பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசாங்கம்

23

இது மக்களுக்கு அவ்வப்போது வேண்டிய சட்டங்களையும், விதிகளையும் வகுக்கும்; 2. நிருவாகத் துறை: மேற்படி சட்டங்களைச் செயல்படுத்தல், வரிவசூல் செய்து செலவு செய்தல், நாட்டில் அமைதியையும், ஒழுங் கையும் நிலைநாட்டல் முதலியவை இதன் பொறுப்பாகும்; 3. நீதித் துறை : சொத்து பற்றியோ, மற்ற உரிமைகளைப் பற்றியோ மக்களிடையே சச்சரவுகள் ஏற்பட்டால் அவற்றைச் சட்டப்படியும், நியாயப்படியும் தீர்த்து வைப்பது இதன் பொறுப்பாகும். இது அரசாங்கத்தில் பல வகைகள் இருக் கின்றன. அரசனைத் தலைவனாகக் கொண்டு இயங்கும் அமைப்பு ஒரு வகை. முடியாட்சி எனப்படும். ஒரு சில அதிகாரி கள் அல்லது முக்கியக் குடும்பங்களின் பிரதி நிதிகள் சேர்ந்து அரசாங்கத்தை நடத் துவது மற்றொரு வகை. இதைச் சிலராட்சி என்று சொல்லலாம். ஒருவரோ அல்லது ஒரு கட்சி மட்டுமோ ஆட்சி செய்வது சர் வாதிகாரம் ஆகும். பெரும்பான்மை யோரின் வாக்கைப் பெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடத்தப்படும் ஆட்சிக்கு மக்களாட்சி அல் மாநில அரசாங்கம் சென்னையிலுள்ள தமிழக அரசு - தலைமைச் செயலகம் மத்திய அரசாங்கம் டெல்லியிலுள்ள நாடாளுமன்றக் கட்டடம் 23 லது குடி அரசு என்று பெயர். இந்தியா ஒரு குடியரசு நாடாக இயங்கி வருகி றது. ஒரு நாட்டுக்கு அரசனோ, அரசியோ தலைமையாக இருப்பினும் அங்கு களாட்சி நடைபெறலாம் என்பதற்கு இங் கிலாந்து ஓர் எடுத்துக்காட்டாகும். மக் அரசாங்கங்களை வேறு விதமாகவும் பாகு படுத்தலாம். நாடு முழுவதற்கும் எல்லா அதிகாரங்களையும் கொண்ட ஒரே அரசாங் கத்தால் நடத்தப்படலாம். இத்தகைய அரசாங்க முறைக்கு ஒற்றையாட்சி என்று பெயர். இங்கிலாந்தில் இத்தகைய ஆட்சி நடைபெறுகிறது. நாட்டை மத்திய அர சாங்கமும், மாநில அரசாங்கங்களும் தனித் தனியாக அவை சட்டப்படி பெற்ற அதிகாரத்தைக் கொண்டு இயங்கலாம். இதற்குக் கூட்டாட்சி என்று பெயர். இந்தியா இத்தகைய அமைப்பைக் கொண்டது. அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பை அமைச்சர்கள் ஏற்றுக்கொண் டால் அதை அமைச்சரவை ஆட்சி என் றும், ஆட்சிப் பொறுப்பு ஜனாதிபதிக்கு இருந்தால் அதை ஜனாதிபதி ஆட்சி என் றும் கூறுவார்கள். அமைச்சரவை ஆட் தமிழக அரசு தலைமைச் செயலகம் B.ஜெச