பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

ஆண்டர்சன் - ஆண்டீஸ் மலைகள்


ஆண்டர்சன், ஹான்சு கிறிஸ்தியன் (1805-1875) : உங்களைப் போன்ற குழந் தைகளுக்காக ஹான்சு கிறிஸ்தியன் ஆண் டர்சன் என்பவர் பல கதைகளையும் பாடல் களையும் எழுதியுள்ளார். இவர் டென் மார்க் நாட்டில் 1805ஆம் ஆண்டில் பிறந் தார். இவருடைய தந்தை செருப்புத் தைத் துப் பிழைத்தவர். ஓய்வு நேரங்களில் அவர் ஆண்டர்சனுக்கு நல்ல நல்ல கதைகள் சொல்வாராம். ஆண்டர்சன் சிறு வயதில் மிகவும் கூச்ச முள்ளவர். படிப்பைவிட ஆட்டமும் பாட்டுமே இவருக்கு மிகவும் பிடித்தவை. இவருக்குப் படிப்பு ஏறவில்லை.' வேறு தொழிலும் கற்க முடியவில்லை. அதனால் தம் ஊரைவிட்டே வெளியேறினார் . இவர் கோப்பன்ஹேகன் நகருக்குச் சென்றார். அங்கு வேலையே கிடைக்கவில்லை. சில ஆண்டுகள் சென்றன. ஆண்டர்சன் கதை எழுதத் தொடங்கினார். இவர் எழுதிய கதைகளைப் பலர் விரும்பிப் படித்து மகிழ்ந்தனர். இவர் திறமையைக் கேட்டறிந்த டென்மார்க் மன்னர் இவருக் குப் பல உதவிகள் செய்தார். ஆண்டர்சன் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் பல இடங்களைச் சுற்றிப் பார்த் தார். பல கதைகளையும், பாடல்களையும் எழுதினார். இவர் எழுதிய கதைகள் உலகப் புகழ் பெற்றவை. தேவதைகளைப் பற்றி இவர் எழுதிய கதைகள் படிக்கப் படிக்கச் சுவை யாக இருக்கும். இவை உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்த்து எழுதப்பட் டுள்ளன. ஆண்டாள்: மார்கழி மாதம் காலை நேரங்களில் பாடும் திருப்பாவை, திரு வெம்பாவைப் பாடல்களைக் கேட்டிருப் பீர்கள். திருப்பாவைப் பாடல்களைப் பாடியவர் ஆண்டாள் ஆவார். பாண்டிய நாட்டிலுள்ள ஸ்ரீவில்லி புத்தூரில் பட்டர்பிரான் என்ற வைணவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருக்குப் பெரியாழ்வார் என்றும் பெய ருண்டு. இவருடைய வளர்ப்பு மகள்தாம் ஆண்டாள். இவர் இளமை முதலே கண்ணபெரு மான்மேல் மிக்க அன்பு கொண்டார். பெரி யாழ்வார் கண்ணனுக்குத் தொடுத்த மலர் மாலைகளை ஆண்டாள் தாம் சூடி அழகு பார்த்துப் பிறகு கண்ணனுக்கு அணிவித்த தால் இவருக்குச் 'சூடிக்கொடுத்த நாச்சி யார்' என்று மற்றொரு பெயரும் உண்டு. கண்ணன்மேல் கொண்ட அளவற்ற அன் பின் காரணமாக இவர் பல பக்திப் பாடல் கள் பாடியுள்ளார். ஆண்டாள்- கண்ண ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள ஆண்டாள் உருவச் சிலை பிரானையே தாம் மணக்கப் போவதாகக் கூறி, திருவரங்கம் சென்று, மணமகள் கோலத்துடன் கோயிலுக்குள் புகுந்து கண் ணனுடன் கலந்தார் என்பர். இவர் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டு எனலாம். இவருடைய பாடல்கள் பக்தி உணர்ச்சி மிகுந்தவை. ஆண்டீஸ் மலைகள்: உலகிலுள்ள மலைத்தொடர்களில் மிக நீளமானது ஆண்டீஸ் மலைத்தொடர்தான். இதன் நீளம் 4,500 மைல். இமயமலை உலகி லேயே மிக உயரமானது; ஆனால், இமய மலைத் தொடரின் நீளம் 1,500 மைல் தான். ஆண்டீஸ் மலைகள் தென் அமெரிக்கா வின் மேற்குக் கரையோரம் தொடர்ந்து செல்லுகின்றன. இம்மலைத்தொடர் சில இடங்களில் 50 மைல் அகலம் உள்ளது; சில இடங்களில் 500 மைல் அகலமும் உள்ளது. இது வெனிசூலா, கொலம்பியா, ஈக்வடார், பெரு, பொலிவியா, ஆர்ஜென் டீனா, சிலி ஆகிய நாடுகளினூடே செல்லு கின்றது. இம்மலைத்தொடரில் பல உயர மான சிகரங்கள் உண்டு. மிக உயர்ந்த சிகரத்தின் பெயர் அக்குன் காக்குவா. இதன் உயரம் 22,835 அடி. ஆண்டீஸ் மலைகள் தோன்றி 60 கோடி ஆண்டுகள் ஆயினவாம். இவற்றுள் எரி மலைகளும் உள்ளன. இங்குப் பூகம்பங்கள் அடிக்கடி ஏற்படும். மலைச் சாரல்களிலும், காடுகளிலும் பல கொடிய விலங்குகள் வாழ்கின்றன. தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு ஆகிய உலோகங்களின் தாதுக்கள்