பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

அச்சடித்தல்

தேவையான பித்தான்களை ஒவ் வொன்றாகத் தட்டுவார். வேண்டிய எழுத் துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்து வந்து ஓரிடத்தில் ஒரு வரியாக அமையும். ஒரு வரிக்குத் தேவையான எழுத்துக்கள் சேர்ந் ததும், அவை எந்திரத்தின் மற்றொரு பகுதியாகிய வார்ப்படப் பெட்டிக்கு நகர்ந்து செல்லும். அங்கு உள்ள உருகிய ஈயக் கலவை எழுத்துக்களின்மேல் பாய்ந்து ஆறும். பிறகு இந்த வார்ப்பட வரிகள் ஒன்றாகச் சேர்ந்து ஓர் அச்சுத் தட்டை அடையும். ஒரு லைனோ அச்சு எந்திரம் திறமை மிக்க ஐந்து தொழிலா னர்கள் செய்யும் வேலையைச் செய்து முடிக்கும். மானோ அச்சு எத்திரத்தின் அமைப் பும் கிட்டத்தட்ட &னே அச்சு எந்திரத் தின் அமைப்பையே ஒத்துள்ளது. ஆனால் இதில் எழுத்துக்கள் தனித்தனியாக வார்க் கப்படுகின்றன; வரிவரியாக அல்ல. அச்சடிப்பதற்குப் எந்திரங்கள் இருக்கின்றன. மணிக்கு 40,000 பிரதிகள் அச்சடிக்கும் எந்திரங் களும் உள்ளன. பலவகையான லித்தோ முறை: இம்முறையில் கல் அல்லது உலோகத் தகட்டில் எழுத்துகளை யும் படங்களையும் வரைந்து அச்சிடுவார். கள். இத்தகடுகளில் அச்சாக வேண்டிய பகுதிகள் மேடாகவோ தாழ்ந்தோ இல்லா மல் ஒரே சமமாக இருக்கும். கல் அல்லது உலோகத் தகட்டில் முதலில் எழுத்து களையும் படங்களையும் பிசுபிசுப்பான மையினால் வரைவார்கள். பின்னர். ஒரு மாற்று அச்சடிப்பு வகைக் கோந்து கலந்த அமிலக் கரைசலைக் கொண்டு இத்தகட்டைக் கழுவுவார்கள். எழுத்துகளும் படங்களும் உள்ள பிசுபிசுப் பான இடங்களைத் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் இந்த அமிலக் கரைசலின் படலம் உண்டாகும். இப்போது மை உருளையைத் தகட்டின்மேல் உருட்டினால், அமிலப் படலம் இல்லாத பிகபிசுப்பான பகுதி மட்டும் மையை உறிஞ்சிக்கொள் ளும்.அச்சு எந்திரத்திலுள்ள காகிதம் இத் தகட்டின்மேல் சுழலும்போது மையொட் டிக் கொள்ளுவதால் தகட்டில் உள்ள எழுத்துகளும் படங்களும் காகிதத்தில் விழும். மாற்று அச்சடிப்பு (Offset) : இக் குழந்தைகள் கலைக்களஞ்சியம் இம்முறை பார்கள். யில் அச்சடிக்கப்பட்டதுதான். சாதாரண எழுத்துக்களை முறையில் விளக்கியவாறு யும், படங்களையும் முதலில் அச்சடிப் அந்த அச்சுப்பிரதியைப் போட்டோ எடுப்பார்கள். போட்டோ பிலிமைக் கழுவினால், எழுத்துக்களும் படங்களும் பதிந்த இடங்கள் வெண்மை யாகவும், மற்ற இடங்கள் கறுப்பாகவும் காணப்படும். அந்தப் பிலிமை, ரசாயனப் பொருள்கள் பூசப்பட்ட ஒரு உலோகத் தகட்டின்மேல் பிடித்து அதன் வழியே சக்திவாய்ந்த ஒளியைச் செலுத்துவார்கள். பிலிமின் வெண்மையான பகுதிகள் வழி யாக மட்டுமே ஒளி ஊடுருவிச்சென்று உலோகத் தகட்டின்மீது விழும். ஒளிபடும் இடங்களில் உள்ள பொருள்கள் ரசாயன மாறுதல் அடைந்து தகட்டில் பதிந்து மாற்று அச்சடிப்பு எந்திரம்