பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ஆறுகள் - ஆஸ்ட்டெக் நாகரிகம்

இந்த ஆறுகளைக் கிளையாறுகள் என் கிறோம். ஆற்றின் நீர் எந்தப் பகுதியி லிருந்து வடிந்து வருகிறதோ அந்தப் பகுதிக்கு வடிநிலம் என்பது பெயர். ஆற்று நீர் விரைந்து ஓடுவதற்கு நிலம் சரிவாக இருக்க வேண்டும். சரிவில் ஓடி வரும்போது ஆற்றுநீர் நிலப்பரப்பை அரித் துக் கொண்டே வரும். அரிக்கப்பட்ட பகுதி பள்ளத்தாக்கு எனப்படும். ஆற்று நீர் வேகமாக இருக்கும் இடத்தில் பள்ளத் தாக்கு ஆழமாக இருக்கும். ஆற்று நீர் மெதுவாக ஓடும் இடத்தில் பள்ளத்தாக்கு அகலமாக இருக்கும். சரிவு திடீரென அதிகமாகும்போது நீர்வீழ்ச்சிகள் உண் டாகும். ஆற்று நீர் பெரும்பாலும் கலங்கலாகவே இருக்கும். ஏனென்றால் மண் மிகுதியாகக் கலந்திருக்கும். ஆற்றுநீர், வேகம் குறைந்து மெதுவாகச் செல்லும்போது மண் ஆற்றின் அடியில் படிந்துவிடும். இதற்கு வண்டல் எனப் பெயர். வெள்ளம் பெருக்கெடுத்தால் ஆற்றுநீர் கரைகளை உடைத்துக்கொண்டு சமநிலங்களில் பாயும். வெள்ளம் வடியும்போது, நிலங்களில் வண்டல் மண் படியும். வண்டல் மண் படிந்த பகுதி மிகவும் செழிப்பாக இருக்கும். ஆறு கடலை அடையும் இடத்திற்குக் கழிமுகம் என்று பெயர். கழிமுகத்தில் வண்டல் மண் படிவதனால் ஏற்படும் செழிப்பான பகுதியைக் கழி முகத் தீவு என்பார்கள். சம உலகிலேயே மிக நீளமான ஆறு நைல் ஆறு. இதன் நீளம் 4,160 மைல். இது வடகிழக்கு ஆப்பிரிக்காவில் ஓடுகிறது. மிகப் பெரிய ஆறு ஆமெசான் ஆறு. இது தென் அமெரிக்காவில் ஓடுகிறது. இந்தியாவில் ஓடும் ஆறுகளை இமய ஆறு கள் என்றும், தீபகற்ப ஆறுகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய ஆறுகள் இமயமலையில் உண்டாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா இவை இமய ஆறுகளுள் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழைநீர் ஓடும்; கோடையில் பனிக்கட்டி உருகிக் கோடை காலத்திலும் இந்த ஆறுகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவ தால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறு கிறார்கள். தீபகற்ப ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உண்டாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, வையை, தாமிரபருணி முதலியவை தீபகற்ப ஆறு களுள் முக்கியமானவை. மிகப் பழைய நாகரிகங்கள் யாவும் ஆறுகளை ஒட்டியே வளர்ந்திருக்கின்றன. ஏனெனில், மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான பல பொருள்களும் ஆற்றங் கரைகளில் எளிதில் கிடைக்கின்றன. முக் கியமாக, ஆற்று நீர் குடிநீராகப் பயன் படுகிறது; நீர்ப்பாசனத்திற்கு உதவுகிறது. போக்குவரத்துக்கு ஆறு ஒரு சிறந்த துணை. உயரமான இடத்திலிருந்து விழும் நீரைக் கொண்டு பெரிய பெரிய சக்கரங்களைச் சுழற்ற முடியும்; இவ்வாறு சுழலும் சக் கரங்களால் எந்திரங்களை இயக்கி மின் சாரம் உற்பத்தி செய்ய முடியும் ஆற்று நீரில் மீன்கள் மிகுதியாகக் கிடைக்கும். கழிவுப் பொருள்களை ஆற்று நீர் அப்புறப் படுத்தும். இவ்வாறு ஆறுகள் பல வழி களில் பயனாகின்றன. கள் ஆஸ்ட்டெக் நாகரிகம். வட அமெரிக்காவில் மெக்சிக்கோ நாட்டில் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவகை அமெ ரிக்க இந்தியர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஆஸ்ட்டெக்குகள் என்று பெயர். இவர்கள் எங்கிருந்து மெக்சிக்கோ வுக்கு வந்தார்கள் என்பது தெரியவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவர் ஆசியாவிலிருந்து வந்து குடியேறி யிருக்கலாம் என்று கருதுகிறார்கள். இவர் களுடைய நாகரிகம் மிகவும் சிறப்பானது. தென் அமெரிக்காவில் சிறந்து விளங்கிய மாயா நாகரிகத்துக்கும் (த.க.) இதற்கும் ஒற்றுமைகள் உண்டு. அவர்களைப் போலவே ஆஸ்ட்டெக்குகளும் கோயில்கள் கட்டினர். மண்பாண்டங்கள் செய்யவும், துணி நெய்யவும், அணிகலன்கள் செய்ய வும், ஆஸ்ட்டெக்குகள் நன்கு அறிந்திருந் தனர். இவர்களுடைய மொழிக்கு எழுத்து கள் இல்லை. சித்திரங்கள் எழுதியே இவர் கள் தம் கருத்துகளை வெளியிட்டு வந் தனர். பறவைகளின் வண்ண வண்ணச் சிறகுகளைக் கொண்டு அழகான ஆடை களைச் செய்து அணிந்தனர். பல ஆஸ்ட்டெக்குகளின் கோயிலும் ஆஸ்ட்டெக் மக்களில் ஒருவனும் www. Assoon a za gong