பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

அரவிந்தர்

24 சிக்கு இந்திய அரசாங் கத்தையும், ஜனாதிபதி ஆட்சிக்கு அமெரிக்க அர சாங்கத்தையும் எடுத் துக்காட்டாகக் கூறலாம். கொள்கை வழியாக வும் சில அரசாங்கங்களைக் கம்யூனிச அரசாங்கம், நாஜி அரசாங்கம், பாசிச அரசாங்கம் என்று பாகு படுத்தலாம். நாஜி அர சாங்க முறையும், பாசிச அரசாங்க முறையும் இரண்டாம் உலக யுத்தத் திற்குச் சில ஆண்டுகள் முன்னர் முறையே ஜெர் மனியிலும், இத்தாலியி லும் தோன்றின. பிறகு இவை மறைந்துவிட்டன. அரவிந்தர் மகான் பொதுவுடைமையை முக்கிய கொள்கை யாகக்கொண்ட கம்யூனிச அரசாங்க முறை சோவியத் யூனியனிலும், சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும் நடைபெறுகிறது. அரசாங்கம் தனது அதிகாரத்தைத் திறமையாகச் செயல்படுத்த நாட்டைப் பல பகுதிகளாகப் பிரித்து நிருவகிக்கும். இத்தகைய பகுதி ஆட்சியே தல ஆட்சி என அழைக்கப்படுகிறது தமிழ் நாட்டி லுள்ள மாநகராட்சி, நகராட்சி, பஞ் சாயத்து ஆட்சி ஆகியவை தல ஆட்சி களாகும். இத்தகைய தல ஆட்சி முறை, நாட்டுக்கு நாடு வேறுபடும். இந்திய அரசியல் அமைப்பு ; நாடாளுமன் றம்; சட்டசபை; பொதுவுடைமை; சர் வாதிகாரம்; சோஷலிசம். பார்க்க: அரவிந்தர் (1872-1950) : உலகப் புகழ் பெற்ற அரவிந்தாச்சிரமத்தைப் பற் றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது புதுச்சேரியில் உள்ளது. இது தோன்றக் காரணமாக இருந்தவர் அரவிந்தர் என் னும் பெரியார். இந்தியாவில் எத்தனையோ மகான்களும், முனிவர்களும் வாழ்ந்திருக் கிறார்கள். அவர்களைப் போன்ற ஒரு பெரியவர்தாம் அரவிந்தர். அரவிந்தர் 1872 ஆகஸ்டு 15ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். தம் ஏழாம் வயது முதல் பதினான்கு ஆண்டுகள் இங் அரவிந்தர் கிலாந்தில் கல்வி கற் றுப் பட்டம் பெற்றார். வங்காள மொழியிலும், சமஸ்கிருதத்திலும் அவ ருக்கு நல்ல புலமை உண்டு. 1907-ல் கல் கத்தா தேசீயக் கல்லூரி யின் தலைவர் ஆனார். பிறகு 'வந்தே மாதரம்' என்னும் பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவராகச் சேர்ந்து இந்திய சுதந்தரத் தைப் பற்றிப் பல கட் டுரைகள் எழுதினார். பொது மேடைகளில் பேசி மக்களின் சுதந்தர உணர்ச்சியைத் தூண்டி னார். அதனால் ஆங்கில அரசாங்கம் இவரைச் சிறையில் அடைத்தது. அரவிந்தர் சிறையினின்றும் வெளிவந்த பின் அரசியலைத் துறந்து பக்தி வழியைப் பின்பற்றினார். சந்திரநாகூரில் ஒரு மாதம் தங்கிப் பின்னர் 1910-ல் புதுச்சேரியை அடைந்தார். அதன் பிறகு அரவிந்த ஆச்சிரமம் தோன்றி மிகப் பெரியதாக வளர்ந்தது. புதுச்சேரி வந்த பிறகு மீண்டும் வெளி யிடங்களுக்குச் செல்லாமல் தம் ஆச்சிர மத்திலேயே தங்கி, இவர் தவம் செய்து வந்தார். பல நாடுகளிலிருந்தும் இவரைத் தரிசிக்க அறிஞர்கள் பலர் வந்தனர். இவர் தம் தவத்தில் கண்ட அனுபவங்களைப் பல சிறந்த நூல்களில் எழுதி வெளியிட் டுள்ளார். இவ்வாறு பலரும் மதிக்க வாழ்ந்த அரவிந்தர் 1950 டிசம்பர் 5ஆம் நாள் சமாதி நிலை அடைந்தார். அரவிந்தர் பெரிய மகான். ஆசை, ஆணவம் ஆகியவற்றை விட்டு மக்கள் நல் வாழ்வு நடத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். அத்தகைய உயர்ந்த வாழ்வை விரும்புவோர் அரவிந்த ஆச்சிரமத்தில் சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களில் பலர் இந்தியாவின் பகுதிகளிலிருந்தும், அயல் நாடுகளிலிருந்தும் வந்தவராவர். இங்குச் சாதி மத வேறுபாடு இல்லை. எல் லாரும் ஒரே குலமாகத் தூய்மையான வாழ்க்கை நடத்துகிறார்கள். பல