பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

ஆப்கானிஸ்தானம் - ஆப்பிரிக்கா

FT ரா ன 50 7 நிலக்கரி ஆப்கானிஸ்தானம்: ஆசியாக் கண்டத்தின் மத்திய பகுதியில் உள்ள ஒரு மலைநாடு ஆப்கானிஸ்தானம். இதன் பரப்பு 2,50,000 சதுர மைல். அளவில், தமிழ்நாட்டைப் போல ஐந்து மடங்கு பெரியது. ஆனால் மக்கள் தொகையில் பாதிகூட இல்லை. இங்குச் சுமார் 13 கோடி மக்களே வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தானத்தின் வட கிழக்கி லிருந்து தென்மேற்காக இந்து குஷ் என்ற ஒரு நீண்ட மலைத்தொடர் இருக்கிறது. மலைகள் நிறைந்திருப்பதால் இந்நாட்டில் ரெயில் பாதைகள் அமைக்க முடியவில்லை. ரெயிலே காணாத நாடுகளுள் இதுவும் ஒன்று. இங்கு கோடைகாலம் மிக வெப்பமாக வும், குளிர்காலம் அதிகக் குளிராகவும் இருக்கும். சிறுத்தை, ஓநாய், காட்டுப்பூனை முதலியன இங்கு வாழும் முக்கிய விலங்கு கள். இமாலயக் கரடிகளும் உள்ளன. தங் கம், வெள்ளி, இரும்பு, ஈயம், செம்பு போன்ற உலோக தாதுக்களும், எண்ணெய், நிலக்கரி முதலியனவும் இந்நாட்டில் மிகுதி யாகக் கிடைக்கின்றன. ஆனால் இவற்றை எடுத்துப் பயன்படுத்த இதுவரை முயற்சி ஏதும் நடைபெறவில்லை. ஆப்கானிஸ்தானம் இந்நாட்டில் ஈரானியர், துருக்கியர், மங் கோலியர் எனப் பல இனத்தவர் வாழ் கிறார்கள். எனினும் எல்லோருக்கும் ஆப் கானியர் என்றே பெயர். அனைவரும் இஸ் லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். புஷ்டு என்பது இந்நாட்டின் பொதுமொழி. இரும்பு 200 ஆப்கானிஸ்தானம்-ஆப்பிரிக்கா WIT காபூல் கைபர் கணவாய் பாக்கிஸ்தான் கம்பளி பருத்தி um ந கரும்பு மக்களில் வெகுசிலரே நகரங்களில் வாழ் கின்றனர். கிராமங்களில் வாழ்வோரே அதிகம். இவர்கள் பெரும்பாலோர் விவ சாயிகள். கோதுமை, பார்லி, புகையிலை, நெல், கரும்பு முதலியன பயிர் செய்கின் றனர்; பழத்தோட்டங்களும் மிகுதியாக உண்டு. இன்னும் பலர் நாடோடிகளாக வாழ்ந்துவருகின்றனர். ஆடு மேய்ப்பது இவர்களுடைய முக்கியத் தொழில். சமக் ஆப்கானிஸ்தானத்திலிருந்து காளம், ஆட்டுத்தோல், கம்பளம், பழங் ஆகியவை ஏற்றுமதியாகின்றன. காபூல் இந்நாட்டின் தலைநகர். கள் ஆப்பிரிக்கா: இருண்ட கண்டம் என்று எதைச் சொல்கிறார்கள் தெரியுமா? ஆப்பிரிக்காக் கண்டத்தைத்தான் அப் படிச் சொல்வார்கள். 19ஆம் நூற்றாண் டின் இறுதிவரை இக்கண்டத்தைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாமலே இருந் தது. உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டம் ஆப்பிரிக்கா. இது இந்தியாவிற் குத் தென்மேற்கில் உள்ளது. இதன் பரப்பு 117 இலட்சம் சதுர வடக்கில் மத்தியதரைக் கடலும், கிழக்கிலும் தெற் கிலும் இந்திய சமுத்திரமும், மேற்கில் அட்லான்டிக் சமுத்திரமும் ஆப்பிரிக்கா வைச் சுற்றி இருக்கின்றன. ஆப்பிரிக்கா வைச் சுற்றித் தீவுகள் அதிகம் இல்லை. மைல். ஆப்பிரிக்கா முழுவதிலும் உயரமான பீடபூமிகளும், மலைகளும் நிறைந்துள்ளன. கடற்கரை ஓரங்களில் மட்டும் குறுகலான சமவெளிகள் ஆங்காங்கு காணப்படுகின் றன. இக்கண்டத்தின் வடமேற்கில் ஆட் லெஸ் மலைத்தொடர் உள்ளது. கிழக்குப் பகுதியிலும் தெற்கிலும் பல மலைகள் இருக்கின்றன. ஆப்பிரிக்காவில் பெரிய ஆறுகள் பல ஓடுகின்றன. அவற்றுள் நைல் ஆறும், காங்கோ ஆறும் மிக முக்கியமானவை. நைஜர் ஆறு,சாம்பசி ஆறு, ஆரஞ்சு ஆறு இவை மற்ற முக்கியமான ஆறுகள். ஆப் பிரிக்காவில் மிகப் பெரிய ஏரிகள் சில உண்டு. அவற்றுள் முக்கியமானது விக் டோரியா ஏரி. இது ஒரு கடல் போலக் காட்சியளிக்கும். இக்கண்டத்தின் மத்திய பகுதியில் பூமத் திய ரேகை செல்கின்றது. உலகில் பூமத் திய ரேகை செல்லும் இடங்களிலெல்லாம் வெப்பமும், மழையும் அதிகம். இதனால் மத்திய ஆப்பிரிக்காவில் மிக அடர்ந்த காடு கள் செழித்து வளர்ந்துள்ளன. இப் பகுதியை அடுத்து வடக்கிலும் தெற்கிலும் பெரிய புல்வெளிக் காடுகள் பரந்து கிடக் கின்றன. ஆப்பிரிக்காவின் வடக்கிலும் தெற்கிலும் பாலைவனங்கள் இருக்கின்றன. வடக்கே உள்ளது சகாரா பாலைவனம்.