப் போலப் பெரியவை. சில மிகமிகச் சிறியவை. சிறிய உருவத்தை மிகப் பெரி தாகக் காட்டும் மைக்ராஸ்கோப்பின் இவற்றைப் பார்க்க அமீபா இவ்வித நுண்ணிய உதவியில்லாமல் முடியாது. உயிர் இனங்களில் ஒன்று. இதன் உடல் ஒரே ஒரு உயிரணுவால் (த.க.) ஆனது. இதனுள் எண்ணெயும், வேறு சில உணவுச் சத்துப் பொருள்களும் இருக்கும். இதன் நடுவில் ஒரு கறுப்புப் புள்ளி இருக்கின்றது. அதற்கு உட்கரு என்று பெயர். உட்கரு இல்லாமல் அமீபாவினால் நகர முடியாது. உண்ணவும் முடியாது. அமீபா நீரிலும், கடலிலும், காற்றிலும், மண்ணிலும் வாழும்; மனிதரின் உடலிலும், விலங்கு களிலும், செடி கொடிகளிலும் வாழும். அமீபாக்களில் ஒரு வகை மனிதர்களுக்குச் சீதபேதியை உண்டுபண்ணும். நகர்ந்து செல்வதற்கு அமீபா தன் உடலின் ஏதாவது ஒரு பாகத்தை விரல் போல முன்னே நீட்டும்; அடுத்து மற் றொரு பாகத்தை நீட்டும். இப்படியே நீட்டி நீட்டி நகர்ந்து செல்லும். நீட்டப் படும். இப்பாகங்களுக்குப் பொய்க்கால் கள் என்று பெயர். இது தன் பொய்க் கால்களை நீட்டி இரையைப் பிடித்து உண் ணும். அமீபா ஓரளவு வளர்ந்தபின் அதன் உட்கரு இரண்டாகப் பிரியும். அதே சமயத்தில் அதன் உடலும் இரண்டாகப் பிரிந்து இரண்டு அமீபாக்கள் உண்டாகும். இப்படியே கோடி கோடி அமீபாக்கள் பிறக்கின்றன. அமீபா என்றால் மாறுதல் என்று பொருள். அமீபாவுக்குத் தலை, கால், கண்,

வாய், வயிறு என்று தனி உறுப்புகள் இல்லை. அதற்கு ஒரு குறிப்பிட்ட உருவமும் கிடையாது. அதன் உருவம் மாறிக் கொண்டே இருக்கும். ஒரே மாதிரியான இரு அமீபாக்களைக் காணமுடியாது. அமெரிக்க இந்தியர்கள்: இவர்கள் அமெரிக்காவின் பழங்குடி மக்கள். இவர் கள் இந்திய நாட்டினர் அல்லர். கடலில் மேற்குத் திசையில் சென்று இந்தியாவுக்கு வழி காண முயன்ற கொலம்பஸ் அமெரிக் காவின் கரையைக் கண்டபோது தாம் இந்தியாவைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்தார். அங்கு வாழ்ந்து வந்த மக் களுக்கு 'இந்தியர்' என்று பெயரிட்டார். அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. இவர் களுக்குச் செவ்விந்தியர்கள் என்றும் ஒரு பெயருண்டு. அமெரிக்க இந்தியர்கள் ஆசியாவி லிருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்குச் சென்றவர்கள். இவர் கள் பல மொழிகள் பேசுகிறார்கள். ஆடு மாடு மேய்த்தல், மண்பாண்டம் செய் தல், கூடை முடைதல், கம்பளம் நெய்தல், விவசாயம் செய்தல், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் ஆகிய தொழில்களை இவர் கள் செய்கிறார்கள். மரத்தாலும், மண்ணா லும் ஆகிய வீடுகளிலும், கூடாரங்களிலும் வாழ்கிறார்கள். குடும்பம் குடும்பமாகச் சேர்ந்து வாழ்கின்றனர். ஒவ்வொரு கூட் டத்திற்கும் ஒரு தலைவர் உண்டு. அனை வரும் அவருக்குப் பணிய வேண்டும். இவர் கள் சூரியனையும் சந்திரனையும் வணங்கு