பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இந்திய மொழிகள் - இந்தியா

மராத்தியில் புகழ் பெற்ற நூல்கள் பல தோன்றின.தியானேஷ்வர், ஞானதேவர், முக்தேஷ், துக்காராம், வாமனபண்டிதர் ஆகியவர்கள் அரிய நூல்கள் பல எழுதி யுள்ளனர். தேஷ்பாண்டே, காண்டேகர் முதலியோர் புகழ் பெற்ற நாவல்களை எழுதியுள்ளனர். மலையாளம் தமிழிலிருந்து பிரிந்த ஒரு மொழி. ஆதியில் கேரளத்தில் தமிழ்தான் வழங்கி வந்தது. பிறகு சமஸ்கிருதச் சொற்கள் கலப்பினால் புதிய மலையாளம் பிறந்தது. இப்புதிய மலையாளத்தை உரு எழுத்தச்சன் வாக்கியவர் என்பார். குமாரன் ஆசானும், வள்ளத்தோள் நாராயண மேனனும் மலையாளத்தை வளஞ் செய்த சிறந்த இலக்கிய ஆசிரியர் கள் ஆவர். கன்னடம் ஒரு பழைய மொழி. தமிழுடன் தொடர்பு உடையது. ஆனாலும் இதில் சமஸ்கிருதச் சொற்கள் அதிகமாகக் கலந்துள்ளன. இதன் எழுத்துகள் தெலுங்கு எழுத்துகளைப் போல உள்ளன. இதில் சிறந்த இலக்கண நூல்களும், சமய நூல்களும், காவியங்களும், உரை நடை நூல்களும் எழுதப்பட்டுள்ளன. கன் னடத்தில் கிடைக்கும் மிகப் பழைய நூல் கவிராச மார்க்கம் என்பது. 9ஆம் நூற் றாண்டில் எழுதப்பட்டது. இது ஓர் இலக் கண நூல். பசவ புராணமும், பிரபுலிங்க லீலையும் சிறந்த சமய நூல்கள். புரந்தர தாசர் மிகவும் இனிய இசைப்பாடல்களை இயற்றியுள்ளார். இப்போது பல நாவல் கள் வெளிவந்துள்ளன. தெலுங்கும் தமிழுடன் நெருங்கிய தொடர்பு உடையது. எனினும் ஏராள மான சமஸ்கிருதச் சொற்கள் இதில் கலந் துள்ளன. சேதனர் என்பவர் முதன் முதல் இதற்கு ஓர் இலக்கணம் எழுதினார். ஸ்ரீநாதர் என்ற புகழ் பெற்ற கவிஞர் பல நூல்கள் எழுதியுள்ளார். பல இலக்கண நூல்களும் எழுதப்பட்டுள்ளன. இம் மொழியில் 1,200 சதகங்கள் உள்ளன. இவை யாவும் ஒழுக்கம், சமய தத்துவம் இவற்றை அடிப்படையாகக் கொண் டவை. வேமன்ன பத்தியங்கள் என்ற நூல் மிகவும் புகழ்பெற்றது. தெலுங்கின் வளர்ச்சிக்குப் பெரும் பணிபுரிந்தவர் விசய நகர மன்னர் கிருஷ்ணதேவராயர். தஞ் சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றி லிருந்த தியாகராஜ சுவாமிகள் இனிய பக்திப் பாடல்கள் பலவற்றைத்தெலுங்கில் பாடியுள்ளார். இந்த நூற்றாண்டில் தெலுங்கில் நாவல்களும், நாடகங்களும் ஏராளமாக வெளிவந்துள்ளன. தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றுக்குத் தனிக் கட்டுரைகள் உண்டு. உலகின் மிக பெரிய உயரமான சமவெளிகளையும் ஆறுகளையும், கொண் இந்தியா : மலைகளையும், செழிப்பான டது இந்தியா. இதற்குப் பாரதம் என்றும் பெயர். உலகத்தில் இது ஏழாவது பெரிய நாடு. ஆசியாவின் தென்பகுதியில் அமைந் துள்ள தீபகற்பங்களில் இந்தியாவும் ஒன்று. இந்நாட்டின் வட எல்லை இமயமலைத் தொடர். கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் இந்திய சமுத்திரமும், மேற்கில் அரபிக் கடலும் இந்தியாவைச் சூழ்ந்துள் ளன. இயற்கை அமைப்பு : இந்தியாவின் பரப்பளவு 12,20,099 சதுர மைல். நீர் வளமும் நிலவளமும் கொண்டது இந்நாடு. உழவுத் தொழிலுக்கு ஏற்ற நிலங்கள் இந்தியாவில் ஏராளமாக உண்டு. உலகில் இவற்றைவிட அதிகமான உழவு நிலங்களை யுடைய நாடுகள் ரஷ்யாவும் அமெரிக் காவுமே. இந்தியாவின் வட எல்லையான இமய மலைத்தொடரின் நீளம் சுமார் 1,500 மைல். உலகப் புகழ்பெற்ற உயர்ந்த சிகரங்கள் பல இதில் உள்ளன. இவற்றுள் மிகவும் உயரமானது எவரஸ்ட் சிகரம்; இதன் உயரம் 29,028 அடி. இது நேப் பாளம்-திபெத்து எல்லையில் உள்ளது. கஞ்சன்ஜங்கா, காமெட், தவளகிரி, நங்கபர்வதம், அன்னபூர்ணா, நந்தாதேவி, கைலாயம், கௌரி சங்கர் முதலியவை மற்ற முக்கியமான சிகரங் மகலு, ஹீராக்குட் அணை இது ஒரிஸ்ஸா மாநிலத்திலுள்ள மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய அணை. உலகிலேயே மிகவும் நீளமான அணையும் இதுதான். இதன் நீளம் 15,748 அடி. மண், கல், கான்கிரீட் மூன்றையும் கொண்டு கட்டப்பட்டது இந்த அணை.