பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிமானம் - அரிஸ்டாட்டில்

26

கடும் வேகமாக வீசுகின்ற காற்றில் மணலும் கலந்து இருக்கும். மணலும், காற்றும் கலந்து சிறிய பாறைகளையும், மேடுகளையும் அரித்துவிடும். கடல் அலைகள் மணலையும், சிறு கற்களையும் கொண்டு கரையின் மேல் மோதும். இதனால் அரிமானம் ஏற்படுகின்றது. மழை நீர் வேகமாக ஓடி நிலத்தை அரிக்கிறது. அதனால் நிலத்தில் பெரும் பள்ளங்கள் ஏற்படுகின்றன. நிலமும் பாழாகிவிடுகிறது. இப்படி ஓடும் நீர் மண் வளத்தையும் அடித்துச் சென்று வீணாக்கிவிடும். பாலைவனங்களில் லில் வெப்பம் அதிக மாக இருக்கும். அப்போது சூடேறிய கற்பாறைகள் இரவில் திடீரென்றுகுளிர்ச்சி அடைவதால், பொரிந்து உதிர்ந்துவிடும். குளிர்ப் பிரதேசத்தில் உள்ள ஆறுகளில் நீர் உறைந்து பனிக்கட்டியாக மாறிவிடும். பனிக்கட்டிகள் எல்லாம் சேர்ந்து நகர்ந்து செல்வதைப் பனியாறு என்பர். பனியாறு வேகமாக மோதினால் மண்ணும், பாறை களும் அரிப்புண்டுபோகும். பெரிய பள்ளத் தாக்குகள் உண்டாகும். இப்படிப் பலவிதங்களில் அரிமானம் ஓயாமல் ஏற்பட்டுக்கொண்டே இருக் கிறது. அதனால் பயிர் விளையும் நிலம் பாழாகிறது. நிலத்தின் செழுமை குறை கிறது; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிருந்த பல மலைகளும் நிலப்பகுதிகளும் இன்று இல்லை. அவை அரிமானத்தால் கரைந்து மறைந்துவிட்டன. அரிமானத்தைக் கட்டுப்படுத்தப் பல முறைகள் கையாளப்படுகின்றன. ஆறுகள், ஓடைகள் இவற்றின் கரை ஓரங்களில் நாணல் போன்ற செடிகளை நட வேண்டும். இவற்றின் வேர்களுக்கு இடையில் மண் தங்கிவிடுவ தால் அரிமானம் அதிகமாக இராது. மலைச்சரிவுகளில் தீவனப் புற்களை நட்டுப் பயி ராக்கலாம். சரிவான நிலங் களை உழும்போது சரிவை ஒட்டியே உழாமல் குறுக் காக உழுதால் மண் அரிக்கப் படுவது குறையும். இவை போன்ற முறைகளால் அரி மானத்தைக் கட்டுப்படுத்தி நிலவளத் தைப் பாதுகாக்கவேண்டும். 384-கி.மு. அரிஸ்டாட்டில் (கி.மு. 322) : இந்தப் பரந்த உலகத்தில் பல ஆயி ரம் ஆண்டுகளுக்கு முன்பே பல அறிஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். விஞ்ஞானம், அரசி யல், தத்துவம் முதலிய பல துறைகளில் அவர்கள் சிறந்தவர்களாக இருந்தனர். அத்தகைய அறிஞர்களில் அரிஸ்டாட்டி லும் ஒருவர். அரிஸ்டாட்டில் கிரேக்க நாட்டில் ஸ்ட்டாகிரா என்னும் ஊரில் பிறந்தார். இவர் 17 வயது முடிந்த பின்பு ஆதன்ஸ் நகரத்திற்குச் சென்றார். அங்கு அப்போது பிளேட்டோ என்னும் பெரிய அறிஞர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அரிஸ்டாட் டில் அவருடைய மாணவரானார். இருபது ஆண்டுகள் அவரிடம் தத்துவம் பயின்றார். அத்துடன் பல விஞ்ஞான ஆராய்ச்சிகளை யும் செய்தார்; சிறந்த கட்டுரைகளையும் எழுதினார். பின்னர் மாசிடோனியா நாட்டு மன்னர் பிலிப் என்பவர் தம் மகனுக்கு ஆசிரியராக இருக்கும்படி அரிஸ்டாட் டிலை வேண்டிக்கொண்டார். அரிஸ்டாட் டிலும் இணங்கினார். அந்த இளவரசர் தாம் உலகப் புகழ்பெற்ற மகா அலெக் சாந்தர் (த.க.). அரிஸ்டாட்டில் சில ஆண்டுகள் கழித்து ஆதன்ஸ் நகருக்குத் திரும்பினார். அங்கு ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார். தத்துவம், விஞ்ஞானம், அரசியல் முதலிய வற்றைப் போதித்தார். அலெக்சாந்தர் இறந்த பிறகு அரிஸ்டாட்டிலுக்கு ஆதரவு குறைந்தது. அதனால் ஆதன்ஸ் நகரத்தை விட்டு இவர் வெளியேற நேர்ந்தது. இவர் தம் 62ஆம் வயதில் காலமானார். அரிஸ்டாட்டில் அரிஸ்டாட்டில் மிகச் சிறந்த அறிஞர்.. தம்மைச் சுற்றியிருந்த ஒவ்வொரு பொருளையும் கூர்ந்து நோக்கி ஆராய்ந்தார். விஞ்ஞானம், தத்துவம் முதலான துறை களில் இவர் பல நூல்கள் எழுதினார்.