பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரேபியா - அலுமினியம்

27

2 ஆப்பிரிக்கா N N சிரியா ஈராக் 2. சான்- ஆ ஏடன் காப்பு நாடு ஏடன் ஏடன் வளைகுடா காஸ்ப்பியன்) கடல் சவுதி அரேபியா மக்கா இ எண்ணெய்க் கிணறு ஈரான் அரேபியா- அலுமினியம் ஒமான் அரபிக் மான் DU SITE ளகுடா மஸ்க்காப் கடல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அரேபியா: அரேபியாவில் ஆறுகளே இல்லை. இது ஒரு விந்தை அல்லவா? அரேபியாவின் பெரும்பகுதி பாறையும், மணலுமாகவே இருக்கிறது. சில இடங் களில் புல்லும், புதரும் வளர்ந்திருக்கும். இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பசுஞ் சோலைகளும் உண்டு. அரேபியாவை மூன்று புறம் கடல் சூழ்ந் துள்ளது. அரேபியாவில் நான்கு பகுதிகள் உள்ளன. சவுதி அரேபியா என்னும் பகுதி மிகப் பெரிய நாடு. இதையொட்டி யெமன், ஓமான் என்ற வேறு இரண்டு சிறிய சுதந் தர நாடுகளும் உள்ளன. ஏடன் என்னும் சிறிய ராச்சியமும் உள்ளது. இவை எல்லா வற்றையும் சேர்த்துப் பொதுவாக அரே பியா என்று குறிப்பிடுகிறோம். அரேபியா பெரிய நாடாக இருந்தாலும் இங்கு மக்கள் அதிகமாக இல்லை. இவர் களுள் பெரும்பாலோர் நாடோடிகள். நீர் வசதியுள்ள இடங்களில் சிலர் விவசாயம் செய்கிறார்கள். காப்பி, கோதுமை, பார்லி முதலியவை பயிராகின்றன. மக்கள் பேசுவது அரபுமொழி. இவர்களுடைய முக்கிய உணவு பேரீச்சம்பழம். போக்கு வரத்திற்கு ஒட்டகம் அதிகமாகப் பயன் படுகிறது. முஸ்லிம்களின் புண்ணியத் தலங்களான மக்கா, மதீனா ஆகிய நகரங்கள் அரேபி கணக்கான யாவில் உள்ளன. ஆண்டுதோறும் இலட்சக் முஸ்லிம்கள் பல நாடுகளி லிருந்தும் மக்காவுக்கு வந்து கூடித் தொழு கிறார்கள். முகம்மது நபி மக்காவில் பிறந் தார்; மதீனாவில் இறந்தார். பாரசீக வளைகுடாவின் கரை ஓரத்தில் உள்ள குவைத், பாரேன் ஆகிய இடங் களில் இப்பொழுது பெட்ரோலிய எண் ணெய்க் கிணறுகள் பல உள்ளன. அதனால் அரபு மக்கள் பலர் எண்ணெய்த் தொழில் களில் ஈடுபட்டுள்ளனர். இதுவே நாட்டின் வளத்துக்கு முக்கிய காரணம். அரபுக் குதிரைகள் உலகப் புகழ் பெற்றவை. அலுமினியம் : அலுமினியத்தாலான பாத்திரங்கள் பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் இருக்கும். தெரு விளக்குக் கம் பங்களின்மீது பூசப்படும் வர்ணத்திலும் அலுமினியம் கலந்துள்ளது. சாக்கலேட் மேல் சுற்றியுள்ள பளபளப்பான் காகிதமும் மெல்லிய அலுமினியத் தகடுதான். சில நாணயங்களிலும் அலுமினியம் கலந்துள் 27 ளது. பூமியில் ஏனைய உலோகங்களைவிட அலு மினியம் அதிக அளவில் காணப்படுகிறது. ஆனால் அது எங்கும் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. ஆக்சிஜன் போன்ற தனி மங்களுடன் (த.க.) சேர்ந்த கூட்டுப்பொரு ளாகவே உள்ளது. அப்பிரகம் (த.க.), கற்பலகை, சில களிமண் வகைகள், பாக்சைட், கிரையோலைட் ஆகியவை அலுமினியம் கலந்த கூட்டுப்பொருள்கள். பெரும்பாலும் பாக்சைட்டிலிருந்துதான் அலுமினியத்தைப் பிரித்து எடுக்கிறார்கள். இதுவே சிக்கனமான முறை. and to 1131 196K அலுமினியத்தாலான பொருள்களும் அலுமினியம் கலந்துள்ள பொருள்களும்