பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இந்திய சமுத்திரம் - இந்திய சுதந்தரப் போராட்டம்

கூறும் முக்கிய பொறுப்பும் உச்ச நீதிமன் றத்திற்கு உண்டு. நாட்டில் அடிப்படை உரிமைகள் (த.க.) எல்லாக் குடிமக்களுக்கும் பொது வானவை. அவற்றில் அரசாங்கம் குறுக் கிடவோ, அவற்றைக் குறைக்கவோ மக்களின் இந்த அடிப்படை அரசாங்கம் பறிக்காமல் உச்ச நீதி பார்த்துக் கொள்ளுவதும் மன்றத்தின் கடமையாகும். இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு களான எல்லா மாநிலங்களிலும் அரசாங் கங்கள் மத்திய அரசாங்கத்தைப் போலவே அமைந்துள்ளன. அவற்றுக்கும் சட்டசபை யும் முதல் மந்திரியின் தலைமையில் மந்திரி சபையும் உண்டு; ஒவ்வொரு மாநிலத்தி லும் உயர் நீதிமன்றம் ஒன்று உண்டு. மத்திய அரசாங்கச் சட்டங்களுக்கு முரண் படாத வகையில் மாநில அரசாங்கங்கள் சட்டமியற்ற வேண்டும். மாநில அரசாங் கத்தின் ஆட்சித் தலைவருக்கு கவர்னர் என்று பெயர். மாநிலத்தின் நிருவாகம் இவருடைய பெயரிலேயே நடை.பெறுகின் றது. பாதுகாப்பு, ரெயில்வே, தபால் தந்தி, கப்பல்- விமானம் போக்குவரத்து இவை போன்ற துறைகள் மத்திய அரசாங்கத் தின் பொறுப்பில் உள்ளன. கல்வி, சுகா தாரம், காவல், சாலைப் போக்குவரத்து, மின்சாரம் இவை போன்ற துறைகள் மாநில அரசாங்கங்களின் பொறுப்பில் உள் ளன. பார்க்க : அரசாங்கம். முடியாது. உரிமைகளை உலகில் இந்திய சமுத்திரம் : உள்ள மிகப் பெரிய சமுத்திரங்களில் இந் திய சமுத்திரம் மூன்றாவதாகும். இதன் பரப்பு 2,83,56,000 சதுர மைல். ஆப் பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அன் டார்க்டிகா ஆகிய கண்டங்களுக்கு நடுவே இச்சமுத்திரம் உள்ளது. இச்சமுத்திரத் தின் வடகிழக்குப் பகுதி மிகவும் முடையது. இங்கு அதிக ஆழம் 25,000 ஆழ அடி. சிந்து, பிரம்மபுத்திரா, கங்கை, ஐராவதி, டைகிரிஸ், சாம்பசி முதலிய பெரிய ஆறு கள் இச்சமுத்திரத்தில் வந்து கலக்கின்றன. இலங்கையும் மலகாசியும் இந்த சமுத் திரத்தில் உள்ள மிகப் பெரிய தீவுகள். இவை தவிரப் பல நூறு தீவுகள் இதில் இருக்கின்றன. பம்பாய், கொழும்பு, ரங் கூன், சிங்கப்பூர், ஏடன் முதலியவை இந்த சமுத்திரத்தில் உள்ள மிகப் பெரிய வாணிகத் துறைமுகங்களாகும். ஐரோப்பா விற்கும் பல கிழக்கு நாடுகளுக்கும் இடையே இச்சமுத்திரத்தின் மூலந்தான் கடல் வாணிகம் நடைபெறுகிறது. கி.பி. 15ஆம் நூற்றாண்டில் கோ ட காமா (த.க.) என்ற போர்ச்சுகல் வாஸ் ஆப்பிரிக்கா அரேபியா. யா இந்திய சமுத்திரம் இந்திய சமுத்திரம் நாட்டினர் ஆப்பிரிக்காவைச் சுற்றி முதல் முறையாக இந்திய சமுத்திரத்தின் வழி யாக இந்தியாவுக்கு வந்தார். அதன் பிறகே இச் சமுத்திரத்தின் வழியாக ஐரோப்பியர் வாணிகம் செய்யத் தொடங் கினார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அராபியரும், இந்தியரும், சீனரும், ரோமானியரும் இச் சமுத்திரத் தின் வழியாகக் கப்பல் வாணிகம் செய் திருக்கிறார்கள் என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன. பல இந்திய சுதந்தரப் போராட்டம்: இந்தியா 1947-ல் சுதந்தரம் அடைந்தது. அதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட் பட்டு இருந்தது. இந்த அன்னிய ஆட்சியி லிருந்து விடுதலை பெறுவதற்காகப் ஆண்டுகள் இந்தியர் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றனர். இந்தப் போராட் டமே புதுமுறையானது. காந்தி அடி களின் தலைமையில் கத்தியின்றி ரத்தமின்றி அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டு நடந்தது. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர் வாணிகம் செய்ய இந்தியா வுக்கு வந்தனர் அப்போது இந்தியாவில் பல மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்தனர். வாணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள் போர்ச்சுகல், ஹாலந்து, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் செல்வ வளத்தைக் கண்டதும் நாட்டைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆஸ்திரேலியா