பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

ஆம்புலன்ஸ் - ஆமெசான் ஆறு

ஆபு கோயில் ஒன்றில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள்

டாக விளங்குகின்றன. இக்கோயிலின் கோபுரங்களும் அவற்றின் உள்ளே காணப் படும் சிற்பங்களும் அழகும், நுட்பமும் வாய்ந்தவை. ஆபு மலை ஒரு சுகவாசத்தலமும் ஆகும். இங்கு அதிக மழை பெய்கிறது. இதனால் காடுகள் செழித்து வளர்ந்துள்ளன. இள வேனிற் காலத்தில் பலவிதமான மலர் கள் பூத்துக் குலுங்கும். இவை நல்ல மணம் உடையவை; இந்த நறுமணம் பல மைல் தூரம் வீசுகிறது. இங்கு அழகான ஏரி ஒன்றும் உள்ளது. வில்லர் எனப்படும் பழங்குடி மக்கள் இங்கு வாழ்கிறார்கள். ஆம்புலன்ஸ்: மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளையும், விபத்தில் அடிபட்டவர்களையும் மருத் துவ மனைக்கு விரைவாக எடுத்துச் செல்வ தற்கான மோட்டார் வண்டி ஒன்று உண்டு. இந்த வண்டிக்குத்தான் ஆம்புலன்ஸ் என்று பெயர். இந்த வண்டியில் சிவப்பு நிறத் தில் சிலுவைக் குறி போடப்பட்டிருக்கும். மருத்துவமனைகள், தீ அணைக்கும் நிலையங்கள், நகராட்சிகள் ஆகியவற்றிலும் இந்த வண்டிகள் உண்டு. அவசர உதவி வேண்டுமென நாம் கேட்டால் அவர்கள் ஆம்புலன்ஸ் வண்டியை அனுப்பி வைப் பார்கள். ஆம்புலன்ஸ் வண்டியில் அவசர சிகிச் சைக்கு வேண்டிய முதல் உதவிப் பொருள் கள். மருத்துவக் கருவிகள், முக்கிய மருந்து ஆம்புலன்ஸ் வண்டி கள் முதலியன இருக்கும். காயமடைந் தவர்களுக்கு இவற்றைக் கொண்டு முதல் உதவி அளிப்பார்கள். அதிகமாகக் காய மடைந்தவர்களைப் பெரிய மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்வார்கள். பயன் பாரன் ஜீன் லாரி என்னும் பிரெஞ்சு நாட்டுப் போர்வீரர்தாம் முதன் முதலில் ஆம்புலன்ஸ் வண்டியை 1792-ல் படுத்தினார். போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களை எடுத்துச் செல்வதற்காக இந்த வண்டி முதன் முதலில் பயன்பட்டது. போர்க்களத்தில் ஆம்புலன்ஸ் வண்டியை யாரும் தாக்கக்கூடாது என்று ஒரு சர்வ தேசக் கட்டுப்பாடு உண்டு. ஆமெசான் ஆறு: உலகத்தில் மிகப் பெரிய ஆறு ஆமெசான் ஆறுதான். இது தென் அமெரிக்காக் கண்டத்தின் வட பகுதியில் பாய்கிறது. மிசிசிப்பி-மிசௌரி, நைல் ஆகிய இரண்டும் இதனைவிட நீள மான ஆறுகள்தாம்; ஆனால் அவை இரண் டிலும் பாயும் தண்ணீரைவிட ஆமெசானில் பாயும் தண்ணீரின் அளவு மிக அதிகம். ஆமெசான் ஆறு ஆண்டீஸ் மலைகளில் தோன்றி அட்லான்டிக் சமுத்திரத்தில் கலக்கிறது. இதன் நீளம் 4,000 மைல். இதற்குச் சுமார் 200 துணையாறுகள் உண்டு. பல இடங்களில் ஆமெசான் மிக அகலமாக உள்ளது; சமுத்திரத்தில் கலக்கு மிடத்தில் இதன் அகலம் சுமார் 150 மைல். இதன் ஆழமும் அதிகம். அதனால் பெரிய கப்பல்களும் ஆற்றின் முகத் துவாரத்திலிருந்து 3,000 மைல் தூரம் வரை உள்ளே செல்லுகின்றன. ஆமெசான் ஆற்றின் இரு கரைகளிலும் பெரிய காடுகள் உள்ளன. மரங்கள் மிகவும் உயர்ந்து, அடர்ந்து வளர்ந்திருக் கும். பகலிலும் காட்டில் ஒரே இருட்டாக இருக்கும். இதை இருண்ட வனம் என் கிறார்கள். இந்தக் காட்டிற்குள் செல்வது