பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக் கருவிகள் — இடி, மின்னல்

73

முரசு வயலின் கெட்டில் முரசு.

கிதார் wliip ஹார்ப் கார்னெட் இடி, மின்னல்: மழைக் காலத்தில் அடிக்கடி மின்னல் உண்டாவதையும், இடி இடிப்பதையும் நீங்கள் கவனித்திருக்க லாம். இடியோசை கேட்பதற்குச் சில விநாடிகளுக்கு முன் மின்னலை நாம் பார்த்துவிடுகிறோம். இடி உண்டாவதற்கே இந்த மின்னல்தான் காரணம். மழைக் காலத்தில் மேகங்களில் மின்சக்தி நிறைந்திருக்கும். சிலசமயங்களில் இரண்டு மேகங்கள் ஒன்றையொன்று நெருங்கி வரும்பொழுது ஒரு மேகத்திலிருந்து மின் சக்தி மற்றொரு மேகத்திற்குப் பாயும். அப் பொழுது கண்ணைப் பறிக்கும் ஒளி உண் டாகிறது. அதைத்தான் மின்னல் என் கிறோம். டிராம்போன் அத மின்னல் தோன்றும்போது அளவிட முடி யாத வெப்பமும் உண்டாகிறது. னால் மின்னல் உண்டாகும் இடத்தைச் சுற் றியுள்ள காற்று திடீரென்று சூடடைந்து, விரிவடைகிறது; மீண்டும் குளிர்ச்சியடை யும்பொழுது சுருங்குகிறது. இவ்வாறு மின்னலால் காற்று திடீரென்று விரிந்து சுருங்குவதால் ஏற்படும் ஒலிதான் இடி. இந்த ஒலி அருகில் உள்ள மேகங்களில் மோதிப் பல முறை எதிரொலித்தால் நீண்ட நேரம் தொடர்ந்து இடியோசை கேட்கும். இடியும் மின்னலும் ஒரே சமயத் தில்தான் ஏற்படுகின்றன. ஆனால் ஒலி (த.க.) அலைகளைவிட, ஒளி (த.க.) அலைகள் மிக வேகமாகப் பாய்வதால், இடியோசை கேட்குமுன்னரே நாம் மின்னலைப் பார்த்து விடுகிறோம். சில சமயங்களில் பூமிக்கு மிக அருகில் மின்னல் உண்டாகும். அப்பொழுது உயர மான கட்டடங்கள், மரங்கள் வழியாக மின்சாரம் பூமிக்குப் பாயும். இதனால் அந்த மரங்கள் வெப்பத்தால் எரிந்து கருகிவிடக்கூடும்; கட்டடங்கள் பழுதடைய யும். இதைத்தான் இடி விழுதல் என் டியூபா கொம்பு பியானோ கிறோம். மின்னல் உண்டாகும் சமயத்தில் மரங்களுக்கு அடியில் ஒதுங்கக்கூடாது. இடியினால் உண்டாகும் விபத்தைத் தடுப்பதற்காக உயரமான கட்டடங்களில் இடிதாங்கியை வைத்திருப்பார்கள். இடி விழும்போது உண்டாகும் மின்சக்தி முழு வதையும் பெற்று பூமிக்குள் செலுத்தும் ஓர் அமைப்புதான் இடிதாங்கி. இது, கட் டடத்தின் உச்சியிலிருந்து நேரே பூமிக்குள் 73 கட்டடங்களில் இடிதாங்கி அமைக்கப்படும் விதம். இடிதாங்கியின் மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் பெரிதாக்கித் தனித்தனி வட்டங்களில் காட்டப்பட்டுள்ளன.