பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதயம்

75

நுரையீரல்கள், இதயம் வ.மே இ.மே வ.கீ கீ e உடலின் பலவேறு பகுதிகள் வால்வுகள் இதயம் இதயமும் இரத்த ஓட்டமும் தோடு இரத்தக் குழாய்கள் இணைந்துள்ள இடங்களிலும் இத்தகைய வால்வுகள் உள் ளன. வலது இனி, இதயம் எப்படி வேலை செய் கிறது என்று பார்ப்போம். முதலில், மேலறையிலிருந்து தொடங்கு வோம். உடலின் பலவேறு பகுதிகளி லிருந்து இரத்தம் வலது மேலறைக்கு வந்து சேருகிறது. மேலறைகள் சுருங்கும்போது வால்வு வழியாக இந்த இரத்தம் வலது மேலறையிலிருந்து வலது கீழறைக்குச் செல்கிறது. இப்போது கீழறைகள் சுருங்கு கின்றன. வலது கீழறையிலுள்ள இரத்தம் ஒரு குழாய் மூலம் நுரையீரல்களுக்குச் செல்கிறது. இந்த இரத்தத்தில் சேர்ந் துள்ள கார்பன் டையாக்சைடு நுரையீரல் களால் பிரிக்கப்படுகிறது; அத்துடன் இரத் தம் ஆக்சிஜனைப் (த.க.) பெற்றுச் சுத்த மடைகிறது.(நாம் மூச்சை உள் இழுக்கும் போது காற்றுடன் ஆக்சிஜன் கலந்து நுரையீரல்களுக்குச் செல்கிறது. மூச்சை வெளியே விடும்போது நுரையீரலிலுள்ள கார்பன் டையாக்சைடு வெளியேறுகிறது). நுரையீரல்களிலிருந்து சுத்தமான இரத் தம் வெளியேறி இதயத்தின் இடது மேலறைக்கு வந்து சேருகிறது. மேலறை கள் சுருங்கும்போது இரத்தம் இடது மேலறையிலிருந்து இடது கீழறைக்குச் செல்கிறது. மீண்டும் கீழறைகள் சுருங்கும் 75 போது இடது கீழறையிலுள்ள சுத்தமான இரத்தம் ஒரு பெரிய இரத்தக்குழாய் மூலம் இதயத்திலிருந்து வெளியேறுகிறது. இந்தப் பெரிய இரத்தக்குழாய் பல கிளை களாகப் பிரிந்து, உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் சுத்தமான இரத்தத்தை எடுத் துச் செல்கிறது. சுத்தமான இரத்தம் அவ் வப்பகுதிகளில் ஆக்சிஜனை விட்டுவிட்டு, எடுத்துக் கொண்டு மீண்டும் வலது மேலறைக்கு வந்து சேருகிறது. கார்பன் டையாக்சைடை இவ்விதம் இதயத்திலிருந்து இரத்தம் கிளம்பி மீண்டும் இதயத்துக்கு வந்துசேர எவ்வளவு நேரம் ஆகிறது தெரியுமா? இதற்காகும் நேரம் ஒரு நிமிடத்திற்கும் குறைவுதான். இதயத்துக்கு அருகி லுள்ள பகுதிகளுக்குச் சென்று வருவதற் கான நேரம் அதைவிடக் குறைவு! இதயத்தின் மேலறைகளும் கீழறை களும் மாறி மாறி ஓயாமல் சுருங்கி விரிந்து கொண்டே இருக்கின்றன. அதனால் மாறி மாறி ஏற்படும் ஓசைதான் ‘லப் ‘டப் என்று கேட்கிறது. இதைத்தான் இதயத் துடிப்பு என்கிறோம். இதயம் ஒரு நிமிடத் திற்குச் சாதாரணமாக 72 தடவை துடிக் கிறது. குழந்தைகளுக்கு அதிகமாகத் துடிக் கும். சில நோய்களால் இந்த எண்ணிக்கை மாறவும் கூடும். பொதுவாக இதயம் ஒரு நாளில் ஒரு லட்சம் தடவைக்கு மேல் துடிக்கிறது! இதயம் இரவும் பகலும் இடைவிடாமல் துடிக்கிறதே, இதற்குச் சற்றேனும் ஓய்வு இல்லையே என்று எண்ணிவிடாதீர்கள். மேலறைகளும் கீழறைகளும் மாறிமாறிச் சுருங்குகின்றன அல்லவா அப்போது அவற்றுக்கிடையில் சிறிது நேரம் இதயம் ஓய்வு பெறுகிறது. இதயத் துடிப்புகளைக் கைகளின் நாடி மூலம் பார்த்து மருத்துவர் நோய்களைக் கண்டறிவார். இந்த நாடித் துடிப்பு இதயத் துடிப்புதான். இதயத் துடிப்புக்கு ஏற்பத்தான் இரத்தக் குழாய்களில் இரத் தம் ஓடுகிறது. மருத்துவர் பல சமயம் ‘ஸ்டெதஸ்கோப்' எனும் கருவியை மார் பில் வைத்து இதயத் துடிப்புகளைக் கேட் பார். இதய நோய்களைக் கண்டறிவது முன்பு சிரமமாக இருந்தது. ஆனால் இப் போது மருத்துவத்துறை மிகவும் முன் னேறியுள்ளது. இதய நோயுள்ளவருடைய இதயத்தையே அகற்றிவிட்டு, வேறோர் இதயத்தை அவருக்குப் பொருத்தி உயிர் வாழச் செய்யப் பல நாடுகளில் பெரும் முயற்சி நடைபெற்று வருகிறது. விபத் தில் திடீரென்று இறந்த ஒருவருடைய தயத்தை உடனே எடுத்து, இதய நோயுள்ள மற்றொருவருடைய இதயத் திற்குப் பதிலாகப் பொருத்துவதுதான் இந்தச் சிகிச்சை.