பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்டார்க்டிகா

31

அன்டார்க்டிகா: பூமியின் தென் துருவத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதிக்கு அன்டார்க்டிகா என்று பெயர். அன்டார்க் டிகா மிகப் பெரியதொரு கண்டம். இது ஆஸ்திரேலியாவைவிடப் பெரியதாக இருக் கிறது. பனியும், குளிரும் இங்கே அதிகம். பனிச் சூறாவளிகள் தொடர்ந்து வீசும். எங்கு பார்த்தாலும் பனிக்கட்டிகள்; பனி நூற்றுக்கணக்கான மைல்கள் பனிப் பரப்பாகவே இருக்கும். தரையைக் கண்ணால் பார்க்கவே முடியாது. இங்குக் கோடைக்காலத்திலும் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகவே இருக்கும். மலைகள். நமக்கு அரை நாள் பகல், அரைநாள் இரவு. அன்டார்க்டிகாவில் ஒரு பெரிய அதிசயம் என்ன தெரியுமா? அங்கு அரை ஆண்டு பகல், அரை ஆண்டு இரவு! ஆம். ஆறு மாதம் தொடர்ந்து சூரியன் வானத் தில் தெரிந்து கொண்டே இருக்கும். நடு இரவிலும் சூரியன் தெரியும். அடுத்து ஆறு மாதம் ஒரே இரவுதான். சூரியனே தெரியாது. அன்டார்க்டிகாவில் மனிதர் வாழ்வ தில்லை. பெரிய விலங்குகளும் வாழ்வதில்லை. சிறு பூச்சி வகைகளும், பாசம், காளான் இவை போன்ற சிறு தாவரங்களுமே வாழ் கின்றன. ஆனால் இவ்வளவு குளிரிலும் ஒரு வகைப் பறவை அங்கு வாழ்கிறது. அது தான் பெங்குவின் (த.க.) என்பது. அன்டார்க்டிகாவைச் சமுத்திரம் சூழ்ந் திருக்கிறது. இதன் நீர் மிகவும் குளிர்ந்து இருக்கும். திமிங்கிலம் (த.க.), சீல் (த.க.) முதலிய விலங்குகளும் கண்ணுக்குத் தெரி யாத வேறு பல சிறு உயிரினங்களும் இதில் வாழ்கின்றன. குளிர்காலத்தில் இந்தச் சமுத்திரமும் உறைந்து பனிக்கட்டியாகி விடும். உள்ளன. அன்டார்க்டிகாவில் பல மலைகள் இவற்றின் சிகரங்களில் சில 10,000 அடிக்கு மேலும் உயர்ந்து இருக் கின்றன. எல்லாம் பனி மூடிய மலைகள்; பனி மூடிய சிகரங்கள். குளிர்மிகுந்த இந்த இடத்தில்கூட எரிமலைகள் இருக்கின்றன என்றால் அதிசயமில்லையா? ஆம்! உள்ளேயே எரிந்துகொண்டு இருக்கும் இந்த எரிமலை கள் சில சமயம் வெளியேயும் நெருப்பைக் கக்கும். அன்டார்க்டிகாவில் நிலக்கரி கிடைக் கிறது. உயிரினங்கள், தாவரங்கள் பல வற்றின் உருவங்கள் பனிக்கட்டிகளுக்கு 31 அடியில் புதைந்தும் பதிந்தும் கிடக்கின்றன. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பிரதேசத்தில் செழிப்பான காடுகளும், உயிரினங்களும் இருந்திருக்க வேண்டும் என்று இவற்றின் மூலம் தெரிகிறது. ஆனால், இன்று அன்டார்க்டிகா புல் பூண்டுகூட முளைக்கமுடியாத நிலமாக இருக்கிறது. இங்கு நிலக்கரி போன்ற தாதுப்பொருள் கள் கிடைத்தாலும் அவற்றைத் தோண்டி எடுத்துப் பயன்படுத்துவது கடினம். நிலத்தை ஆராய்ந்து என்ன என்ன பொருள் கள் கிடைக்கும் என்று தெரிந்து கொள் ளவே பலர் அங்குப் போகிறார்கள். உறைபனி, கடுங்குளிர், பலத்த பனிப் புயல் போன்ற பல இடையூறுகளையும், இன் னல்களையும் பொறுத்துக் கொண்டு சிலர் தென் துருவத்தை யடைந்திருக்கிறார்கள். 1895-ல் கிறிஸ்ட்டென்ஜென் ( Christen- gen) என்னும் நார்வே நாட்டினர் கப்பலில் சென்று அன்டார்க்டிகா கண்டத்தில் முதன் முதல் அடி வைத்தார். பிறகு 1911ஆம் ஆண்டில் அதே நாட்டினரான ஆமுண்ட் சென் (Amundsen) முதன் முதல் தென் துருவத்தை அடைந்தார். அதன்பின் 35 நாள் கழித்து ராபர்ட் ஸ்காட் என்னும் ஆங்கிலேயர் அங்குச் சென்றார். ஸ்காட்டும் அவர் தோழர்களும் திரும்பிவரும் வழியில் பனியில் சிக்கி உயிர் இழந்தனர். 1929-ல் பர்டு (Byrd) என்ற அமெரிக்கர் அன்டார்க் டிகாவை விமானம் மூலம் பறந்து கடந் தார். இப்போது பல நாட்டு விஞ்ஞானிகள் தம் ஆராய்ச்சி நிலையங்களை இங்கு அமைத் துக்கொண்டு ஆராய்ச்சிகள் செய்து வரு கின்றனர்.