பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயர்லாந்து - அயோடின்

21

வட அயர்வசத்து அயர்லாந்து (eds) துணி வகைகள் இஉருபிக்கிழக்கு அன்பால் ஆ பால் பண்ணே கின்றன. உண்டு. அயர்லாந்து-அயோடின் பாஸ்ட் இறைச்சி அயர்லாந்து: இது கிரேட் பிரிட் டனுக்குச் சிறிது மேற்கே உள்ள தீவு. நீளம் 302 மைல். அகலம் சராசரி 110 மைல் குன்றுகளால் சூழப்பட்ட சமவெளி கள் கொண்டது. பல ஏரிகளும், ஆறுகளும் இங்கு உள்ளன. பசுமையான புல்வெனி கள் நிறைந்திருப்பதால் இதை மரகதத் தீவு என்று பாராட்டுவார்கள். அயர்லாந்தில் வடபகுதி கிரேட் பிரிட் டனைச் சேர்ந்தது. தலை நகரம் பெல் பாஸ்ட், தென்பகுதி அயர்லாந்து குடியரசு என்னும் ஒரு சுதந்தர நாடாகும். ஏரே என்று அழைக்கப்படுகின்றது. இதன் தலை நகரம் டப்ளின். ஏரேவின் மேற்குப் பகுதியில் மழை அதிகம் பெய்வதில்லை. அங்கு மக்கள் நெருக்கம் அதிகமில்லை. மற்ற இடங்களில் நல்ல மழை பெய்து நிலம் செழித்துள்ளது. விவசாயம் முக்கியத் தொழில், பல இடங் களில் கோழிப் பண்ணைகளும், கால்நடைப் பண்ணைகளும் உள்ளன. ஓட்ஸ், பார்லி, உருளைக் கிழங்கு இவை இங்கு நன்றாக விளைகின்றன. வட அயர்லாத்தில் சணல் விளைகிறது. அங்குப் பல நெசவாலைகளும், கப்பல் கட்டும் தொழிற்சாலைகளும் இருக் கால்நடைப் பண்ணைகளும் 21 ஏரே மக்களுள் பெரும்பாலார் கத் தோலிக்கக் கிறிஸ்தவர்கள். இங்கு ஐரிஷ் அல்லது கேலிக் மொழி பேசுகிறார்கள். வட அயர்லாந்து மக்கள் பிராட்டஸ் டென்ட் கிறிஸ்தவர்கள். இவர்கள் மொழி ஆங்கிலம். அயோடின் (Iodine ) : அயோடின் ஒரு தனிமம் (த.சு.). இதன் நிறம் கருநீலம். சாதாரண வெப்ப நிலையில் இது திடப் பொருளாக இருக்கும். காற்றில் திறந்து வைத்தால் ஆலியாகிவிடும். பெரும்பா வான திடப்பொருள்களைச் சூடாக்கி னால் முதலில் அவை திரவமாக மாறும்; பின்புதான் ஆவியாகும். ஆனால், அயோ டினைச் சூடுபடுத்தினால் அது திரவ மாகாமலே ஆவியாகிவிடும். இவ்வாறு மாறுவதைப் பதங்கமாதல் என்று சொல்லு கிறோம். கடற்பாசியில் அயோடின் கலந்துள் ளது. கடற்பாசியை எரித்து, அதன் சாம் பலிலிருந்து அயோடினைப் பிரித்து எடுப் பார்கள் பூமியில் கிடைக்கும் சில உப்பு களிலும் அயோடின் சிறிதளவு கலந்துள் ளது. அயோடின் இயற்கையில் தனியாகக் கிடைப்பதில்லை. அயோடின் தண்ணீரில் கொஞ்சந்தான் கரையும்: ஆல்கஹாலில் (த.க.) நன்றாகக் கரையும். இப்படி ஆல்கஹாலில் கரைந்த அயோடினை டிங்க்சர் ஆப் அயோடின் ' என்று சொல்வார்கள். அதைக் காயங் களுக்குத் தடவுகிறோம். அயோடின் பட் டால் காயத்தில் சீழ் பிடிக்காது. புண் ணுக்குத் தடவும் அயோடோபாரம் போன்ற மருந்துகள் செய்யவும் அயோடின் பயன்படுகிறது. அயோடின் படிகங்கள்