பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிக்கமேடு - அரிமானம்

25


அரிக்கமேட்டை அகழ்ந்து ஆராய்ந்தபோது வெளிப்பட்ட சுவர்கள் பல அரிக்கமேடு: பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் மிகப்பெரிய நகரங் கள் இருந்திருக்கின்றன. கடற்கரைகளில் பெரும் துறைமுகப்பட்டினங்கள் சிறப்புற்று விளங்கின. இவற்றின் மூலம் வெளி நாடுகளோடு கப்பல் வாணிகமும் நடந்து வந்தது. செழிப்பான அந்நகரங்கள் இன்று இல்லை. சில மண்மேடிட்டுப் போயின. சில கடலில் மூழ்கி விட்டன. அப்படி அழிந்துபோன நகரங்களில் ஒன்று அரிக்கமேடு. அரிக்கமேடு புதுச்சேரியை அடுத்து அரியாங்குப்பத்து ஆற்றின் கரையில் ஒரு மண்மேட்டின் கீழ்ப் புதைந்து கிடந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது மிகப் பெரிய துறைமுகப்பட்டினமாக இருந்தது. அப்போது இதற்குப் பொது கடல் அலைகள் மணலையும் சிறு கற் களையும் கொண்டு மோதுவதால் அரிமானம் ஏற்படுகிறது. 25 கைப்பட்டினம் என்று பெயர் வழங்கிற்று. ரோம் நகர வணிகர்கள் இங்கு வந்து வாணிகம் நடத்தினர். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தொல் பொருளியல் அறிஞர்கள் இதை அகழ்ந்து ஆராய்ந்தனர். அப்போது பல பொருள் கள் கிடைத்தன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட பண்டகசாலைகளும், சாயச் சாலைகளும் அங்கு இருந்தன. கண்ணாடி, பளிங்கு, பவழம் ஆகியவற்றால் செய்த மணிகள் கிடைத்தன. உருவங்கள் செதுக் கிய பதக்கங்கள், பொன்மணிகள், சங்கு வளையல்கள், அணிகலன்கள் ஆகியவையும் கிடைத்தன. இவையே யன்றி, மேல்நாட்டு மண்பாண்டங்கள், கண்ணாடிக் கோப்பைகள், இரட்டைப் பிடி மதுச்சாடிகள் முதலிய பாத்திரங்களும் கிடைத்துள்ளன. பலவகை இப்பொருள்களைக் கொண்டு பண்டைக் காலத்தில் இந்நகரம் மிகவும் செழிப்புற்று இருந்தது என்று தெரிகிறோம். அந்நிய நாட்டு மக்கள் பலரும் இங்கு வந்து போயினர் என்றும் அறிகிறோம். அரிமானம்: அடை மழை பெய்தால் வெள்ளம் பெருகும். அந்த வெள்ளம் பல இடங்களில் மண்ணை அரித்துக் குழி விழச் செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மண் இப்படி அரிக்கப்பட்டுப் போவது தான் அரிமானம். காற்று, கடல் அலைகள், பனிக்கட்டி, ஓடும் நீர் ஆகியவை மண்ணை அரிக்கின்றன. வேகமாக வீசும் காற்றுடன் மண லும் கலந்து, சிறிய பாறைகளையும் மேடுகளையும் அரித்துவிடும். வேகமாக நீர் ஆறுகளில் ஓடி நிலத்தை அரிக்கிறது. நிலத்தில் பள்ளங்கள் உண்டாகின்றன.