பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

அலெக்சாந்தர்


இம்முறையை வலர் (Wohler) என்பவர் முதன் முதல் கண்டுபிடித்தார். அப்போது அதற்கு அதிகம் செலவானதாகையால் அலுமினியமும் தங்கத்தைப் போல ஒரு விலையுயர்ந்த பொருளாகவே மதிக்கப்பட் டது. 1886-ல் ஹால் என்ற அமெரிக்க மாணவர் மின்சாரத்தைப் பயன்படுத்தி அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் முறை ஒன்றைக் கண்டுபிடித்தார். இதற்கு ஆன செலவு மிகக் குறைவு. இதனால் அலு மினியத்தின் விலை குறைந்தது. இப்போது இம்முறையில் தான் அலுமினியம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அலுமினியத்தில் துரு பிடிப்பதில்லை. அலுமினியம் அமிலங்களில் கரைந்துவிடுகிறது. இரும்பு, பித்தளையை விட அலுமினியம் மிக இலேசானது; எளிதில் வளையக்கூடியது. ஆனால் இத னுடன் செம்பு, மக்னீசியம் உலோகங் களைச் சிறிதளவு கலந்தால் இது மிகவும் உறுதியாகிவிடும். ஆகாய விமானங்கள் செய்யப் பயன்படும் டூராலுமின் என்ற உலோகம், அலுமினியம், சிறிதளவு செம்பு, மக்னீசியம், மாங்கனீஸ் இவற்றாலான ஒரு உலோகக் கலவை (த.க.) ஆகும். அலெக்சாந்தர், மகா (கி.மு. 356- கி.மு. 323): அலெக்சாந்தர் உலகப் ARD மகா அலெக்சாந்தர் புகழ்பெற்ற வீரர். மாசிடோனியா நாட்டு மன்னர். இவர் இளமையிலேயே நிறைந்த வீரமும், பிற நாடுகளை வெற்றி கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் கொண்டிருந் தார். தம் தந்தை பிலிப் அண்டை நாடு களுடன் போராடி வெற்றி பெற்று வரு வதைக் கண்ட அலெக்சாந்தர், “நான் போரிட்டு வெல்வதற்கு ஒரு நாடும் வைக் காமல் எல்லா நாடுகளையும் என் தந்தையே வென்று வருகிறாரே!" என்று ஏங்கினாராம். இவருடைய வீரத்தையும், ஆர்வத்தையும், ஆற்றலையும் தூண்டிவிட்டவர் இவருடைய ஆசிரியரான அரிஸ்டாட்டில் (த.க.) என் பவராவார். அலெக்சாந்தர் தம் இருபதாம் வயதில் தந்தையை இழந்தார். நாட்டில் பல குழப் பங்கள் உண்டாயின. அலெக்சாந்தர் தம் போர்த் திறமையால் குழப்பங்களையும், கலகங்களையும் அடக்கி கிரீஸ் நாடு முழு வதற்கும் அரசரானார். உள்நாட்டில் அமைதியை நிலைநாட்டிய பின் அலெக்சாந்தரின் நோக்கம் அண்டை நாடுகளின்மேல் சென்றது. பாரசீகப் பேரரசின் பகுதிகள் பலவற்றைக் கைப் பற்றினார். எகிப்து நாட்டையும் வென் றார். அங்குத் தம் பெயரால் அலெக்சாந் திரியா என்னும் நகரத்தை நிறுவினார். பிறகு தம் பெரும்படையுடன் கிழக்கு நோக்கிப் புறப்பட்டார். ஆசிய நாடுகள் பலவற்றை வென்று கி.மு.327-ல் இந் தியாவின் வடமேற்கு எல்லையை அடைந் தார். இந்தியாவில் புரு வமிச மன்னர் ஒருவரை ஜீலம் ஆற்றங்கரையில் தோற் கடித்தார். போரஸ் என்று அழைக்கப் பட்ட அந்த மன்னரின் வீரத்தை மெச்சி அலெக்சாந்தர் தாம் வென்ற நாட்டை அவரிடமே ஒப்படைத்தார். அலெக்சாந்தரின் நோக்கம் நாடு பிடிப் பதுமட்டும் அன்று. இவர் ஐரோப்பா அலெக்சாந்தரின் உருவச்சிலை