பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

ஆங்கிலம் - ஆங்கோர்

தேசீய மொழியாக வழங்குகின்றது. சில நாடுகளில் ஆங்கிலமே தாய் மொழியாக வும் உள்ளது. உலக நாடுகள் பலவற்றில் இது பயிற்சிமொழியாகவும் உள்ளது. உலகம் முழுவதிலும் வாணிகத்தில் இம் மொழியைத்தான் பெரும்பாலும் கையாளுகிறார்கள். ஆங்கிலம் இந்தோ-ஜெர்மானிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இங் கிலாந்தின் மீது 1,500 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில்கள், சாக்சன்கள், ஜூட்டு கள் ஆகிய மக்கள் படையெடுத்தனர். அவர்கள் பேசிய மொழிதான் ஆங்கிலம். காலப்போக்கில் இம்மொழி பல பாடுகளுக்கு உட்பட்டது. மாறு நார்மானியர் 1066-ல் இங்கிலாந்தின்மேல் படையெடுத் தனர். அவர்கள் பேசிய பிரெஞ்சு மொழி யிலிருந்து நூற்றுக் கணக்கான சொற்கள் ஆங்கிலத்தில் நுழைந்து இடம் பெற்றன. நாளடைவில் ஆங்கிலேயர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியதாலும், விஞ்ஞானம் வளர்ந்து வந்ததாலும் லத்தீன், கிரேக்கம் போன்ற பழைய ஐரோப்பிய மொழிகளின் கலப்பும் ஆங்கிலத்துக்குக் கிடைத்தது. நாள்தோறும் புதுப்புது அயல்மொழிச் சொற்கள் இம்மொழியில் இடம்பெற்று வருகின்றன. மனித அறிவின் வளர்ச்சிக்கு ஏற்பத் தானும் விரிவடையும் தனிச் சிறப்பு ஆங்கிலத்துக்கு உண்டு. எக்கருத்தையும் சுருக்கமாகவும், அழகாகவும் எடுத்துரைக்கு மாறு இம்மொழி வளர்ச்சியடைந்திருக் கிறது. ஆங்கில மொழியில் மொத்தம் 26 எழுத் துகளே உள்ளன. சென்ற ஆயிரம் ஆண்டு களில் ஆங்கில எழுத்துகளின் வரி வடிவத் திலும், ஒலி வடிவத்திலும் பல பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. பண்டைக் காலத்து ஆங்கிலத்தை இக்காலத்தில் புரிந்து கொள்ளுவது எளிதல்ல. ஆங்கிலத்தின் வரலாற்றுக் காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிப்பது உண்டு. 1100 வரையில் வழங்கிவந்த மொழியைப் பழைய ஆங்கிலம் என்றும், 1100 முதல் 1500 வரை வழங்கிய மொழியை இடைக் கால ஆங்கிலம் என்றும், 1500க்குப் பிறகு வழங்கும் மொழியை நவீன ஆங்கிலம் என் றும் கூறுவர். உலகப் புகழ் பெற்ற ஷேக்ஸ் பியர், மில்ட்டன் ஆகியவர்களைப் போன்ற மாபெரும் கவிஞர்கள் இம்மொழிக்குப் பல புதிய சொற்களைப் படைத்து அளித்தனர். இதில் இலக்கண விதிகளின் கட்டுப்பாடு கள் குறைவு ஆகையால் புலவர்களும், விஞ்ஞானிகளும், கலைஞர்களும் புதுப்புதுச் சொற்களைப் புனைந்துகொள்ள முடிகிறது. இது இம்மொழியின் மற்றும் ஒரு சிறப் பாகும். உலகில் இப்போது 27 கோடி மக்களுக்குமேல் ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆங்கோர்: பல நாடுகளில் பழைய நகரங்களும், சிற்றூர்களும் மண்ணில் புதையுண்டு கிடப்பதைக் கண்டுபிடித் திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் பூம்பு கார் அல்லது காவிரிப்பூம்பட்டினம் என் பது அப்படிப்பட்ட நகரங்களுள் ஒன்று. தென் கிழக்கு ஆசியாவில் கம்போடியா என்று ஒரு நாடு உள்ளது. பழங்காலத்தில் அதற்குக் காம்போஜம் என்றும், காம்பூஜம் என்றும் பெயர். இதன் தலைநகராக இருந் ததுதான் ஆங்கோர். இங்கு மிகச் சிறந்த நாகரிகம் ஒன்று செழித்து வளர்ந்திருந் தது. அதற்குக் கெமர் நாகரிகம் என்று பெயர். காம்போஜத்துக்கும் தமிழ்நாட் டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காம் போஜ மன்னர்கள் ஆங்கோர் என்ற நகரத் தில் ஆங்கோர்வாட் என்ற மிக அழகிய, அற்புதமான கோயில் ஒன்றை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டியுள்ளனர். இந் நகரமும், இக்கோயிலும் நூறு ஆண்டு கள் காட்டில் மறைந்து கிடந்தன. சென்ற நூற்றாண்டில்தான் இவற்றைக் கண்டு பிடித்தனர். ஆங்கோர் பெரிய மதில்களாலும், அகழி யாலும் சூழப்பட்டிருந்தது. இங்கு ஏராள மான அரண்மனைகளும், மண்டபங்களும், கோபுரங்களும் சிதைந்து கிடக்கின்றன. ஆங்கோர்வாட் கோயில் ஒரு மைல் சதுர முள்ளது. இக்கோயிலில் எங்கு பார்த் தாலும் கண்கவரும் சிற்பங்களும், அழகிய வண்ண ஓவியங்களும் காட்சியளிக்கின்றன. இவை தமிழ் நாட்டிலுள்ள சிற்பங்களையும் ஓவியங்களையும்பெரும்பாலும் ஒத்துள்ளன. இக்கோயிலை எழுப்பியவர்கள் மக்கள். கெமர் கெமர் நாகரிகம் இப்போது அழிந்து மறைந்துவிட்டது. இப்போது அரசினர் காடுகளை அழித்து நகரத்தையும், கோயிலையும் பழுது பார்த்து அவற்றின் அழகை ஓரளவு உலகிற்கு வெளிப்படுத்தி யுள்ளனர். ஆங்கோர்வாட் கோயில் DALA