பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஜந்தா - ஆக்சிஜன்

33

RAFL 0000000

a Can SUML அஜந்தா குகைக் கோயில் ஒன்றின் முகப்புத் தோற்றம் போதிசத்துவர் ஓவியம் அஜந்தா: பழங்காலத்தில் இந்தியா வின் பல பகுதிகளில் பாறைகளைக் குடைந்து கோயில்களை அமைத்திருக்கிறார்கள். இவற் றுக்குக் குகைக் கோயில்கள் என்று பெயர். சில குகைக் கோயில்களில் அழகான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. உளியை யும் சுத்தியையும் மட்டுமே கொண்டு அவை செதுக்கப்பட்டுள்ளன. உள்புறம் உள்ள சுவர்களில் கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளன. பல நூறு ஆண்டுகள் ஆகியும் அவை இன்னும் அழியாமல் இருக்கின்றன. மகாராஷ்டிரத்தில் ஒளரங்கபாத் துக்கு 65 மைல் தொலைவில் அஜந்தா என்னும் ஓர் ஊர் இருக்கிறது. இதற்குச் சுமார் இரண்டு மைல் தொலைவில் சில குன்றுகள் உள்ளன. இவற்றின் சரிவு களில் சில குகைகள் உள்ளன. இவை உலகப் புகழ்பெற்றவை. இவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பௌத்தர்களால் குடையப்பட்டவை. இங்கு மொத்தம் 29 குகைகள் இருக்கின்றன. இக்கோயில்களின் உள்சுவர்களில் அழகிய சுதை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சுண்ணாம்புச் சாந்தைச் சுவரின்மேல் பூசி, அது ஈரமாயிருக்கும்போதே அதன் மேல் ஓவியம் தீட்டியுள்ளனர். அதனால்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்த ஓவியங்கள் மறையவில்லை. புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையே இங்கு ஓவியங் களாகத் தீட்டியிருக்கிறார்கள். குகைகளில் அழகிய புத்தர் சிலைகளையும் காணலாம். 33 ஓவியம் ஒளி முதல் குகையில் உள்ள போதிசத்துவர் உலகப்புகழ் பெற்றது. இதில் யும் இருளும் கலந்துள்ளதைப் போன்ற ஒரு தோற்றம் அமைந்துள்ளது. மேலும் பல வகையான காட்சிகளைக் காட்டும் ஓவியங்கள் இக்குகைகளில் தீட்டப் பட்டுள்ளன. எழில் மிக்க சிற்பங்களும், ஓவியங்களும் கொண்ட அஜந்தா இந்தி பண்டையக் கலைத்திறமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. யாவின் ஆக்சிஜன் : மூச்சு விடாமல் நம்மால் உயிர்வாழ முடியாது. நாம் மூச்சை உள்ளே இழுக்கும்போது காற்று உள்ளே போகிறது. அக்காற்றில் பல வாயுக்கள் கலந் துள்ளன. அவற்றுள் ஆக்சிஜனும் ஒன்று. இந்த ஆக்சிஜன்தான் நுரையீரலுக்குள் சென்று இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. நாம் காற்றுடன் ஆக்சிஜனை உள்ளே இழுத்து, கார்பன்டையாக்சைடை வெளி விடுகிறோம். நமக்கு மட்டும் அல்ல, விலங்கு களும், தாவரங்களும் உயிர்வாழ்வதற்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மீன் முதலிய நீர்வாழ் உயிர்கள் எப்படி உயிர் வாழ் கின்றன தெரியுமா? நீரிலும் ஆக்சிஜன் கரைந்துள்ளது. நீரில் கரைந்துள்ள ஆக்சி ஜனை உள்ளிழுத்துதான் அவை உயிர் வாழ்கின்றன. ஆக்சிஜன் ஒரு தனிமம் (த.க.). இதற்கு நிறமில்லை, மணமில்லை, சுவையும் இல்லை. இது தண்ணீரில் கரையக்கூடியது. இவ் வாயுவுக்கு அதிகமான குளிரூட்டினால் இது