பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

19

கள் மிகுதி. உலகம் முழு வதிலும்விளையும் கோதுமை, பருத்தி, மக்காச் சோளம் ஆகியவற்றின் பெருமளவு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தான் உற்பத்தியாகிறது. பெரிய மீன் பண்ணைகளும், கால்நடைப் பண்ணைகளும் இங்கு உண்டு. நிலக்கரி, இரும்பு, பெட் ரோலியம், அலுமினியம் இவை இந்நாட்டில் அதிக மாசுக் கிடைக்கின்றன. இரும்பு - எஃகுத் தொழி லும், மோட்டார் வண்டிகள் உற்பத்தியும், மின்சக்தி உற் பத்தியும், தெசவாலைகளும் சிறந்துள்ளன. விஞ்ஞான ஆராய்ச்சியிலும், தொழில் நுட்ப வளர்ச்சியிலும் இந் நாடுமுன்னணியில் நிற்கிறது. இங்குச் சுமார் 18 கோடி மக்கள் வாழ்கிறார்கள். வாஷிங்க்டன் இதன் தலை நகரம். இங்குள்ள நகரங்களி லெல்லாம் மிகப்பெரியது நியூயார்க் நகரம். இத்நகரத் தின் முகப்பில் உலகிலேயே மிகப் பெரியதெனப் புகழ் பெற்ற 305 அடி உயரமுள்ள சுதந்தரச் சிலை நிற்கின்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் உலகிலேயே மிக உயரமான எம்பயர் ஸ்டேட் கட்டடம் வாஷிங்க்டன் நகரிலுள்ள அமெரிக்க திபதி மாளிகை 19 இந் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம் உலகி லேயே மிக உயரமானது. இதன் உயரம் 1,250 அடி. இதில் 102 மாடிகள் உள்ளன. நாடெங்கும் போக்கு வரத்துச் சாலைகளும், ரெயில் பாதைகளும் அமைக்கப் பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து மிசுவும் முன்னேற்றமடைந்துள்ளது, நாடெங்கும் மிகப் பெரிய, அழகிய தேசியப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாடு களிலிருந்து பருத்தி, புகை யிலை, மோட்டார்வண்டிகள், மண்ணெண்ணெய் இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி யாகின்றன. பட்டு, தேயிலை, சணல், தோல், காகிதம் முதலியன இந்நாட்டுக்கு இறக்குமதி யாகின்றன. அமெரிக்க மக்களின் முன்னோர்கள் பெரும் பாலார் இங்கிலாந்திலிருந்து சென்று குடியேறியவர்கள். இன்றைக்கு முந்நூறு ஆண்டு களுக்கு முன்பிருந்தே இக் குடியேற்றம் தொடங்கிற்று.