பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இவர்களில் சில இனத்தவர் நாகரிகத்தில் சிறந்து விளங்கினர். இன்கா நாகரிகம், ஆஸ்ட்டெக் நாகரிகம், மாயா நாகரிகம் என்பன அப்படிச் சிறந்து விளங்கிய நாகரிகங்கள் ஆகும். அமெரிக்க இந்தியர்களில் சிலர் ஓரிடத் திலும் தங்காத நாடோடிகளாய் இருக் கிறார்கள். இப்போது அமெரிக்க இந்திய இனங்களில் சில அழிந்து மறைந்துவிட்டன. பல இந்தியர் வெள்ளையரோடும், நீக் ரோக்களோடும் கலந்துவிட்டனர். சில பகுதிகளில் இவர்களுக்கெனத் தனியிடம் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. இப் போது இவர்கள் அமெரிக்க நாட்டுக் குடிகளாக வாழ்கிறார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகள்: இதை நாம் அமெரிக்கா என்றே பொதுவாக அழைக்கிறோம். அமெரிக்கா என்ற மிகப் பெரியதொரு கண்டத்தில் அமெரிக்க ஐக் கிய நாடுகள் ஒரு பகுதியாகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 50 மாநிலங்கள் இணைந் துள்ளன. ஹவையீ தீவுகளும், அலாஸ்க்கா மாநிலமும் இவற்றுள் சேர்ந்துள்ளன. இந்நாடு மேற்கே பசிபிக் சமுத்திரத் திலிருந்து கிழக்கே அட்லான்டிக் சமுத் திரம் வரை பரவியுள்ளது. இதற்கு வடக்கே கானடாவும், தெற்கே மத்திய அமெரிக்க நாடுகளும் உள்ளன. நாட்டின் மேற்குப் பகுதியில் ராக்கி மலைத்தொடர்களும், கிழக்கில் அப்பலேச்சியன் மலைகளும் இருக் கின்றன. இடையில் உள்ள பரந்த சம வெளிகளில் பல ஆறுகள் ஓடுகின்றன. அவற்றுள் மிசிசிப்பி - மிசௌரி ஆறுகள் மிகவும் பெரியவை. வடகிழக்கில் உள்ள ஏரிகள் கடல் போலப் பரந்து காணப் படுகின்றன. நாட்டின் தட்ப வெப்பம் பலவகை. ஒரு பக்கம் இதமான வெப்பம்; ஒரு பக்கம் கடுங்குளிர். ஒரு பக்கம் பெருமழை பெய் யும்; ஒரு பக்கம் மழையே இராது. ஆறு பாயும் இடமெல்லாம் வயல்வெளிகள் நிறைந்துள்ளன. மலைகளின் மீது காடுகள் அடர்ந்துள்ளன. புல்வெளிகளும் ஏராள மாக உண்டு. இந்நாட்டின் கீழ்ப் பகுதிகளில் நெல் லும் கரும்பும் பயிராகின்றன. கோதுமை, பருத்தி, மக்காச் சோளம் ஆகியவை வட பகுதியில் விளைகின்றன. மலைச் சரிவுகளில் மேய்ச்சல் நிலங்கள் பரந்து கிடக்கின் றன. பசிபிக் கரையோரம் காலிபோர் னியா மாநிலப் பகுதியில் பழத்தோட்டங்