பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்த்வர்க் - அரசாங்கம்

22


நாம் நோயில்லாமல் நல்ல நிலையில் இருக்க நம் உடலில் பல சத்துகள் சேர்ந் திருக்க வேண்டும். அவற்றுள் அயோடினும் ஒன்று. உடம்பில் போதுமான அளவு அயோடின் சேராவிட்டால் கழுத்தின் முன் பக்கம் வீங்கிக் கழலை உண்டாகும். அயோடின் கலந்த மருந்து இதைக் குணப் படுத்தும். தனியாக அயோடினை மட்டும் உட்கொண்டால் உடலுக்குக் கெடுதி உண் டாகும். அதனால் சில நாடுகளில் சமையலுக் குப் பயன்படுத்தும் உப்புடன் சோடி யம் அயோடைடு என்னும் உப்பையும் சிறிதளவு கலந்து விற்பதுண்டு. உடம் பில் அயோடின் அதிகமாக இருந்தாலும் கெடுதிதான். உடல் மெலியும்; அடிக்கடிக் கோபம் வரும்; படபடப்பும் உண்டாகும். அர்த்வர்க் (Aardvark ) : படத்தில் உள்ள விந்தையான விலங்கைப் பாருங்கள். பன்றி போல இருக்கிறதல்லவா? அர்த்வர்க் என்றால் நிலப்பன்றி என்று பொருள். இதன் உடல் பருத்துக் கனமாக இருக் கும். தலை சிறியது. காது பெரியது. முகம் ஒரு குழாய் போல நீண்டிருக்கும். கால்கள் உறுதியானவை. இதன் நாக்கு நீளமானது; பசையுள்ளது. அர்த்வர்க் நிலத்தில் குழிதோண்டி அக் குழியில் வாழும். பகல் முழுவதும் தூங்கி இரவில்தான் வெளியே வரும். கறையான், எறும்பு ஆகியவற்றை உண்ணும். இது தன் வலிமையான கால்களால் கறையான் புற்றைச் சிதைக்கும். நாக்கை நீட்டிக் கறையான்களைப் பிடித்துத் தின்னும். இது ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்படு கின்றது. அரசாங்கம் : ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் காட்டில் இங்குமங்கும் அலைந்து கிடைக்கக்கூடியதை உண்டு வாழ்ந்தான்; விலங்குகளை வேட்டை யாடினான்; பிறகு மழைக்கும், காற்றுக் கும் குகைகளில் ஒதுங்கித் தன் குடும்பத் துடன் வசித்து வந்தான். காலப்போக்கில் அவனுக்கு விவசாயத்தைப் பற்றிய அறிவு சிறிது சிறிதாக வளரலாயிற்று.நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழத் தொடங்கினான். இவ்வாறு பலர் சேர்ந்து வாழ்ந்த இடம் ஓர் ஊர் ஆயிற்று. ஓர் ஊரில் வசித்தவர் கள் பகைவர்களிடமிருந்தும், விலங்குகளிட மிருந்தும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஓர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டார் கள். அதை நடத்திவர ஒரு தலைவனையும் தேர்ந்தெடுத்தனர். இப்படித் தனித்தனி யாகப் பல ஊர்கள் தோன்றின. வலிமை வாய்ந்த ஓர் ஊர்த்தலைவன் பக்கத்தி லுள்ள பிற ஊர் மக்களைப் போரில் வென்று அவர்கள் வாழ்ந்த பகுதிகளையும் தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்தான். மக்கள் சமாதானமாக வாழச் சட் டங்கள் வகுக்கப்பட்டன. மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட தலைவன் அப்பகுதிக்கு அரசன் ஆனான். அரசன் ஆட்சி அரசாங்க மாயிற்று. முற்காலங்களில் அரசர்கள் ஆண்ட பகுதிகள் அளவில் சிறியனவாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் அரசு கள் பெரிதாயின. 1. ஓர் அரசுக்குக் குறிப்பிட்ட சில தன்மை கள் இருக்க வேண்டும். ஒரு நிலையான நிலப்பரப்பும், எல்லையும் அதற்கு இருக்க வேண்டும்; 2. ஒன்றாக இணைந் துள்ள ஒரு மக்கள் தொகுதி அதில் வாழ வேண்டும்; 3. இவர்களை உள்நாட்டுச் சச்சரவுகளிலிருந்தும், வெளியிலிருந்து வரக் கூடிய ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்ற ஓர் அரசாங்கம் இருக்க வேண்டும். அரசின் இன்றியமையாத அங்கமாக இருப்பதே அரசாங்கமாகும். அதாவது, அரசின் நோக்கங்களை நிறைவேற்றும் ஒரு கருவியே அரசாங்கம். முன்பெல்லாம் அரசாங்கம் பாதுகாப் புப் பணியை மாத்திரம் செய்து வந்தது. ஆனால், பின்னர் இதன் பணிகள் பலவாறாக வளர்ந்திருக்கின்றன. கல்வி, சமூக சேவை, மொழி வளர்ச்சி, கைத்தொழில் முன் னேற்றம், எல்லாருக்கும் வேலையும், உண வும் கொடுக்க ஏற்பாடுகள் முதலிய எல் லாப் பணிகளையும் இக்காலத்து அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இவற்றைச் செய்ய வரி விதிக்கவும், திட்டமிட்டுச் செல விடவும், வேண்டிய ஊழியர்களை நியமிக்க வும் அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு. ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் மூன்று அங்கங்கள் உள்ளன. 1. சட்ட சபை :