பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமை - ஆயுதங்கள்

55


மிகவும் கடினம். இங்குள்ள பல இடங்களை இதுவரை யாரும் போய்ப் பார்த்தது இல்லை. ஆமெசான் காடுகளில் ஆதிக்குடிகள் (த.க.) வாழ்கின்றனர். இவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள். அன்னியர் வந்தால் கொன்றுவிடுவார்கள். காடுகளில் குரங்கு, கரடி, காட்டுப்பன்றி, பாம்பு, இராட்சதப் பல்லி, தேள் முதலியன மிகுதியாக உள் ளன. ஆற்றில் முதலைகளும், ஆமைகளும் அதிகம். பல்வேறு வகையான மீன்களையும் பார்க்கலாம். ஆமெசான் ஆற்றின் கரைகளில் சில நகரங்கள் உள்ளன . இவை ஒன்றுக் கொன்று அதிக தூரத்தில் அமைந்திருக் கின்றன. இந்நகர்களுக்கிடையே கப்பல் மூலம் வாணிகம் நடைபெறுகிறது. ஆமை: ஆமை மிக மெதுவாக நக ரும் பிராணி என்பதைக் கதைகளில் படித் திருப்பீர்கள். இது ஊர்வன (த.க.) இனத் தைச் சேர்ந்தது. இதற்குக் கவசம் போல் கனமான ஓடு உண்டு. இந்த ஓடு ஆமை யைப் பாதுகாக்கிறது. ஆபத்து வரும் போது ஆமை தன் தலை, கால்கள், வால் ஆகியவற்றை இந்த ஓட்டினுள் இழுத்துக் கொள்ளும். சிலவகை ஆமைகளுக்கு இந்த ஓட்டின் உட்புறத்தில் கதவுகளும் இருக் கும். தலை, கால்களை உள்ளே இழுத்துக் கொண்டபின் ஆமை இக்கதவுகளை மூடிக் கொண்டுவிடும்! ஆமைகளில் சுமார் 275 வகைகள் உண்டு. சில ஆமைகள் கடலில் வாழ்கின் றன; சில குளம் குட்டைகளிலும், நிலத் திலும் வாழ்கின்றன. ஆனால் எல்லா ஆமைகளும் நிலத்தில்தான் முட்டையிடு கின்றன. மண்ணில் குழிதோண்டி முட் டைகளை இட்டு மூடிவிட்டுத் தாய் ஆமை போய்விடும். சூரிய வெப்பத்தில் இந்த முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளி வருகின்றன. ஆமைகளுக்குப் பற்கள் கிடையாது. ஆனால் அதன் தாடைகள் தடித்துப் பற் களாக உதவுகின்றன. ஆமை பெரும்பாலும் சிறியதாக இருக் கும். ஓர் அடிக்கு மேல் அது வளர்வதில்லை. ஆனால் மூன்று, நான்கு அடி நீளம் வளரும் ஆமைகளும் உண்டு. நீரில் வாழும் சில ஆமைகள் 8 அடி நீளம் உள்ளவை. ஆமை கள் 120 ஆண்டுகளுக்கு மேலும் வாழும். ஆமை 55 உயிரினங்களில் அதிகக் காலம் வாழ்பவை ஆமைகளே. மேல் நாட்டில் சிலவகை ஆமைகளை விரும்பி வளர்க்கிறார்கள். ஆமை இறைச்சி உணவாகப் பயன்படுகிறது. ஆமை ஓட்டி லிருந்து சீப்புகள், சிறு பெட்டிகள், கண் ணாடி தாங்கிகள், புருசுக்கட்டைகள் முதலியன செய்கிறார்கள். ஆயுதங்கள்: ஆதிகாலத்தில் மக்கள் தங்கள் உணவுக்காக விலங்குகளை வேட் டையாட வேண்டியிருந்தது. காடுகளி லும், குகைகளிலும் வாழ்ந்த அவர்கள் கொடிய மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் வேண்டியிருந்தது. மேலும் அவர்கள் பகைவர்களோடு போரிடவும் நேர்ந்தது. ஆகவே அவர்கள் பலவகை ஆயுதங்களைச் செய்து கையாண் டார்கள். கற்கால மக்கள் கையாண்ட ஆயுதங்கள் ஆதி மக்கள் முதலில் மரத் தடிகளையும், கற்களையும் ஆயுதங்களாகப் பயன்படுத் தினர். கல், எலும்பு, உலோகம் இவற்றில் செதுக்கப்பட்ட தடிகளும் இருந்தன. இவற்றை விலங்குகள் அல்லது எதிரிகள் மீது எறிந்து நசுக்கிக் கொன்றனர். உலோகத்தாலான சில ஆயுதங்கள்