பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இந்திய அரசியல் அமைப்பு

இந்திய அரசியல் அமைப்பு: ஒரு நாட்டின் குடிமக்கள் தத்தம் வாழ்க் கையை ஒழுங்காக இடையூறின்றி நடத்தி வர உதவுவது அந்நாட்டின் அரசாங்கம் (த.க.). இந்தியாவில் அரசாங்கத்தை அமைப்பதற்கும், அதை நடத்தி வருவதற் கும் விதிமுறைகளை வகுக்கும் ஒன்று உள்ளது. இதற்குத்தான் இந்திய அரசியல் அமைப்பு என்று பெயர். இது 1950 ஜனவரி 26-ல் நடைமுறைக்கு வந் தது. இது வழங்கும் அதிகாரத்தின் கீழ் தான் இந்திய அரசாங்கம் இப்போது செயல்பட்டு வருகின்றது. சட்டம் இந்தியா ஒரு குடியரசு. இதன் தலை வருக்கு ஜனாதிபதி என்று பெயர். இந்திய அரசியல் அமைப்பின்கீழ் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பு இவரிடம் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் டெல்லியிலிருந்து செயல்பட்டு வருகின்றது. முழுவதும் ஜனாதிபதிக்கு மூன்று அதிகாரங்கள் உண்டு. அவையாவன: 1 சட்டங்கள் செய்தல்; 2. சட்டங்களை நிறைவேற்றி வைத்தல்; 3. நீதியை நிலைநாட்டுதல். ஆனால் இம் மூன்று கடமைகளையும் ஜனாதி பதி தாமே செய்வதில்லை. அவருக்கு உதவி புரிய மூன்று நிறுவனங்கள் உண்டு. 1. நாடாளுமன்றம் : இது சட்டங்களை இயற்றுகின்றது. 2. மந்திரி சபை : இது சட்டங்களை நிறைவேற்றுகின்றது. 3. உச்ச நீதிமன்றம் : இது நீதியை நிலைநாட்டுகின் றது. ஜனாதிபதி நாட்டின் முப்படைகளின் தளபதியாகவும் இருப்பார். இது சபை நாடாளுமன்றம்: களைக் கொண்டது. ஒன்று மக்கள் சபை (கீழ் சபை), மற்றொன்று இராச்சிய சபை (மேல் சபை). மக்கள் சபையில் ஐந்நூற் றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள் ளனர். இவர்களை மக்களே நேர்முகமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இத்தேர்தல் ஐந் தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின் றது. பொதுவாக நாடாளுமன்றத் தேர் தலில் போட்டியிடுபவர்கள் அரசியல் கட்சி ஒன்றின் சார்பில் நின்றுதான் போட்டி யிடுவது வழக்கம். ஆனால் கட்சி சார்பில் லாத தனிப்பட்டவர்களும் போட்டியிடுவது உண்டு. இராச்சிய சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 250க்கு மேற்படாமல் இருக் கும். இவர்களில் ஒரு சிலரை ஜனாதிபதி நியமிப்பார். இவர்கள் கல்வி, கலை, விஞ் ஞானம், சமூகத்தொண்டு ஆகிய துறை களில் ஈடுபட்ட அறிஞர்களாக இருப்பர். மற்றவர்களை மாநிலங்களின் சட்டசபைகள் தேர்ந்தெடுக்கின்றன. மேல் சபை முழுதும் எப்போதும் கலைக்கப்படுவதில்லை. இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதி யினரின் பதவிக் காலம் இரண்டு ஆண்டு களுக்கு ஒரு முறை முடிவடையும். அவர் களுக்குப் பதில் புதிய உறுப்பினர்கள் நியமனம் பெறுவர் அல்லது தேர்ந்தெடுக் கப்படுவர். நாட்டின் ஆட்சிக்குத் தேவையான அதிகாரங்களை நாடாளுமன்றம் மந்திரி சபைக்கு வழங்குகின்றது. நாடாளுமன்றத் தின் இரு சபைகளிலுமே எந்தச் சட்டத் தைப் பற்றியும் ஆலோசனை செய்யும் தீர் மானங்கள் கொண்டு வரலாம். ஆனால் அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டங் களைப் பற்றிய எல்லாத் தீர்மானங்களையும் முதன் முதல் ஆலோசனை செய்ய வேண் டியது மக்கள் சபைதான். அர மந்திரி சபை: இந்த சபையின் உறுப் பினர்களான மந்திரிகள் அனைவரும் நாடாளுமன்றத்தின் இரு சபைகளில் ஏதேனும் ஒன்றின் உறுப்பினராக இருக்க வேண்டும். இதன் தலைவருக்குப் பிரதம மந்திரி என்று பெயர். ஏனைய மந்திரிகள் இவருடைய ஆணைக்கும், ஒழுங்குக் கட்டுப் பாட்டுக்கும் உட்பட்டவர்கள். நாட்டு அரசாங்கத்தின் பொறுப்பு முழுவதும் பிரதம மந்திரியிடம்தான் உள்ளது. சாங்கம் பல துறைகளாகப் பிரிக்கப்படுகின் றது. மந்திரிகள் ஒவ்வொருவரிடமும் சில துறைகள் ஒப்படைக்கப்படும். எனினும், மந்திரி சபைக்கு எல்லாத் துறைகள் பேரிலும் கூட்டுப் பொறுப்பு உண்டு. மக்கள் சபையில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அரசியல் கட்சியின் தலைவரையே நாட்டின் பிரதம மந்திரியாக ஜனாதிபதி நியமிக்கின்றார். பிரதம மந்திரிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் குறைந்துவிட்டால் மந்திரி சபையும் பதவியைவிட்டு விலகி விடும். உச்ச உச்ச நீதிமன்றம்: மத்திய அரசாங் கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடையே ஏதேனும் பூசல் ஏற்படலாம்; அல்லது இரு மாநில அரசாங்கங்களிடையே பூசல் தோன்றலாம்; அல்லது அரசாங்கத் துக்கும் தனிப்பட்ட ஒருவருக்கும் இடையே தகராறுகள் எழலாம். இவற்றை நீதிமன்றத்தில் விசாரணைக்கும், தீர்ப்புக்கும் எடுத்துச் செல்லலாம். உச்ச நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதி ஒருவர் இருப்பார். அவருக்குக் கீழ் மற்ற நீதிபதிகள் செயல் புரிகின்றனர். மாநிலங் களில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன் றங்களின் தீர்ப்புகள் சிலவற்றின் மேல் எழும் மேல்முறையீடுகளையும் (அப்பீல்) இந்த உச்ச நீதிமன்றம் விசாரணை செய் யும். மேலும், நாடாளுமன்றம் நிறைவேற் றும் சட்டங்கள் முறையானவையா, செல் லத் தக்கனவா என்று விசாரித்துத் தீர்ப்பு