பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

ஆரல் கடல் - ஆல்கா

முறையில் புதிய வகை ஆரஞ்சுகளை உண் டாக்குகிறார்கள். இவற்றுக்குக் கலப்பினங் கள் என்று பெயர். இந்தக் கலப்பினங்கள் அதிகப் பழங்களைக் கொடுக்கும். பழங் களின் சுவையும் அதிகம். ஒட்டு முறை மூலமும் புதிய ஆரஞ்சு இனங்களை உண் டாக்குகிறார்கள். இவை வடிவம், அளவு, மணம், இனிமை ஆகியவற்றில் வேறு படும். ஆரஞ்சுப் பூக்களிலிருந்து நறுமணப் பொருள்களைத் தயாரிக்கிறார்கள். பழத் தோலிலிருந்து ஒருவித எண்ணெய் எடுக் கிறார்கள். பழங்களிலிருந்து மதுபானமும் தயாரிக்கிறார்கள். ஆரஞ்சுப் பழத்தின் ஒரு வகைதான் சாத்துக்குடி.இதன் தோல் பழத்தின்மேல் ஒட்டிக்கொண்டிருக்கும். ஆரஞ்சுப் பழத் தின் நலன் யாவும் இப்பழத்திலும் உண்டு. நாரத்தையும் ஒருவகை ஆரஞ்சுதான். ஆனால் இது புளிக்கும். எனினும் இதி லிருந்து பழச்சாறு, மிட்டாய், மது முத தயாரிக்கிறார்கள். இதை ஊறு காய் போடுவதும் உண்டு. லியன ஆரல் கடல்: ஆரல் கடல் என் பது சோவியத் ரஷ்யாவின் தென்மேற் குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய ஏரி யாகும். இதன் நீர் உப்பாக இருக்கிறது. ஏரி பெரிதாகவும், நீர் உப்பாகவும் இருப்ப தால் இதைக் கடல் என்று சொல்கிறார் கள். காஸ்ப்பியன் கடல் (1,70,000 சதுர மைல்) என்ற உலகின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரிக்கு 150 மைல் கிழக்கே இந்த ஏரி உள்ளது. இதன் நீளம் 280 மைல்; அகலம் 130 மைல்; ஆழம் 225 அடி; இதன் மொத்தப் பரப்பு 26,000 சதுர மைல்களுக்கும் அதிகம். இக்கடலில் பல தீவுகள் உள்ளன. ஆமுதாரியா, சர் தாரியா என்னும் இரண்டு ஆறுகள் இதில் வந்து கலக்கின்றன. ஆரல் கடலில் மீன் கள் அதிகம். ஆல்கஹால்: உங்கள் பள்ளிக் கூடத்தில் விஞ்ஞானப் பரிசோதனைச் சாலை யில் சாராய விளக்கைப் (Spirit Lamp) பயன்படுத்துவதை நீங்கள் பார்த்திருப்பீர் கள். இந்த விளக்கை எரிப்பதற்கு எரி பொருளாகப் பயன்படும் சாராயம் ஒரு வகை ஆல்கஹால் ஆகும். ஆல்கஹாலில் பலவகை உண்டு. இது இயற்கையில் தனியாகக் கிடைப்ப தில்லை. பார்லி, சோளம், அரிசி போன்ற தானியங்களிலிருந்து சிலவகை ஆல்கஹால் கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றுக்குத் தானிய ஆல்கஹால்கள் அல்லது ஈதைல் ஆல்கஹால்கள் என்று பெயர். ஈதைல் ஆல்கஹால் நிறமற்ற திரவம்; நறுமணம் உள்ளது. ஒயின், பீர், விஸ்கி முதலிய மதுவகைகளில் இந்த ஆல் கஹாலைக் கலக்கிறார்கள். தண்ணீரில் கரையாத பல பொருள்கள் ஈதைல் ஆல் கஹாலில் கரையும். ஆகையால், மருந்து கள் தயாரிப்பதற்கு ஆல்கஹால் மிகவும் பயன்படுகிறது. வர்ணங்கள், சாயங்கள், வாசனைப் பொருள்கள், மெழுகுத்துணி போன்ற பல பொருள்களைச் செய்யவும் இது பயன்படுகிறது. ஈதைல் ஆல்கஹால் மிகமிகத் தாழ்ந்த வெப்பநிலையில்தான் உறையும். இதன் உறைநிலை -112°. எனவே, குளிர் மிகுந்த துருவப் பிரதேசங் களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வெப்ப மானிகளில் பாதரசத்திற்குப் பதில் ஈதைல் ஆல்கஹாலைப் பயன்படுத்துகிறார்கள். சில மரங்களிலிருந்தும் ஆல்கஹால் எடுக்கப்படுகிறது. இதற்கு மர ஆல்கஹால் அல்லது மீதைல் ஆல்கஹால் என்று பெயர். கார்பன்மானாக்சைடு, ஹைடிரஜன் ஆகிய வாயுக்களிலிருந்தும் மீதைல் ஆல் கஹாலைத் தயாரிப்பது உண்டு. இது நிறமற்ற திரவம். இது ஊதா நிறத்தில் கொழுந்துவிட்டு எரியும்; அப்படி எரியும் போது அதிக வெப்பம் உண்டாகும். எனவே இது சிறந்த எரிபொருளாகும். இக்காலத்தில் கார்களை ஓட்டவும், தொழிற் சாலைகளில் எஞ்சின்களை இயக்கவும் பெட் ரோலுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்து கிறார்கள். இது நஞ்சு மிகுந்தது. கிளிசரின் என்பதும் ஒருவகை ஆல் கஹால்தான். இது கனமான திரவம்; இனிப்பான சுவையுடையது. இதைச் சில உணவுப் பொருள்களிலும், பானங்களிலும் பயன்படுத்துகிறார்கள். ஆல்கா: குளம் குட்டைகளில் சில இடங்களில் காலை வைத்தால் வழுக்கி விட்டுவிடும். அங்குப் பாசி படர்ந்திருக் கிறது என்று சொல்வார்கள். சுவர், மரப் முதலியவற்றிலும் பாசி படர்ந்திருக்கும். இந்தப் பாசிக்கு ஆல்கா என்று பெயர். இது ஒருவகைத் தாவரம்.