பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகாய கங்கை - ஆங்கிலம்

35


பிறகு அதைவிடப் பெரிய ஆகாயக் கப்பல் களையும் ஜெர்மானியர் கட்டினர். பிரிட் டனிலும் பெரிய ஆகாயக் கப்பல்கள் கட் டப்பட்டன. அமெரிக்கர்கள் கட்டிய ஆகாயக் கப்பல் ஒன்று 782 அடி நீளம், 132 அடி குறுக்களவு இருந்தது. அது மணிக்கு 85 மைல் வேகத்தில் பறந்தது. அமெரிக்கர்கள் தீப்பற்றி எரியாத ஹீலியம் வாயுவை ஆகாயக் கப்பல்களில் நிரப்பி இருந்தார்கள். ஜெர்மானியக் கப் பல்களிலும், பிரிட்டிஷ் கப்பல்களிலும் எனிதில் தீப்பற்றும் ஹைடிரஜன் நிரப்பப் பட்டிருந்ததால் அவர்களுடைய ஆகாயக் கப்பல்களில் சில தீப்பற்றிவெடித்து எரிந்து போயின. இக்காரணத்தால்ஆகாயக் கப்பல் கட்டும் தொழில் வளர்ச்சியடைய வில்லை. மேலும், ஆகாய விமானம் கண்டு பிடிக்கப்பட்டவுடன் ஆகாயக் கப்பலின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. ஆயினும் வானிலை ஆராய்ச்சியில் இன்றும் ஆகாயக் கப்பல்கள் பயன்பட்டு வரு கின்றன. ஆகாய கங்கை : வானத்தில் எவ் வளவோ நட்சத்திரங்கள் இருக்கின்றன. நம் கண்ணுக்குத் தெரிவன சில ஆயிரம் இருக்கும். இவை தவிர நம் கண்ணுக்குத் தெரியாமல் பல கோடிக் கணக்கான நட் சத்திரங்கள் வானத்தில் கூட்டங் கூட்ட மாக இருக்கின்றன. தொலை தூரத்தில் உள்ள பொருள்களைப் பார்க்க உதவும் டெலிஸ்கோப்பு (த.க.) என்னும் கருவி யின் வழியாகத்தான் இவற்றைப் பார்க்க முடியும். இத்தகைய நட்சத்திரக் கூட்டங் களில் ஒன்று ஆகாய கங்கை என்பது. இக்கூட்டத்தில்தான் நம் சூரியமண்டலம் உள்ளது. வானத்தில் காணப்படும் ஆயிரக்கணக் கான நட்சத்திரங்களும் ஆகாய கங்கை யைச் சேர்ந்தவைதாம். ஆகாய கங்கை யாகிய நட்சத்திரக் கூட்டம் வட்டவடிவ மாக ஒரு 'பன்' ரொட்டியைப் போலக் காணப்படுகின்றது. ஆகாய கங்கைக்கு அடுத்துள்ள மற்றொரு நட்சத்திரக் கூட் டத்துக்கு ஆண்டிரோமீடா என்று பெயர். வானத்தின் தொலைவுகளை எப்படிக் கணக்கிடுகிறர்கள் தெரியுமா? மைல் கணக் கில் அவற்றை அளக்க முடியாது. பூமியின் மேல் உள்ள தொலைவுகளை மைலில் அளப்பதுபோல வானத் தொலைவுகளை ஒளியாண்டு என்ற அளவையினால் அளக் . கின்ஞர்கள். ஒளி ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் பாய்ந்து செல்கின்றது. இந்தக் ஓராண்டில் கணக்கில் அது 5.86,569 கோடி மைல் பாய்கின்றது. இத் தொலைவுக்குத்தான் ஓர் ஒளியாண்டு என்று பெயர். ஒரு விமானம் மணிக்கு 1,000மைல் வேகத்தில் தொடர்ந்து பறந்து செல்லுமா ஆகாய கங்கையின் மையத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டம் 35 யின் ஆகாய கங்கையைக் குறுக்கே கடந்து செல்ல அதற்கு எண்ணூறு கோடி ஆண்டுகள் பிடிக்கும்! இந்த நட்சத்திரக் கூட்டத்தின் மையத்துக்கு 20,000 ஒளி யாண்டுத் தொலைவில் நம் சூரிய மண் டலம் உள்ளது. இரவில் நாம் காணும் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் இக்கூட் டத்தைச் சேர்ந்தவைதாம். பூராடம், உத் தராடம் என்ற நட்சத்திரங்கள் ஆகாய கங்கையின் மையத்தில் உள்ளன. ஆகாய கங்கையில் உள்ள பல்லாயிரக் கணக்கான நட்சத்திரங்கள் அத்தனையும் கடும் வேகத்தில் ஓடிக்கொண்டே இருக் கின்றன. நம் சூரியனையும், அதைச் சுற்றி வரும் பூமி, புதன், வெள்ளி முதலிய கோள்களையுங் கொண்ட சூரியமண்டல மும் ஆகாய கங்கையின் மையத்தைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கின்றது. தடவை அது அப்படிச் சுற்றிவர அதற்கு . 22,50,00,000 ஆண்டுகள் செல்லும். ஆகாய கங்கையே வெகு வேசுமாக, வண்டிச் சக்கரம் போலச் சுழன்று கொண் டிருக்கின்றது. அது மட்டுமா? விண்வெளி யில் அது வினாடிக்குப் பல்லாயிரம் மைல் வேகத்தில் எங்கோ பறந்தோடிக் கொண் டிருக்கின்றது! ஒரு ஆங்கிலம் : சிறந்த உலசு மொழி களில் ஆங்கிலமும் ஒன்று. இது பிரிட்டிஷ் மக்களின் தாய் மொழி. அமெரிக்கா, கானடா, ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இது