பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலமரம் - ஆவியாதல்

63


விவசாயமும், ஆடுமாடு மேய்த்தலும் முக் கியத் தொழில்கள். இப்போது இந்நாட்டில் பல தொழிற் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் முற்றிலும் விவசாய நாடாக இருந்த நிலை மாறி வருகிறது. நாட்டின் தலைநகர் டிரானா. ஆலமரம்: இந்தியாவில் வளரும் மிகப் பெரிய மரங்களில் ஆலமரம் ஒன்று. ஆலமரங்கள் நூறு அடி உயரத்துக்கு மேலும் வளரும்; அவற்றின் அடிமரத்தின் சுற்றளவு 50 அடிக்கு மேல் இருக்கும். ஒரு பெரிய ஆலமரம் ஒரு தோப்பைப் போலவே இருக்கும். ஆலமரத்தின் கிளைகளிலிருந்தும் வேர் கள் இறங்கும். இவற்றுக்கு விழுதுகள் என்று பெயர். விழுதுகள் நீண்டு வளர்ந்து கீழே இறங்கித் தரையில் ஊன்றிவிடும். நாளுக்கு நாள் அவை பெரிதாக வளர்ந்து அடிமரத்தைப் பருத்துவிடு வதுண்டு. போலவே ஆலமரம் எப்படி முளைக்கிறது தெரியுமா? அது முளைப்பதே ஒரு விசித் திரந்தான். பறவைகள் ஆலம் பழங்களைத் தின்று, பனைமரத்தின் மீதோ, கட்டடங் கள் மீதோ எச்சமிடுகின்றன. எச்சத்துடன் வெளிவரும் ஆலம் விதைகள் அம்மரங்கள் மீதும், கட்டடங்கள் மீதும் விழுந்து முளைக் கின்றன. அவற்றின் வேர் வளர்ந்து, பருத்து, மரங்களையோ, கட்டடங்களையோ பின்னியணைத்துக் கொண்டு தரையில் இறங்குகிறது. காலப்போக்கில் ஆலமரத் துக்கு ஆதரவளித்த மரம் அல்லது கட் டடம் அழிந்து போய்விடுகின்றது. ஆலம்பழம் செக்கச் செவேலென்றிருக் கும். ஆலம் இலைகள் பசுமையாக இருக் கும். இதைத் தைத்து உண்கலமாகப் பயன் படுத்துகிறார்கள். ஆலமரத்தின் பலகை யைக் கொண்டு, பெட்டிகள், கதவுகள் செய்யலாம். முதலியவற்றைச் இளம் விழுதுகள் பல் துலக்க உதவும். ஆலம்பட் அடையாறு பிரம்ம ஞான சபையிலுள்ள ஆலமரமும் அதைத் தாங்கிநிற்கும் விழுதுகளும் 63 டையும், பாலும் மருந்துகள் செய்யப் பயன்படுகின்றன. இந்தியாவில் உலகப் புகழ்பெற்ற ஆல மரங்கள் பல உண்டு. கல்கத்தாவில் ஒரு பெரிய மரம் உள்ளது. அதற்குச் சுமார் 500 விழுதுகள் உள்ளன. சென்னையில், அடையாற்றங்கரையிலும் ஒரு பெரிய ஆல மரம் உள்ளது. ஆலமரங்கள் பல நூறாண் டுகள் செழித்து உயிர்வாழ்கின்றன. ஆவியாதல்: கொடியில் உலர்த் திய ஈரத்துணிகள் சிறிது நேரத்தில் உலர்ந்துவிடுகின்றன. அவற்றில் இருந்த ஈரம் (தண்ணீர்) எங்கே போய்விட்டது? அது ஆவியாக மாறிக் காற்றில் கலந்துவிட் டது. இவ்வாறு திரவ நிலையில் உள்ள ஒரு பொருள் வாயு நிலைக்கு மாறுவதைத்தான் ஆவியாதல் என்று கூறுகிறோம். குளிர்காலமாக இருந்தாலும், கோடை இருந்தாலும் ஈரத்துணிகள் உலர்ந்துவிடுகின்றன. ஆனால் ஒரு வித்தி யாசம். குளிர்காலத்தில் துணிகள் உலர நேரம் அதிகமாகிறது; கோடை காலத்தில் அவை விரைவில் உலர்ந்துவிடும். ஏனெனில் ஈரத்துணிகள் உலர அவற்றில் உள்ள நீர் ஆவியாக மாற வேண்டும். காலமாக வெப்பநிலை அதிகமாக இருந்தால் ஆவி யாதல் விரைவாக நடைபெறும். குளிர் காலத்தைவிடக் கோடை காலத்தில் வெப்பநிலை அதிகம் தானே ? மேலும், காற்று வீசினால் திரவம் விரைவாக ஆவி யாகும். இக் காரணத்தினால்தான் வசிக்கும் அறை ஈரமாக இருந்தால் சன்னல்களைத் திறந்துவைத்துக் காற்றாட விடுகிறோம். திரவம் ஆவியாக மாறும்பொழுது அருகில் உள்ள பொருள்கள் குளிர்ச்சி யடைந்துவிடும். நீர்நிலைகளில் உள்ள நீர் தொடர்ந்து ஆவியாகிக் கொண்டே இருக் கிறது. ஆகையால் நீர்நிலைகளின் சுற்றுப் புறங்கள் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கின்றன. குளித்தபின், உங்கள் உடம் பின்மேல் உள்ள ஈரம் காய்ந்தபின் (ஆவி யானபின்) உடல் குளிர்ச்சியாக இருப் பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். கோப்பையில் உள்ள காப்பியைவிடத் தட்டில் உள்ள காப்பி சீக்கிரம் ஆறிப் போகிறதல்லவா? காரணம் கோப்பையில் உள்ள காப்பியின் மேற்பரப்பு குறைவு. தட்டில் அதன் பரப்பு அதிகம். திரவத்தின் மேற்பரப்பு அதிகமானால் ஆவியாதல் விரைவாக நடைபெறும். நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாகிக் கொண்டே இருக்கிறது. அந்த ஆவிதான் மேலே வானத்தில் சென்று மேகமாக மாறிப் பிறகு குளிர்ச்சியடைந்து மழை யாகப் பெய்கிறது.