பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆந்தை

49


திருப்பதி கோயில் ஆந்திரப் பிரதேசத்தில் பல மதங்களைச் சார்ந்தவர்களும் வாழ்கிறார்கள். இங்கு வழங்கும் முக்கிய மொழி தெலுங்கு. மக் களின் முக்கியத் தொழில் விவசாயம். கடப்பை மாவட்டத்தில் அழகான கம் பளங்கள் நெய்யப்படுகின்றன. (த.க.) இம்மாநிலத்தில் அப்பிரகம் மிகுதியாகக் கிடைக்கின்றது. விசாகப்பட் டினத்துக்கு அருகில் இரும்புத் தாது இருப் பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். விசா கப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தளம் இருக்கிறது. 1953ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிர தேசம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் தெலுங்கு மொழி பேசுவோர் வாழும் 11 மாவட்டங்களை ஒன்று சேர்த்து ஆந்திரப் பிரதேசத்தை அமைத்தார்கள். கர்நூல் இதன் தலைநக ராசு இருந்தது. ஐதராபாத் 1956ஆம் ஆண்டு வரை தனி ராச்சியமாக இருந்தது. பின்னர் ஆந்திரப்பிரதேசத்துடன் இணைக் கப்பட்டது. இப்போது ஆந்திரப் பிர தேசத்தின் தலைநகர் ஐதராபாத். தலங்கள் உள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் பல புண்ணியத் அவற்றுள் முக்கிய மாகக் குறிப்பிடத்தக்கது திருப்பதி. இம்மாநிலத்தின் பரப்பளவு 1,06,286 ச.மைல்; மக்கள் தொகை 3,59,83,447 (1961) ஆந்தை: உங்களில் பலர் ஆந்தை யைப் பார்த்திருக்க மாட்டீர்கள். ஏனெனில் இப்பறவை இரவில் மட்டுமே வெளியே வரும். இரவிலே இது அலறுவதைக் கேட்டிருக்கலாம். ஆந்தை யின் கண்கள் மிகப் பெரியவை. இரவில் நீண்ட தூரம் பார்க்கக்கூடிய சக்தி அவற் றுக்கு உண்டு. 49 வட ஆந்தைகளில் பல வகை உண்டு. அமெரிக்காவில்தான் உலகின் மிகப் பெரிய ஆந்தை இனம் உள்ளது. இதன் உயரம் மூன்று அடி. மிகச் சிறிய ஆந்தை வகையும் வட அமெரிக்காவில்தான் உள்ளது. இதன் உயரம் ஆறே அங்குலந்தான்! இந்தியாவில் பொதுவாக நான்கு வகை ஆந்தைகள் உண்டு. சிறிய உருவமும், மொட்டை மண்டையும் கொண்டது ஒரு வகை. இதைப் பகல் வேளையிலும் காண லாம். இதன் உடல் உருண்டையாயிருக் கும். கோட்டான் என்னும் ஆந்தை, காகத்தின் அளவு இருக்கும். இது பழைய கட்டடங்களில் காணப்படும். பெரிய பருந் தைப் போல ஒரு வகை ஆந்தை உண்டு. இதற்குப் பெருங்கூகை என்று பெயர். இது குகைகளில் வாழும். இதன் தலையில் இரண்டு பக்கத்திலும் கொம்புகளைப் போல இறகுகள் அமைந்திருக்கும். ஊமன் என் னும் ஆந்தை மிகப் பெரியது. பாறையும் நீரும் உள்ள இடங்களில் இது வாழும். ஆந்தையின் உணவு என்ன தெரியுமா? வண்டு, எலி, பல்லி, சிறு பறவைகள் ஆகியவைதாம். இரை சிறியதாக இருந் தால் ஆந்தை அதை அப்படியே விழுங்கி விடும். ஆந்தையின் சிறகுகளில் உள்ள இறகுகள் பட்டுப் போல மெத்தென்றிருக் கும். அதனால் இது ஒலி செய்யாமல் பறந்து வந்து இரையைப் பிடிக்கும். ஆந்தை புலாலுண்ணி வகுப்பைச் சேர்ந்தது. பயிர் களை அழிக்கும் எலிகளையும் பூச்சிகளையும் தின்பதால் ஆந்தை மனிதனுக்கு நன் மையே செய்கிறது. உலகில் எல்லா இடங் களிலும் ஆந்தைகள் காணப்படுகின்றன.