பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

ஆசியா

40 E-S EFT 177 CA DE ஆசியா உலகிலேயே மிக அழகான கட்டடம் என்று கருதப்படும் தாஜ்மகால். இது மொகலாய மன்னர் ஷாஜகானால் ஆக்ராவில் கட்டப்பட்டது. இதைக் கட்டி முடிப்பதற்கு 21 ஆண்டுகள் ஆயின. பிருந்தே மிகச் சிறந்த இலக்கியங்கள் தோன்றியுள்ளன. சமஸ்கிருதத்தில் ஆக்கப்பட்டுள்ள இராமாயணம், மகா பாரதம், சாகுந்தலம் ஆகியவையும், தமி ழில் உள்ள சங்க இலக்கியமும், திருக்குற ளும், கம்பர் எழுதிய இராமாயணமும், பாரசீக மொழியில் இயற்றப்பட்டுள்ள காப்பியமான ஷாநாமாவும், உமர்கை யாம் எழுதிய பாட்டுகளும் உலகப் புகழ் பெற்றவை. ஆசியாவில் பல நாகரிகங்கள் ஒன்றோ டொன்று கலந்து உள்ளன. ஆகையால் ஆசியா பல கலைகளுக்குப் பிறப்பிடமாக இருந்து வருகின்றது. மண்பாண்டங்கள் செய்தல், கட்டடக்கலை, சிற்பம், ஓவியம், பொன்னாலும் மணியாலும் உருவங்கள் வடித்தல் இவை யாவும் ஆசியாவுக்குச் சிறப்பளிக்கும் பழங் கலைகள். சீனரும், இந்தியரும், அரேபியரும், கால்டீயரும் வான ஆராய்ச்சியில் புகழ்பெற்றிருந்தனர். கோள்களையும் இருபத்தேழு நட்சத்திரங் களையும் அவர்கள் அறிந்திருந்தனர். வட இந்தியாவில் பாடலிபுத்திரத்தில் கி.பி. 476-ல் பிறந்தவரான ஆரியபட்டர் பூமி சுழல்வதையும், பூமியின் வட துருவம் மாறிக் கொண்டே வருவதையும் கணித்து உரைத்தார். 1 முதல் 9 வரையிலான எண் களையும், '0' என்ற குறியையும் உயர் கணிதத்தில் முதன் முதலில் இவர் பயன் படுத்தினார். கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனியர் மாபெரும் கட்ட டங்களை எழுப்பினர். பிறகு பாரசீகர் சிற் பக் கலையில் சிறப்புற்றனர். மொகலாயர் வியக்கத்தக்க கட்டடங்களைக் கட்டினர். ஆக்ராவில் மொகலாய மன்னர் ஷாஜ கானால் கட்டப்பட்ட தாஜமகால் உலகப்புகழ்பெற்றது. தென் இந்தியாவில் பல்லவரும் சோழரும் பாண்டியரும் எழில்மிக்க கோயில்களை எழுப்பினர்; மலைகளைக் குடைந்து கோயில்கள் அமைத்தனர். மாமல்லபுரத்துக் கற் கோயில்கள், தஞ்சைப் பெரிய கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆகியவை கட்டடக்கலை, சிற்பம் இவற்றில் ஆசியாவில் தமிழகம் எய்தியிருந்த உயர்வை நன்கு விளக்குகின்றன. இந்திய நாகரிகமும் பண் பாடும் மத்திய ஆசியா, தென் கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளுக்கும் தரை வழி யாகவும், கடல் வழியாகவும் பரவின. சீனாவிலும், ஜப்பானிலும் பல மன்னர் பரம்பரைகள் எழுந்து கலைகளையும் மொழி யையும் வளர்த்தன. இவ்விரு நாடுகளிலும் பெளத்த சமயம் நுழைந்த பிறகு கட்டடக் கலையிலும், ஓவிய முறைகளிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன. பல இரண்டாம் உலக யுத்தத்துக்கு முன்பு ஆசிய நாடுகள் ஐரோப்பிய நாடு களுக்கு அடிமைப்பட்டிருந்தன. இப்போது எல்லா நாடுகளும் சுதந்தரம் அடைந்து விட்டன. பட்டவர்கள் உலக மக்களில் பாதிப் பேருக்கு மேற் ஆசியாவில்தான் வாழ் கின்றார்கள். சீனாவின் மக்கள் தொகை 75 கோடி; இந்தியாவில் 50 கோடி மக்கள் உள்ளனர். ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும், எண்ணையும், எழுத்தையும், சமய ஒளியை யும் ஆசியா கொடுத்து உதவிற்று. அந் நாடுகளினின்றும் விஞ்ஞானம், தொழில் நுட்பம், புதிய அரசியல் முறைகள், புதுப் புதுக் கருத்துகள் ஆகியவற்றைத் தான் ஏற்றுக்கொண்டு வருகின்றது. உலகிலேயே மிகப் பெரிய கண்டம் ஆசியா. உலகிலேயே மிக உயரமான இமயமலை இந்தியாவில் உள்ளது. உலகிலேயே மிக நீளமான ரெயில்பாதை ரஷ்யாவில் உள்ளது. உலகிலேயே மிக அதிகமாக மழை பெய்யும் இடம் செரபுஞ்சி. இது இந்தியாவில் உள்ளது. உலகிலேயே முதன்முதல் மனித இனம் தோன்றியது ஆசியாவில்தான். உலக மக்களில் பாதிப்பேருக்கு மேல் ஆசியாவில்தான் வாழ்கிறார்கள்.