பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதிக்குடிகள் - ஆதிச்சநல்லூர்

47


இங்குக் கிடைக்கின்றன. உலகத்திலேயே மிகவும் அகன்ற ஆறான ஆமெசான் இம் மலைகளில்தான் உற்பத்தியாகின்றது. ஆதிக்குடிகள்: மனித இனம் தோன்றிப் பல ஆயிரக்கணக்கான ஆண்டு கள் ஆகின்றன. காலப்போக்கில் அறிவு வளர வளர, மனிதன் நல்ல உணவு, நல்ல உடை, நல்ல வீடு இவற்றைப் பெற்று நலமாக வாழக் கற்றுக் கொண்டான்.' ஆனால், உலகில் பல இடங்களில் நாகரிக மில்லாத மக்கள் சிலர் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் விலங்குகளை வேட் டையாடிக்கொன்று தின்னுகிறார்கள். விலங் குகளின் தோல், பறவைகளின் இறகுகள், தழைகள் ஆகியவற்றால் ஆடைகள் செய்து அணிகிறார்கள். காடுகளிலும், மலைகளி லும் குடிசை கட்டிக் கொண்டு வசிக்கிறார் கள். சிலர் எங்கும் நிலையாகத் தங்காமல் இடம் விட்டு இடம் அலைந்து கொண்டிருக் கிறார்கள். இவர்கள் அனைவரும் ஆதிக்குடி கள் ஆவார்கள். ஆதிக்குடிகள் நாகரிகத்தில் மிகவும் பிற் பட்டிருந்தாலும் இவர்கள் வாழ்க்கையில் ஒழுங்கும், கட்டுப்பாடும் உண்டு. இவர்கள் கூட்டங் கூட்டமாகவே சேர்ந்து வாழ்கிறார் கள். ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு தலை வன் உண்டு. எல்லாரும் அவன் சொற் படியே நடக்கவேண்டும். அவன் பொது நலன்களைக் கவனிக்க வேண்டும். யாரும் குற்றங்கள் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தலைவனுக்கு முதியவர்கள் ஆலோசனை கூறுவர். ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் நடனம் 47 நாயாதிகள் என்ற ஒருவகை ஆதிக்குடிகள் ஆண்கள் வேட்டைக்குச் செல்வார்கள். பெண்கள் வீட்டு செய்வார்கள்; குழந்தைகளையும் வளர்ப் பார்கள். வேலைகளையெல்லாம் ஆதிக்குடிகளில் சிலர் சூரியனையும், சந் திரனையும் வணங்குவார்கள். இவர்களுக் குத் தெய்வங்களிடம் அச்சம் உண்டு. சிலர் இடி, மின்னல் போன்ற இயற்கை நிகழ்ச்சி களைத் தெய்வமாகவே நம்புகிறார்கள். தெய் வங்களுக்குப் பலி கொடுத்தால் தங்கள் நோய் நொடி தீர்ந்துவிடும் என்று சிலர் எண்ணுகிறார்கள். தெய்வங்களின் கோபத் தைத் தடுப்பதற்கு இவர்கள் மந்திர வாதிகளை நாடுவதுண்டு. இந்த நாகரிக காலத்திலும் ஆதிக்குடி களில் பலர் இந்தப் பழக்க வழக்கங்களைக் கைவிடவில்லை. ஆனால் இவர்களுள் சிலர் நாகரிக மக்களோடு பழகி வருகின்றனர். தாமும் துணிகள் நெய்யக் கற்றுக் கொண்டு வருகின்றனர். உழுது பயிரிடவும் சிலருக்குத் தெரியும். தொகை உலகில் ஆதிக்குடிகளின் குறைந்து வருகின்றது. இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் சில பகுதிகளில் இன்று ஆதிக்குடிகள் வாழ்ந்து வருகிறார்கள். ஆதிச்சநல்லூர்: தமிழ்நாடு மிகவும் பழமையானது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிறப்பாக, நாகரிகமாக வாழ்ந்தார்கள். மண்பாண்டங்கள் செய் யவும், நகைகள் செய்யவும், இரும்புக் கருவிகள் செய்யவும் அறிந்திருந்தார்கள். பழந் தமிழரைப் பற்றிய இச்செய்தி நமக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா? நிலத்தி னடியில் புதைபட்டுள்ள பொருள்களைத் தோண்டி எடுத்து ஆராயும் தொல்பொரு ளியல் அறிஞர்கள் குறிப்பிட்ட சில ஊர் களில் பெரிய பெரிய பள்ளங்கள் தோண் பழந்தமிழர்கள் டினார்கள். அங்கெல்லாம் வாழ்ந்து புதைத்து வைத்துப்போன அரிய பொருள்களை அவர்கள் கண்டெடுத் பல