பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இத்தாலி - இதயம்

74 செல்லும் ஒரு செப்புக் கம்பியாகும். இதன் மேல் பகுதி கட்டடத்தைவிடச் சிறிது உயரத்தில் இருக்கும். கீழ்ப் பகுதி ஒரு செப்புத் தகட்டுடன் இணைக்கப்பட்டு பூமிக்குள் ஈரமான பகுதியில் ஆழப் புதைக் கப்பட்டிருக்கும். இடிதாங்கியை 1752-ல் முதன் முதலில் அமைத்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அமெரிக்க விஞ்ஞானி யாவார். பார்க்க: பிராங்க்ளின், பெஞ்சமின். இத்தாலி: ஐரோப்பாவில் உள்ள மிகப் பழைய நாடுகளுள் இத்தாலியும் ஒன்று. இதன் பரப்பு 1,16,000 சதுர மைல். மக்கள் தொகை 4,90,00,000. இத்தாலி ஒரு தீபகற்பம். இதன் வடக்கில் சுவிட்ஸர்லாந்தும், கிழக்கில் ஏட்ரியாடிக் கடலும், தெற்கில் மத்தியதரைக் கடலும், மேற்கில் டிரீனியன் கடலும் உள்ளன. இதற்குத் தென்கோடியில் சிசிலித் தீவும், மேற்கில் சார்டீனியா, கார்சிக்கா ஆகிய தீவுகளும் அமைந்திருக்கின்றன. இத்தாலி யின் மத்தியில் அப்பினைன் மலைத்தொடர் வடக்கு தெற்காகச் செல்கின்றது. வட எல்லையில் ஆல்ப்ஸ் (த.க.) மலைத்தொடர் உள்ளது. தெற்கே சிசிலியில் எட்னா என்ற எரிமலை இருக்கிறது. லுள்ள நேப்பிள்ஸ் என்ற துறைமுகப்பட் டினத்தை அடுத்துள்ள வெசூவியஸ் என்ற எரிமலை என்றும் புகைந்துகொண்டே இருக் கும். கி.பி.79-ல் இது வெடித்து, பாம்ப் பியை என்ற நகரம் முழுவதையும் அழித்து விட்டது. சுவிட்லாலாந்தர 3ஆஸ்திரியர் பிரான்ஸ் ca ஜெனோவா சார்டீனியா நேப்பிள்ஸ்ட் மத்திய தரைக் கடல எந்திரங்கள் துணி வகைகள் ரோம் மோட்டார் வண்டி I ரசாயனப் பொருள்கள் கோதுமை 4 கந்தகம் இத்தாலி-இதயம் ஏட்ரியாடிக் கடல் யூகோஸ்லாவியா கோதுமை, பார்லி, ஓட்ஸ் ஆகியவை இங்கு பயிராகின்றன. திராட்சை, ஆரஞ்சு ஆகிய பழத்தோட்டங்களும், ஒலிவ மரங் களும் இங்கு ஏராளமாக உண்டு. சலவைக் கல்லும், கந்தகமும் கிடைக்கின்றன. சர்க் கரைத் தொழில், நெசவு, தந்தவேலை, சலவைக்கல் செதுக்கல் ஆகியவை முக்கியத் தொழில்கள். மேற்குக் கரையி ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் இத்தாலி நாட்டுப் பழைய லத்தீன் மொழிச் சொற்கள் ஆயிரக்கணக்கில் கலந் துள்ளன. இத்தாலிய மொழி மிகவும் இனி மையானது. இத்தாலிய ஓவியங்களும் சிற்பங்களும் உலகப் புகழ் பெற்றவை. இத்தாலியின் மிகப் பெரிய ஆறு போ என்பது. டைபர் என்ற மற்றோர் ஆற்றின் கரையில் இத்தாலியின் தலைநகரான ரோம் அமைந்துள்ளது. இயற்கை வனப்பில் சிறந்த ஏரிகள் சிலவும் இந் நாட்டில் உண்டு. ஜெனோவா, நேப்பிள்ஸ், பிரிண் டிசி, வெனிஸ், மிலான் ஆகியவை இந் நாட்டின் முக்கிய துறைமுகப்பட்டினங் கள். வெனிஸ் மிக அழகான நகரம். 3 மக்காச் சோளம் கூட்ட கப்பல் கட்டுதல் ஒலிவ களி * திராட்சை B பாதரசம் போ ஆற்றுச் சமவெளி மிகவும் செழிப் பானது. இங்கு மக்கள் நெருக்கம் அதிகம். பெரிய நகரங்கள் பல இங்கு உள்ளன. இங்குக் குளிர்காலத்தில் அதிக மழை பெய் யும். கோடையில் வறட்சி நிலவும். அப் போது ஆல்ப்ஸ் மலையிலிருந்து பனி உருகி. ஓடிவரும். தண்ணீரை வாய்க்கால்களில் திருப்பிப் பாசனத்திற்குப் பயன்படுத்து கின்றார்கள். இதயம்: உடலின் மிக முக்கிய மான உறுப்புகளில் இதயம் ஒன்று. இது மார்பின் நடுவில் சற்று இடதுபுறமாக உள்ளே அமைந்துள்ளது. உடல் முழுவதும் இரத்தத்தைச் (த.க.) செலுத்துவதுதான் இதயத்தின் வேலை. இது உங்களுடைய மூடிய கை அளவுதான் இருக்கும். இதயம் தானாகவே சுருங்கித் தானாகவே விரியும் தசைகளால் ஆனது. இது மார்பு எலும்புகளுக்கிடையே பாதுகாப்போடு அமைக்கப்பட்டிருக்கிறது. இதைச் சுற்றி லும் ஓர் உறை மூடியிருக்கும். இந்த உறைக் கும் இதயத்திற்கும் இடையில் ஒரு திரவம் இருக்கிறது. அதில் இதயம் மிதந்து கொண்டிருக்கிறது. இதனால் இதயத்தை எந்தவித அதிர்ச்சியும் பாதிக்காது. படத்தைப் பாருங்கள். இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன ; மேலறைகள் (Auricles) இரண்டு; கீழறைகள் (Ventric- les) இரண்டு. இரத்தம் மேலறையிலிருந்து கீழறைக்குச் செல்லும்; ஆனால் கீழறையி லிருந்து மேலறைக்குச் செல்லாது. இதற் காக, மேலறைக்கும் கீழறைக்கும் இடை யில் சிறு கதவுகள் இருக்கின்றன: இவற் றுக்கு 'வால்வுகள்' என்று பெயர். இதயத்