பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

ஆசியா

ணெண்ணெயும் கிடைக்கின்றன. பட்டு உற்பத்தியாகிறது. ஆசாமிய மக்களுள் பெரும்பாலார் இந்துக்கள். மற்றவர்கள் சீக்கியம், இஸ் லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சார்ந்தவர்கள். இங்கு ஆதிக்குடிகளும் வசிக்கின்றனர். மக்கள் ஆசாமிய மொழி யையும் வங்காளியையும் பேசுகின்றனர். ஆசாமிய நடனம் புகழ்பெற்றது. ஆசாமில் மலைகள் நிறைந்திருப்பதால் இங்குச் சாலை கள் குறைவு. ஆறுகள் போக்குவரத்துக்கு உதவுகின்றன. இம் மாநிலத்தின் தலை நகரம் ஷில்லாங். கௌஹாத்தி இங்குள்ள மற்றொரு பெரிய நகரம். மாநிலத்தின் பரப்பளவு 78,529 ச.மைல்; மக்கள் தொகை 1,22,09,330(19 1). கண்டங்களில் எல்லாம் ஆசியா : மிகப் பெரியது ஆசியாதான். இதன் பரப்பளவு 180 இலட்சம் சதுர மைல். இக்கண்டம் வடதுருவத்திலிருந்து பூமத்திய ரேகை வரை பரவியுள்ளது. மேற்கேயுள்ள யூரல் மலைத் தொடர் ஐரோப்பாவை இதனின்றும் பிரிக்கின்றது. இத்தொடரின் நீளம் 2,000 மைல்.ஆசியா வுக்கு வடக்கில் ஆர்க்டிக் சமுத்திரம் உள் ளது. அதன் பெரும்பகுதி எப்போதும் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கும். கிழக்கே பசிபிக் சமுத்திரம் பல்லாயிரம் மைல் பரந்துள்ளது. தெற்கில் இந்திய சமுத்திரம் இருக்கிறது. ஆசியாவின் தெற்கே அரேபியா, இந் தியா, மலேசியா, இந்தோ-சீனா ஆகிய தீபகற்பங்கள் உள்ளன. கிழக்கே ஜப் பானியத் தீவுகளும், தென்கிழக்கில் கிழக் கிந்தியத் தீவுகளும், பிலிப்பீன் தீவுகளும் உள்ளன. இந்தியாவை அடுத்துத் தெற் கில் இலங்கைத் தீவு உள்ளது. இந்தியா வுக்கு வடமேற்கில் 20,000 அடிக்கு மேலும் உயரமான பீடபூமி ஒன்று இருக்கிறது. அதன் பெயர் பாமீர். இதை 'உலகத்தின் கூரை' என்று சொல்வார்கள். இதிலிருந்து நான்கு புறங்களிலும் மலைத்தொடர்கள் பிரிகின்றன. அவற்றுள் இமயமலைத் தொடரும் ஒன்று. உலகப் புகழ் பெற்ற எவரஸ்ட் (29,028 அடி உயரம்), கைலாயம், கௌரி சங்கர் முதலிய மிகவும் உயரமான சிகரங்களும் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளன. ஆசியாவின் மழைவளம், தட்பவெப்பம், விளைபொருள் கள், மக்கள் பண்பாடு, போக்குவரத்து, வாணிகம் ஆகியவற்றில் காணப்படும் வேறுபாடுகளுக்கு மலைத்தொடர்களும் ஒரு காரணம். மலைகளை அடுத்துப் பெரிய பெரிய பீடபூமிகளும், ஆறுகளை யடுத்துச் செழிப்பான சமவெளிகளும் உள்ளன. ஆசியாவில் எப்போதும் பனி கிடக்கும். மத்திய ஆசியா, அரேபியா, வட உறைந்து வட இந்தியா இங்கெல்லாம் பாலைவனங் கள் இருக்கின்றன. இக்கண்டத்தில் பல பெரும் ஆறுகள் ஓடுகின்றன. ஓபு, யெனிசே, லேனா என்ற ஆறுகள் ஓடி ஆர்க்டிக் சமுத்திரத்தில் கலக் கின்றன. ஹுவாங் ஹோ, யாங்க்ட்ஸீ கியாங் என்பவை பசிபிக் சமுத்திரத்தை அடைகின்றன. மேக்காங் ஆறு தென் கிழக்கு ஆசியாவில் ஓடித் தென் சீனக் கடலில் கலக்கின்றது. டைக்ரிஸ், யூப்ரட் டீஸ், சிந்து, கங்கை ஆகிய ஆறுகளின் சமவெளிகள் மிகவும் செழிப்பானவை. வெயில் ஆசியாவில் காணப்படும் தட்பவெப்ப வேறுபாடுகளைப் போல வேறு எங்கும் காண்பது அரிது. சைபீரியாவின் உறை பனிக் கொடுமையையும், அரேபியாவின் கொடுமையையும் தாங்கவே முடியாது. அரேபியாவில் ஓராண்டில்பெய் யும் மழையின் அளவு 10 அங்குலத்துக்கும் குறைவு. இந்தியாவில் செரபுஞ்சி என்ற இடத்தில் ஓராண்டில் சராசரி 429 அங் குலம் மழை பெய்கிறது. உலகிலேயே மிக அதிகமாக மழை பெய்யும் இடம் இது தான். ஆசியாவில் காட்டு வளம் அதிகம். தேயிலை, ரப்பர், மிளகு, ஏலக்காய், முந் திரி, சணல், பட்டு ஆகியவற்றின் உற்பத்தி இக்கண்டத்துக்கான தனிச் சிறப்பு. இங்கு ஆயிரக்கணக்கான விலங்கு வகைகளும், பறவை இனங்களும் வாழ்கின்றன. ஆர்க் டிக் கடற்கரைகளில் வெண்துருவக் கரடி, குழிநரி, சீல், வால்ரஸ், ரேய்ண்டியர் என்ற பனிமான் இவற்றைக் காணலாம். பாலைவனங்களில் ஒட்டகங்கள் வாழ்கின் றன. மலைகளிலும் காடுகளிலும் சிங்கம், யானை, புலி, சிறுத்தை, கரடி, காண்டா மிருகம், யாக் மாடு, காட்டெருமை, மான், குரங்கு வகைகள் ஆகியவை காணப்படு கின்றன. கண்ணைப் பறிக்கும் வண்ணப் பறவை இனம் ஆசியாவில் ஆயிரம் ஆயிரம் உண்டு. தென்மேற்கு ஆசியாவிலும், இந்தியா விலும் பர்மாவிலும் பெட்ரோலியம் (த.க.) கிடைக்கின்றது. தென் கிழக்கு ஆசியாவில் வெள்ளீயம் வெட்டி எடுக் கிறார்கள். இக்கண்டம் முழுவதிலும் மலைகள், பீடபூமிகள், காடுகள் நிறைந்துள்ளன. இதனால் இங்கு நெடுஞ்சாலைகள் குறைவு. பழங் காலத்திலிருந்தே போக்குவரத்து கடல் வழியாகத்தான் சிறப்பாக நடை பெற்று வருகின்றது. ஆசியாவின் பசிபிக் கரையிலுள்ள விளாடிவாஸ்ட்டாக் துறை முகப்பட்டினத்தையும், ரஷ்யத் தலைநக ரான மாஸ்க்கோவையும் டிரான்ஸ்- சைபீ ரெயில்பாதை இணைக்கிறது. இதன் பெரும்பகுதி சைபீரிய வெளியின் ரியன்