பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியா

85

ஆண்டு முழுவதும் மழை பெய்யும். இங்கு ஓராண்டில் பெய்யும் மழையின் சராசரி அளவு 429 அங்குலம். உலகிலேயே மிக அதிகமாக மழை பெய்யும் இடம் இதுதான். ஆனால் தார் பாலைவனத்தில் ஓராண்டில் 4 அங்குலத்துக்கு மேல் மழை பெய்வதில்லை. கோடையில் அங்கு அனல் காற்று வீசும். இந்தியாவில் முக்கியமாக இரு பருவக் காற்றுகள் மழை பெய்யக் காரணமாயிருக் கின்றன. ஒன்று, தென்மேற்குப் பருவக் காற்று. இது ஜூன், ஜூலை மாதங்களில் வீசுகிறது. இதனால் தென்னிந்தியாவின் மேலைக்கரையோரம், இமயமலைச் சாரல், ஆசாம் மலைகள் ஆகிய பகுதிகளில் ஏராள மான மழை பொழிகிறது. மற்றொன்று, வடகிழக்குப் பருவக்காற்று. இது அக் டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வீசுகிறது. இது தென்கிழக்கு இந்தியா வுக்கு மழையைக் கொண்டுவருகிறது. 1961ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின்படி இந்தியாவின் மக்கள் தொகை 44 கோடி யாகும். மாநிலங்களிலும், மத்திய ஆட்சிப் பகுதிகளி லும் வாழும் மக்கள் தொகை கீழே கொடுக்கப் பட்டுள்ளது. மாநிலங்கள் ஆசாம் ஆந்திரப் பிரதேசம் உத்தரப் பிரதேசம் ஒரிஸ்ஸா குஜராத்து கேரளம் தமிழ்நாடு நாகாலாந்து பஞ்சாப், ஹரியானா பீகார் மகாராஷ்டிரம் மத்தியப் பிரதேசம் மேற்கு வங்காளம் மைசூர் ராஜஸ்தான் ஜம்மு-காச்மீரம் இந்தியா கோவா, டமான், டையூ டெல்லி 1,18,72,722 3,59,83,447 மத்திய ஆட்சிப் பகுதிகள் அந்தமான் - நிக்கோபார் தீவுகள் இமாசலப் பிரதேசம் இலட்ச-மினிக்காய்-அமிண்டிவிஸ் தாத்ரா, நகர் ஹவேலி திரிபுரா 7,37,46,401 1,75,48,846 2,06,33,350 1,69,03,715 3,36,86,953 3,69,200 2,03,06,812 4,64,55,610 3,95,53,718 3,23,72,408 3,49,26,279 2,35,86,772 2,01,55,602 35,60,976 தீவுகள் 24,108 6,26,978 26,58,612 57,963 11,42,005 புதுச்சேரி மணிப்புரி 3,69,072 7,80,037 வடகிழக்கு எல்லைப்புறப் பிரதேசம் 3,36,558 63,548 13, 51, 14 4 85 இந்திய மக்களில் பெரும்பாலார் விவசாயிகள். விவசாயி ஒருவன் வயலில் நெற்பயிர்களுக்கு உரமிடுவதைப் படத்தில் காணலாம். விளைபொருள்கள் : இந்தியாவில் காட்டுவளம் மிகுதி. மேற்குத் தொடர்ச்சி மலை, இமயமலைச் சரிவுகள், ஆசாம் மலைகள் இவற்றிலெல்லாம் அடர்ந்த காடுகள் உள்ளன. கட்டடங்களுக்கும், மரச் சாமான்கள் செய்யவும் பயன்படும் நல்ல மரங்கள் இக்காடுகளில் கிடைக்கின்றன. கடுக்காய், நெல்லி, சீயக்காய், சந்தனம் முதலானவை காட்டினின்றும் கிடைக்கும் சில விளைபொருள்களாகும். ஆசாமிலும், தென்னிந்தியாவிலும் மலைச்சரிவுகளில் தேயிலையும் காப்பியும் பயிராகின்றன. தென்னிந்தியாவில் ரப்பர், சின்கோனா மரங்கள் வளர்கின்றன. மிளகு, ஏலம், சாதிக்காய், இலவங்கம் ஆகிய நறுமணப் பொருள்களுக்குத் தென் னிந்தியா பெயர் பெற்றதாகும். இரண் டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே ஐரோப்பா விலிருந்து கிரேக்கரும், ரோமானியரும் இப்பொருள்களை நாடித் தமிழ்நாட்டுக்கு வந்து வாணிகம் செய்தார்கள். முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு போர்ச்சுகேசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கி லேயர் ஆகியோர் இந்தியாவுக்குள் அடி யெடுத்து வைத்ததும் இவற்றை வாங் கிச் செல்லுவதற்காகத்தான். எனவே, இந்திய வரலாற்றில் பல மாறுபாடுகள் நிகழ்வதற்குக் காரணமாக இருந்தவற்றுள் இந்நறுமணப் பொருள்களையும் ஒன்றாகக் கூறலாம். ஏராளமான இந்தியாவின் ஆற்றுச் சமவெளிகளில் உழவு நிலங்கள் உள்ளன. இந்திய மக்களில் 70 சதவிகிதத்தினர் விவ சாயிகள். ஆறு, குளம், ஏரி, கிணறு இவற் றின் நீரைப் பாய்ச்சி இவர்கள் பயிர்த் தொழில் செய்கிறார்கள். அரிசியும் கோதுமையும் இந்திய மக் களின் முக்கிய உணவு தானியங்கள். கங் கைச் சமவெளியில் கோதுமை பயிராகின் றது. கங்கை-பிரம்மபுத்திரா, மகாநதி,