பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CE www கோடரி மீன் குர்னார்டு மீன் நண்டு மீன் பெருந்தாடை மீன் லாந்தர் மீன் கரு விழுங்கி மீன் செம்பொன் மீன் விரியன் மீன் பல ஆழ்கடல் மீன்கள்: கடலின் மேல் பகுதியில் மட்டுந்தான் உயிரினங்கள் வாழ் வதாக ஒரு காலத்தில் மக்கள் நம்பி வந் தார்கள். ஆனால் நீர்மட்டத்திற்குக் கீழே பல நூறு அடி ஆழத்திலும் ஏராளமான உயிரினங்கள் வாழ்வதாக இன்று தெரிய வருகிறது. இந்த உயிரினங்களுள் பெரும் பான்மையானவை பலவகை மீன்கள். இவற்றை ஆழ்கடல் மீன்கள் என்கிறோம். ஆழ்கடல் மீன்கள் தாம் வாழும் ஆழத் திற்கு ஏற்பப் பல்வேறு நிறங்களைக் கொண் டிருக்கின்றன. ஒளி எட்டும் ஆழத்தில் வாழும் மீன்கள் பெரும்பாலும் நீலம் அல் லது பச்சை நிறத்தில் உள்ளன. 600 அடிக்குக் கீழ் வாழும் மீன்களில் வெண்ணிறமும், சிவப்பு நிறமும் கொண் டவை. 1,000 அடிக்குக் கீழ் வசிக்கும் மீன் கள் பெரும்பாலும் கறுப்பாக இருக்கும். ஆழ்கடல் மீன்களில் பெரும்பாலானவை தம்மினுஞ் சிறிய மீன்களையோ வேறு பிராணிகளையோ பிடித்துத் தின்று வாழும் புலாலுண்ணிகள் ஆகும். ஆகவே, இரை யைக் கவ்விப் பிடிப்பதற்கு ஏற்றவாறு இவற்றின் வாய் பெரிதாக இருக்கிறது. சில மீன்களுக்கு நீண்ட வால் உண்டு. இவை இரையைத் தம் வாலினால் வளைத் துப் பிடித்துத் தின்னும். மற்றும் சில மீன் களுக்குப் பெரிய தாடைகளும், பற்களும் உண்டு. விரியன் என்னும் மீனுக்கு நீண்ட பற்கள் உள்ளன. இந்தக் காரணத் தால் இந்த மீன் வாயை மூடாமல் எப் பொழுதும் திறந்தவாறே வைத்திருக்கும்! இதன் பல்லும் கண்களும் இருட்டில் பளிச் சிடும். இந்த ஒளியின் உதவியால் ஆழ் கடல் இருளில் இது உலவி வருகிறது. இம் மீன் தன் அளவுள்ள பெரிய மீன்களையும் விழுங்கிவிடும். கருவிழுங்கி என்னும் இன் னொரு வகை மீன் தன்னைவிடப் பெரிய மீன்களையும் தின்றுவிடும்! இதற்குத் தக்க வாறு இதன் வயிறும் வேண்டிய அளவுக்கு விரிவடையக்கூடியதாக அமைந்திருக் கிறது. ஆழ்கடல் மீன்களில் பெரும்பாலன அழகில்லாதவை. எனினும் ஒரு அழகிய மீன்களும் உண்டு. வண்ணத்துப் பூச்சி மீன் என்பது தன் பெயருக்கேற்ப அழகிய வண்ணங்களும் விரிந்த உடலும் கொண்டது. இதன் உடலின் இருபக்கமும் ஐந்து வரிசை பளபளக்கும் கோடுகள் உள் ஆழ்கடல் மீன்களுக்குப் போதிய அளவு உணவு கிடைப்பதில்லை. மேலும், இம்மீன்கள் கடல் ஆழத்தில் தண்ணீரின் பெரும் அழுத்தத்தைத் தாங்க வேண்டி உள்ளன. ஆகவே, ஆழ்கடல் மீன்களில் பல சிறியவையாகக் காணப்படுகின்றன. ளன. கடலின் ஆழப்பகுதிகளில் வாழும் சிலவகை மீன்கள் சில