பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

ஆர்க்டிக் வட்டம் - ஆர்மடில்லோ

58 கி.மு. 212-ல் சைரக்யூஸை ரோமானியர் கள் கைப்பற்றியபோது இவர் அவர்களால் கொல்லப்பட்டார். வட வட்டம் ஆர்க்டிக் வட்டம்: பூமியின் துருவத்தைச் சுற்றியுள்ள பகுதி ஆர்க்டிக் எனப்படும். பூமியின் தென் துருவம் நிலப்பரப்பாகும். அதற்கு அன் டார்க்டிகா (த.க.) என்று பெயர். ஆனால் வடதுருவமோ கடல் பகுதியாகும். ஆர்க் டிக் சமுத்திரம் என்பது இதன் பெயர். ஆர்க்டிக் சமுத்திரமும் இதனைச் சுற்றியுள்ள நிலப்பரப்புகளும் ஆர்க்டிக் வட்டம் எனப் படும். ஆர்க்டிக் வட்டம் குளிரான பிரதேசம். ஆனால் அன்டார்க்டிகாவில் இருப்பது போல அவ்வளவு குளிர் இல்லை. அன் டார்க்டிகாவில் காணும் அதிசயத்தை இங் கும் பார்க்கலாம். அதாவது, இங்கு அரை ஆண்டு பகலாகவும், அரை ஆண்டு இரவாக வும் இருக்கும்! ஆறு மாதம் சூரியன் வானத்தில் தொடர்ந்து தெரிந்து கொண்டே இருக்கும். அப்போது இரவு, பகல் என்பதே கிடையாது. பிறகு அடுத்த ஆறு மாதம் ஒரே இரவாக இருக்கும். சூரியனே தெரியாது. வியப்பாக இருக் கிறதல்லவா? ஆர்க்டிக் வட்டத்தில் பாதிக்கு மேல் புல்வெளிகள் உள்ளன. இவற்றுக்குத் தூந்திரப் பிரதேசம் என்று பெயர். புல் லும் சிலவகைப் பாசங்களுமே இங்கு காணப்படும் தாவரங்கள். கோடையில் பனி உருகும். அப்போது பல தாவரங்கள் முளைக்கும். பலவிதமான வண்ணப்பூக் களும் மலரும். இக்காட்சி அழகாக இருக் கும். பசிபிக் சமுத்திரம் ஆர்க்டிக் வட்டம் அலாஸ்க்க ஆர்க்டிக் சமுத்திரம் ஆர்க்டிக் வட்டம்-ஆர்மடில்லோ கிரீன்லாந்து கழக் வட்டம் அட்லான்டிக் சமுத்திரம் ரஷயர் ஐரோப்பா இங்கு மக்கள் அதிகமாக வாழ்வதில்லை. சிலரே வசிக்கின்றனர். இவர்களுள் எஸ்கி மோக்களும், லாப் இன மக்களும் முக்கிய மானவர்கள். வேட்டையாடுவதும், மீன் பிடித்தலும் இவர்களது தொழில்: கலை மான்கள், வெண்கரடி, குழிநரி, முயல் முதலியன இங்கு உயிர் வாழ்கின்றன. சீல்,வால்ரஸ், திமிங்கிலம் ஆகியவை நீரில் வாழ்கின்றன. மீன்கள் கிடைக்கின்றன. ஏராளமாகக் கோடைகாலத்தில் பல பறவைகள் இங்கு வரும். குளிர்காலத்தில் இங்கிருந்து அவை போய்விடும். பயனற்ற இடம் என்று ஒரு காலத்தில் ஆர்க்டிக் பகுதியைச் சொன்னார்கள். ஆனால் இங்குப் பல தாதுப் பொருள்கள் இருப்பதாக இன்று கண்டுபிடித்திருக்கிறார் பருவநிலை, காற்று மண்டலம் ஆகியவை பற்றி ஆராயப் பல சோதனை நிலையங்களை இங்கு விஞ்ஞானிகள் அமைத்து வருகிறார்கள். கள். ஆர்மடில்லோ: ஆர்மடில்லோ என்பது ஒரு சிறிய விலங்கு. குட்டிபோட் டுப் பாலூட்டும் இனத்தைச் சேர்ந்தது. தென் அமெரிக்காவிலும், வட அமெரிக்கா வின் தென் பகுதிகளிலும் மட்டுமே காணப் படுகிறது. ஆர்மடில்லோ பார்ப்பதற்கு ஒரு சிறிய பன்றி போலத் தோன்றும். இதன் உடல் முழுதும் செதில்கள் உள்ளன. எலும்புத் தகடுகள் போல உள்ள இவை கொம்புப் பொருளால் ஆனவை. இச்செதில்கள் ஆர்மடில்லோவுக்கு ஒரு கவசமாக உதவு கின்றன. ஆபத்து வரும்போது இவ்விலங்கு தன் தலை, கால்கள், வால் ஆகியவற்றை மடக்கி உள்ளுக்கிழுத்துக் கொண்டு பந்து போலச் சுருண்டு கொள்ளும். அப்போது சிறு பிராணிகளால் தீங்கு நேராது. ஆனாலும் இந்தக் கவசம் அவ்வளவு உறுதி யானது அன்று; பெரிய விலங்குகள் இதைக் கடித்துத் தின்றுவிடும். ஆர்மடில்லோ ஒரு சாதுவான விலங்கு. இதன் முகம் முன்னால் நீண்டிருக்கும். நாக் கும் நீளமானது. இதன் வாயில் பற்கள் நிறைய உள்ளன. பெரிய ஆர்மடில்லோ வுக்கு 100 பற்கள் வரை இருக்கும். காலில் நீண்ட கூர்மையான நகங்கள் இருக்கின் றன. இந்த விலங்கு பகலெல்லாம் வளை களில் தங்கியிருக்கும். இரவில்தான் வெளியே வந்து இரை தேடும். புழு, பூச்சி, நத்தை, வேர், பழம் ஆகியவை இதன் உணவு. சில ஆர்மடில்லோக்கள் ஐந்து அங்குல நீளமே இருக்கும்; சில மூன்று அடிக்கு மேலும் நீண்டு வளரும். ஆபத்து வரும் போது இவை வேகமாக ஓடிக் குழி தோண்டி அதில் மறைந்துகொள்ளும்.