பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

ஆயுதங்கள் — ஆர்க்கிடு

விமான எதிர்ப்பு பீரங்கி

கள், துருப்பேற்றி ஈட்டி, கட்டாரி, வில், அம்பு போன்ற குத்துகின்ற ஆயுதங்கள் வேட்டைக்கும், போருக்கும் பயன்பட்டன. நீண்ட ஈட் டியை வேல் என்று சொல்வார்கள். கட் டாரி என்பது இரு பக்கமும் கூர்மை யுடையது. வில்லும் அம்பும் மிகப் பழங் கால ஆயுதங்களாகும். பறவைகளையும், சிறு விலங்குகளையும், மீன்களையும் நஞ்சு தடவிய அம்பு எய்து கொல்வதற்கு சுங் கத்தான் எனப்படும் நீண்ட குழாயைப் பயன்படுத்துகின்றனர். இதன் ஒரு முனை யில் அம்பைப் பொருத்தி, மறு முனையில் வாயினால் வேகமாக ஊதுவார்கள். வெட்டுவதற்குப் பயன்படும் ஆயுதங் களில் கோடரி, கத்தி, வாள் இவை முக் கியமானவையாகும். கோடரி இக்காலத் தில் மரம் வெட்டப் பயன்பட்டாலும் அக் காலத்தில் போரிடவும் உதவிற்று. கத்தி களில் பலவகை உண்டு. உலகின் எல்லா நாடுகளிலும் வாள் போர்க்கருவியாகப் பயன்பட்டு வந்தது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு துப் பாக்கி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் பழைய ஆயுதங்கள் பயனற்றுப் போயின. மிகவும் சக்தி வாய்ந்த பலவகைத் துப்பாக்கிகள் செய்யப்பட்டன. வெடி மருந்தைக் கொண்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், நீர்மூழ்கிக் குண்டு கள் போன்ற பல புதிய ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. பீரங்கிகள், டாங்கி கவச மோட்டார்கள் முதலியவை கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் அழிக் கும் சக்தியும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஆனால் அண்மையில் கண்டுபிடிக்கப் பட்ட அணுகுண்டு வகைகள் இதுவரை இருந்துவந்த ஆயுதங்களை எல்லாம் மிகச் சாதாரணமானவையாக்கிவிட்டன. ஓர் அணுகுண்டால் ஒரு பெரிய நகரையே அழித்துவிடலாம். இரண்டாம் உலக யுத் தத்தில் ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரு பெரும் நகரங்களை இரண்டே அணுகுண்டுகள் அழித்துவிட் கனரக டாங்கி டன. இவை தவிர, ஓரிடத்தில் இருந்து கிளம்பிப் பல்லாயிரம் மைலுக்கு அப்பால் உள்ள இடங்களையும் நாசமாக்கக்கூடிய பலவகைக் கொடிய ஏவுகணைகளும் இக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆர்க்கிடு: நாம் பல அழகான பூக்களைப் பார்த்திருக்கிறோம். ரோஜா, தாமரை, மல்லிகை போன்ற எத்தனை அழகான மலர்கள்! ஒவ்வொன்றும் ஒரு தனி அழகு! ஆனால் இவை எல்லாவற்றி லும் மிகமிக அழகான பூ ஒன்று உண்டு. அதுதான் ஆர்க்கிடு. பிற ஆர்க்கிடுகள் பொதுவாகச் சில மரங் களின்மீதுதான் வளர்கின்றன . அவை தாவரத்தின்மீது வளர்ந்தாலும், தங்கள் உணவைத் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன. எப்படி? ஆர்க்கிடுகளின் வேர்களில் மெல்லிய உறை ஒன்று உண்டு. இந்த உறை மழைத்துளி விழுந்தவுடன் அப்படியே அதை உறிஞ்சிக்கொள்ளும். ஆர்க்கிடுக்கு இப்படித்தான் நீர் கிடைக் கிறது. பின்பு காற்றையும், சூரிய ஒளியை யும் கொண்டு உணவு தயாரிக்கிறது. சில வகை ஆர்க்கிடுகள் நிலத்திலேயே வளர் கின்றன. இந்தியாவில் பல இடங்களில் காணப்படும் ஒருவகை ஆர்க்கிடு